Main Menu

SRM பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கை – முதல் நாள்

SRM பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கை – முதல் நாள் கலந்தாய்வு – CSC, ECE, Mech பிரிவுகளுக்கு மாணவர்களிடையே அதிக விருப்பங்கள்

SRM அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (SRMIST)
பல்வேறு பொறியியல் படிப்புகளுக்கு இந்த ஆண்டு நடத்திய (SRMJEEE) ஒருங்கிணைந்த பொறியியல் நுழைவுத் தேர்வு எழுத நாடு முழுவதிலுமிருந்து ஏறத்தாழ 1,72,585 மாணவர்கள் விண்ணப்பம் செய்திருந்தார்கள். இணையம் வழியான இந்தத் தேர்வு நாடு முழுவதும் 123 இடங்களிலும் மத்தியக் கிழக்கு நாடுகளில் 5 இடங்களிலும் ஏப்பிரல் 16 முதல் 30 வரை நடந்தது. உத்திரப்பிரதேசத்திலிருந்த 9061 மாணவர்கள், மகாராட்டிராவிலிருந்து 7,212 மாணவர்கள், தில்லியிலிருந்து 5,072 மாணவர்கள், மேற்கு வங்காளத்திலிருந்து 3,933 மாணவர்கள் உட்பட நாடு முழுவதுமிருந்து இந்தத் தேர்வுக்கு விண்ணப்பம் செய்திருந்தது SRMIST யின் புகழ் தமிழ்நாட்டுக்கு வெளியே நன்கு பரவியிருப்பதைக் காட்டியது.

இந்த நுழைவுத்தேர்வினை ஒட்டிப் பல்வேறு பொறியியல் பிரிவு படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு இம்மாதம் 11 முதல் 17 வரை கலந்தாய்வு நடக்கிறது. இந்தக் கலந்தாய்வு SRM அறிவியல் மற்றும் தொழில் நுட்பக் கல்வி நிறுவனத்தின் நான்கு வளாகங்கள், அரியானா மாநிலம் – Sonepet – SRM பல்கலைக்கழகம் மற்றும் ஆந்திரப்பிரதேசம் – அமராவதியிலுள்ள SRM பல்கலைக்கழகம் ஆகியவற்றில் உள்ள பொறியியல் படிப்புகளுக்குக் காட்டாங்குளத்தூர், SRM வளாகத்தில் நடக்கிறது. கலந்தாய்வின் முதல் நாளில் SRMIST வேந்தர் டாக்டர் தா. இரா. பாரிவேந்தர் மிகச்சிறந்த மாணவர்களுக்குக் கல்வி உதவித் தொகைக்கான ஆணைகளை வழங்கினார். இந்தத் தேர்வில் முதல் 100 இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு முற்றிலுமாகக் கல்விக் கட்டணத்தையும் விடுதிக் கட்டணத்தையும் தள்ளுபடி செய்யும் நிறுவனர் உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு உதவித் தொகைகளுக்கு அவர் ஆணை வழங்கினார்.
மேலும், SRMJEEE கல்வித் தர உதவித்தொகை, சமூக – பொருளாதார உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித் தொகை, பணியாளர்களின் பிள்ளைகளுக்கான உதவித்தொகை, SRM கலை மற்றும் பண்பாட்டு உதவித் தொகை, விளையாட்டு வீரர்களுக்கான உதவித் தொகை ஆகியவற்றுக்கும் அவர் ஆணை வழங்கினார்.

முதல் நாள் கலந்தாய்வின் முடிவில் பொதுவாக CSC, ECE, Mech. ஆகிய பாடப்பிரிவுகளுக்கு மாணவர்களிடையே அதிக விருப்பங்களைக் காணமுடிந்தது.






Related News

Leave a Reply

Visit Us On FacebookVisit Us On YoutubeVisit Us On Google PlusVisit Us On TwitterVisit Us On Linkedin