பந்தன் பேங்க் லிமிடெட் : ரூ. 10 முகமதிப்பு கொண்ட புதிய பங்குகள் வெளியீடு மார்ச் 15, 2018 ஆரம்பம்

சென்னை, மார்ச் 13, 2018: பந்தன் பேங்க் லிமிடெட் (Bandhan Bank Limited – the “Company” or the “Issuer”), வியாழக் கிழமை மார்ச் 15, 2018 அன்று 119, 280,494 சம பங்குகளை வெளியிட (the “Offer”) திட்டமிட்டுள்ளது. இதில், 97,663,910 சம பங்குகள புதிதாக வெளியிடப்படுகிறது. ஆஃபர் பார் சேல் மூலம் ஐஎஃப்சி 14,050,780 சம பங்குகளையும் ஐஎஃப்சி எஃப்ஐஜி 7,565,804 சம பங்குகளையும் (collectively, the “Selling Shareholders” and such Equity Shares offered by the Selling Shareholders, the “Offered Shares”) (“Offer For Sale”). விற்பனை செய்கிறது.
பங்கு ஏலம் / வெளியீடு மார்ச் 19, 2018 நிறைடைகிறது.
சம பங்கு ஒன்றுக்கு ரூ. 370 முதல் ரூ. 375 விலைப்பட்டை ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 40 பங்குகள் மற்றும் அதன் மடங்குகளில் விண்ணப்பிக்க வேண்டும்.
இந்தச் சம பங்குகள் மார்ச் 7, 2018 அன்று தேதியிட்ட பங்கு வெளியீட்டு ஆவணத்தின் அடிப்படையில் வெளியிடப்படுகிறது. இந்தப் பங்குகள் பிஎஸ்இ மற்றும் என்எஸ்இ பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட இருக்கிறது.
இந்தப் பங்கு வெளியீட்டின் முன்னணி மேலாளர்களாக (BRLMs) கோட்டக் மஹிந்திரா கேப்பிட்டல் கம்பெனி லிமிடெட், ஆக்ஸிஸ் கேப்பிட்டல் லிமிடெட், கோல்டுமேன் சாக்ஸ் (இந்தியா) செக்யூரிட்டீஸ் பிரைவேட் லிமிடேட், ஜேஎம் ஃபைனான்சியல் லிமிடெட், ஜே.பி. மார்கன் இந்தியா பிரைவேட் லிமிடெட் போன்றைவை உள்ளன. கார்வி கம்ப்யூட்டர்ஷார் பிரைவேட் லிமிடெட், இந்த வெளியீட்டின் பதிவாளர் (the registrar to the issue) .ஆக உள்ளது.
நிறுவனத்தின் பங்கு மூலதனத்தில் (Equity Share capital) குறைந்தபட்சம் 10% பொது மக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்தியப் பங்குச் சந்தையை நெறிப்படுத்தும் செபி அமைப்பின் விதிமுறைகளுக்கு உட்பட்டு இந்தப் பங்கு ஏல முறையில் ( Book Building Process) விற்பனை செய்யப்படுகிறது. மொத்தம் விற்பனைக்கு உள்ள பங்குகளில், 50 சதவிகிதத்துக்கு மேற்படாமல் தகுதி வாய்ந்த நிறுவன முதலீட்டாளர்களுக்கு (Qualified Institutional Buyer – QIB)ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதில், கியூஐபி முதலீட்டாளர்கள் பிரிவில் 5 சதவிகிதம் மட்டும் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு ஒதுக்கப்படுகிறது. மேலும், 15 சதவிகிதத்துக்கு குறையாத பங்குகள் நிறுவனம் சாரா முதலீட்டாளர்களுக்கு (Non-Institutional Bidders) வழங்கப்படுகிறது. சிறு முதலீட்டாளர்களுக்கு (Retail Individual Bidders) 35%க்கு குறையாமல் பங்குகள் விற்பனை செய்யப்படுகிறது,
அனைவருக்கும் அஸ்பா (ASBA – Applications Supported by Blocked Amount) முறையில் பங்குகள் விற்பனை செய்யப்படும். இந்த முறையில் பங்குகள், ஒதுக்கீடு செய்யப்பட்டால் மட்டுமே முதலீட்டாளர்கள், வங்கி கணக்கிலிருந்து (SCSB) பணம் எடுக்கப்படும். அதேநேரத்தில், விண்ணப்பத்துக்கான தொகை வங்கி கணக்கில் முடக்கி (Blocked) வைக்கப்பட்டிருக்கும்.
Related News

TVS, Otto, MRF are City’s First Three in All-India list; City sees Reducing Inclusions among All-India Most Trusted
Chennai, April 19, 2018: The most comprehensive study on Brand Trust in the country—TRA’s India’sRead More

Luxury Holiday in Beverly Hills
Luxury Holiday in Beverly Hills Holidays is all about indulging and having a galaRead More
Comments are Closed