இந்தியன் வங்கி முன்னாள் தலைவருக்கு 3 ஆண்டு சிறை

இந்தியன் வங்கி முன்னாள் தலைவருக்கு 3 ஆண்டு சிறை: சென்னை சி.பி.ஐ. கோர்ட்டு

ARJUNA    TV

இந்தியன் வங்கி தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக இருந்து வந்தவர் கோபாலகிருஷ்ணன். இவர், கடந்த 1989-ம் ஆண்டில் இருந்து 1993-ம் ஆண்டு வரை பதவியில் இருந்தபோது டெல்லியில் உள்ள 2 தனியார் நிறுவனங்களுக்கு டெல்லியில் உள்ள இந்தியன் வங்கி மூலம் முறைகேடாக ரூ.18 கோடியே 8 லட்சம் கடன் வழங்க அனுமதி அளித்துள்ளார். இதன்மூலம் வங்கிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

முறைகேடாக கடன் வழங்க டெல்லி இந்தியன் வங்கியின் அப்போதைய மண்டல மேலாளர் சண்முகசுந்தரம், உதவி பொது மேலாளர் சதீஷ்குமார் ஆகியோரும் துணையாக இருந்துள்ளனர். இதுகுறித்து சி.பி.ஐ. போலீசார் விசாரணை நடத்தி கோபாலகிருஷ்ணன் உள்பட 3 பேர் மீதும், தனியார் நிறுவன இயக்குனர்கள் மீதும் சென்னை சி.பி.ஐ. கோர்ட்டில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.

வழக்கு விசாரணையின் போது தனியார் நிறுவனங்களின் இயக்குனர்கள் இறந்து விட்டனர். இதைதொடர்ந்து அவர்கள் மீதான வழக்கு கைவிடப்பட்டது. மற்றவர்கள் மீதான வழக்கு சி.பி.ஐ. கோர்ட்டில் நடந்தது.

வழக்கை விசாரித்த கோர்ட்டு, குற்றம்சாட்டப்பட்ட கோபாலகிருஷ்ணன் உள்பட 3 பேருக்கும் தலா 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.

இந்த தகவல் சி.பி.ஐ. அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Related News

Comments are Closed

Visit Us On FacebookVisit Us On YoutubeVisit Us On Google PlusVisit Us On TwitterVisit Us On Linkedin