பொருள் வேதியியலில் அண்மைக்கால முன்னேற்றங்கள் குறித்த பன்னாட்டு மாநாடு – 2018 (ICRAMC – 2018)

பொருள் வேதியியலில் அண்மைக்கால முன்னேற்றங்கள் குறித்த பன்னாட்டு மாநாடு – 2018 (ICRAMC – 2018)

எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் வேதியியல் துறை மாற்று ஆற்றல்கள் மற்றும் அணு ஆற்றல் ஆணையத்தின் (CEA – பிரான்சு) மற்றும் IRD (இந்தியா) ஆகியவற்றுடன் இணைந்து 14.02.2018 முதல் 16.02-2018 வரை பொருள் வேதியியலில் அண்மைக்கால முன்னேற்றங்கள் குறித்த 2-வது பன்னாட்டு மாநாட்டை நடத்தியது. இம்மாநாட்டின் கருத்து பொருள் வேதியியலில் அண்மைக்கால முன்னேற்றங்கள் குறித்தும் உலக தேவைக்கான புதுமைப் பொருள்களை வளர்ச்சிக்கு புதிய செயல் உத்திகள் காண்பதற்கும் ஆனது.
தொடக்க விழா, எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் காட்டாங்குளத்தூர் வளாகத்தில் முனைவர் தி.பொ. கணேசன் அரங்கில் 14.02.2018 அன்று நடந்தது. தேசிய அங்கீகார மதிப்பீட்டுக் குழு (NAAC) செயலாண்மை ஆணையத்தின் தலைவர் பேரா.வீரந்தர் சிங் சௌகான் தலைமை விருந்தினராக பங்கேற்று மாநாட்டை தொடங்கிவைத்தார்.
எஸ்.ஆர்.எம். கல்வி குழுமத்தின் நிறுவனர் வேந்தர்
டாக்டர் தா. இரா. பாரிவேந்தர் விழாவிற்கு தலைமையேற்று சிறப்புரையாற்றினார். அறிவியல் புலத்தலைவர் முனைவர்
தா. ஜான் திருவடிகள், தலைமை விருந்தினரை அறிமுகப்படுத்தினார். இந்த மாநாட்டின் அமைப்பாளர் முனைவர் ம. அர்த்தநாரீசுவரி வரவேற்புரையாற்றினார். மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் கே.அனந்தநாராயணன் நன்றி நவின்றார்.
தலைமை விருந்தினர் பேரா. வீரேந்திர சௌகான், மாநாட்டை தொடங்கி வைத்து மாற்று எரிசக்தி ஆற்றல் ஆய்வு தொடர்பாக மிகச் சிறப்பான உரையை நல்கினார்.
மேலும் அவர், துறைகளுக்கிடையான ஆராய்ச்சிகளின் முக்கியத்துவத்தையும் அறிவியலில் மிகச் சிறந்த ஆராய்ச்சி விவாதங்களையும் அறிவியல் முன்னேற்றங்களுக்கு சிந்தனை மாற்றங்களின் முக்கியத்துவத்தையும் விளக்கிப் பேசினார்.
சமூக நோக்கங்களுக்காக மாணவர்கள் அடிப்படையான வினா எழுப்புதலை எழுப்பி ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.
எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் கல்விக் குழும நிறுவனர் வேந்தர் முனைவர் தா.இரா. பாரிவேந்தர் தலைமையுரை ஆற்றும்போது, இந்த மாநாடு மிகச் சிறந்த கருத்துக்களை பகிர்ந்துகொள்வதற்கு சிறந்த மேடையாக இருக்கிறதென்று கூறி, மாநாடு வெற்றிபெற வாழ்த்தினார்.
வேதியியல் துறை அடிக்கடி இத்தகைய மாநாடுகளை நடத்தி அத்துறையில் மிகச்சிறந்த முன்னேற்றங்களை குறித்து பகிர்ந்துகொள்ள வேண்டுமென்றும் கருத்துரைத்தார்.
நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் வேதியியல் என்பது ஒரு மிகச்சிறந்த பங்களிப்பினை நல்குகிறது என்கிற முக்கியத்துவத்தை குறிப்பிட்டார். மேலும், ஆல்பர்ட் நோபெல் அவர்களுடைய வேதியியல் ஆராய்ச்சி இல்லையென்றால் நோபல் பரிசும் இன்றைக்கு நிலவியிருக்காது என்றும் கூறினார். இதன்பிறகு, அவர், சிறப்பு அழைப்பாளர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கினார்.
ஜெர்மனி பி.எம்.டி.ஐ.யிலிருந்து வந்திருந்த பேரா. டாக்டர். இங்க் ஜென்ஸ் ஊசைன், பிரான்சு CEA முனைவர் எரிக் டோரிஸ் மற்றும் தென்கொரியாவிலுள்ள யுங் இ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜங் ஊ லீ ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். இவருடைய முக்கியமான கருத்தாக அறிவியல் என்பது வினாக்கள் எழுப்புவதும் அவற்றுக்கு விடை காண்பதும் ஆகும் என்பதாக இருந்தது. மேலும், நாடுகளுக்கிடையே கருத்துப் பரிமாற்றத்திற்கும், செயல் ஒத்துழைப்புகளுக்காகவும் அவர்கள் இந்த மாநாட்டை வாழ்த்தினார்கள்.
இந்த மாபெரும் தொடக்க விழாவிற்குப் பிறகு, இந்த மாநாடு தொழில் நுட்பப் பிரிவுக்கு அமர்ந்தது. இந்த மாநாடு உலகம் முழுவதிலுமிருந்து வந்துள்ள ஆராய்ச்சியாளர்களை கொண்டு 12 அமர்வுகளில் நடக்கும். இவர்கள் அனைவருமே பொருள் வேதியியல் துறையிலும் அதனுடன் தொடர்புடைய பிற பல துறைகளிலும் வல்லுநர்கள் ஆவார்கள். அவர்கள் ஜெர்மனி பி.எம்.டி.ஐ.யிலிருந்து வந்திருந்த பேரா. டாக்டர். இங்க் ஜென்ஸ் ஊசைன், பிரான்சு CEA முனைவர் எரிக் டோரிஸ் தென்கொரியாவிலுள்ள
யுங் இ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜங் ஊ லீ சென்னை தோல் ஆராய்ச்சி நிறுவனத்தின் முனைவர் பி. சந்திரசேகரன், பிரான்சு சி.ஏ.விலிருந்து முனைவர் டேவிட் அடிசியோ, முனைவர் எட்மண்ட் க்ராவல், முனைவர் ஃபெடரிக் தரண், பிரான்சு, பாரிசு பல்கலைக்கழகப் பேராசிரியர் மஜ்தி ஆச்சுலர், தென்கொரியாவிலுள்ள டி.ஜி.ஐ.எஸ்.டி-யைச் சேர்ந்த
பேரா. சங்கர்ராசு சண்முகம் மற்றும் சீனாவின் ஜங் சு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் எம். செல்வராசு ஆகியோர் ஆவார்கள்.
இந்த மாநாட்டிற்கான 300 ஆராய்ச்சிக் கட்டுரைகள் மெட்ரியல் டுடே புரொசிடிங்சு எல்சிவரில் வெளியிடப்படும். மாநாட்டினுடைய பல்வேறு சிறப்புரைகளையும் விளக்கக் காட்சிகளையும், வாய்மொழி கருத்துரைகளையும் இந்த மாநாடு சிறப்புத்தன்மைகளாக பல்வேறு பிரிவுகளில் கொண்டிருக்கும்.
இந்திய தலைமை அமைச்சர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களும் இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் மாண்புமிகு எம். வெங்கைய்யா நாயுடு அவர்களும் இந்த மாநாடு வெற்றிபெற வேண்டுமென்று வாழ்த்துகின்ற தங்களுடைய வாழ்த்துரைகளைத் தெரிவித்திருந்தனர்.






Related News

Leave a Reply

Visit Us On FacebookVisit Us On YoutubeVisit Us On Google PlusVisit Us On TwitterVisit Us On Linkedin