இலக்கியப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

   (ஜனவரி 10, 2018) நிறைவுப் பெற்றது.  சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள கல்லூரிகளிலிருந்து இலக்கியப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற இந்த நிறைவு விழாவில் காவல் துறை கூடுதல் இயக்குநர் திரு.சைலேந்திர பாபு இ.க.ப. அவர்கள் முதன்மை விருந்தினராக பங்கேற்று சிறப்பித்தார். எத்திராஜ் கல்லூரி அறக்கட்டளையின் தலைவர் திரு.முரளிதரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

பல்வேறு இலக்கியவாதிகளின் உரைகளும், கலை பண்பாட்டு நிகழ்ச்சிகளும் இந்த நிறைவு விழாவுக்கு சிறப்பு சேர்ப்பனவாக அமைந்தன. சென்னை இலக்கிய திருவிழா அமைப்பின் தலைவர் திரு.குமாரவேல், செயலாளர் திரு.சுதாகர், முன்னாள் தலைவர் திருமதி. லதா ராஜன், நிறுவனர் திரு.ஒளிவண்ணன் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். 
சென்னை இலக்கிய கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இவ்விலக்கியத் திருவிழா கடந்த ஜனவரி 8, 2018 அன்று சென்னை பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் திரு.துரைசாமி அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. தொடக்க நாளன்று பல்கலைக்கழக மாணவர்கள் ஆங்கில நாடகம் ஒன்றினை நடித்து சிறப்பித்தனர். 
ஜனவரி 9, 2018 அன்று நடைபெற்ற இரண்டாம் நாள்  விழாவில் 2500 கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற 21 பட்டறை பயிற்சிகளும், கருத்தரங்குகளும் நடைபெற்றன. இப்பயிற்சி பட்டறைகள் மாநகரின் 16 கல்லூரிகளில் நடைபெற்றன. கணினி வழி இலக்கியம் (Digital Literature) என்ற தலைப்பில் புனித தாமஸ் கலை, அறிவியல் கல்லூரியிலும், இதழியல் எழுத்து (Jounalistic Writing) என்ற தலைப்பில் லயோலா கல்லூரியிலும், இந்தியாவில் ஷேக்ஸ்பியர் (Shakespeare in India) என்ற தலைப்பில் சென்னை கிறித்துவ கல்லூரியிலும், திரைக் கலையும் இலக்கியமும் என்ற தலைப்பில் பச்சையப்பன் கல்லூரியிலும் பயிலரங்குகள் நடைபெற்றன. 
“கடந்த 4 ஆண்டுகளில் வெற்றிகரமாக நடைபெற்ற இவ்விழாவின் தொடர்ச்சியாக இந்த ஆண்டும் இளம் மாணவர்கள் மிக அதிக அளவில் இப்போட்டிகளில் பங்கேற்றது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. மென் ஊடகத்தின் தாக்கத்திற்கு உட்பட்ட இன்றைய சூழலில் இத்தகைய மாணவர்களின் பங்கேற்பு பாராட்டத்தக்கது. மேலும் மேலும் புத்தகங்களை படித்து அந்த இன்ப அனுபவத்தை பெற்று வாழ்வின் விழுமியங்களை பெறுவோரின் எண்ணிக்கை பெருக வேண்டும் என்பதே சென்னை இலக்கிய திருவிழாவின் நோக்கமாகும்” என்று திரு.குமாரவேல் தெரிவித்தார்.
இவ்விலக்கியத் திருவிழாவின் முன்னோட்டமாக பல்வேறு இலக்கிய நிகழ்ச்சிகள் டாக்டர்.எம்.ஜி.ஆர் ஜானகி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் டிசம்பர் 9, 2017 அன்று நடைபெற்றன. இவற்றில் சென்னை மற்றும் பெங்களூரு மாநகரங்களைச் சேர்ந்த 1500-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர். படம் பார்த்து கதை எழுதுதல், வினாடி வினா (தமிழிலும், ஆங்கிலத்திலும்), தனி நடிப்பு, கதை எழுதுதல், நாடக நடிப்பு, கதைப் பாட்டு (Sing a Story), பாடல் இயற்றுதல், பேச்சுப் போட்டி, எழுத்தாளரை அடையாளம் காணுதல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் மாணவர்கள் தங்கள் தனித் திறன்களை வெளிப்படுத்தினர்.  
இவ்விலக்கியத் திருவிழாவின் இத்தகைய 22 போட்டிகளில் பங்கேற்று முதல் மூன்று இடங்களை பெற்ற வெற்றியாளர்களுக்கு ரூ.1,00,000 மதிப்புள்ள பண பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. மேலும், அனைத்து நிகழ்வுகளிலும், பயிலரங்குகளிலும் பங்கேற்ற ஏறத்தாழ 4000 பேருக்கு பங்கேற்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 






Related News

Leave a Reply

Visit Us On FacebookVisit Us On YoutubeVisit Us On Google PlusVisit Us On TwitterVisit Us On Linkedin