அ.தி.மு.க. பிரமுகர் கே.கிருஷ்ணனை கைது

 இந்த நிலையில் திருவொற்றியூர் அ.தி.மு.க. பகுதி செயலாளர் கே.கிருஷ்ணன், 15 பேருடன் அங்கு சென்று தங்கள் பகுதியை சேர்ந்தவர்களுக்கும் இங்கு வேலை தரவேண்டும் என்று மெட்ரோ ரெயில் அதிகாரிகளுடன் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து தளவாடபொருட்கள் தயாரிப்பு திட்டஇயக்குனர் போஸ், தங்களை மிரட்டியதாக கே.கிருஷ்ணன் மீது திருவொற்றியூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அ.தி.மு.க. பிரமுகர் கே.கிருஷ்ணனை கைது செய்தனர். பின்னர் அவரை போலீஸ் நிலையத்திலேயே ஜாமீனில் விடுதலை செய்தனர்.

மேலும் இச்சம்பவத்தில் பல்வேறு அரசியல் கட்சி நிருவாகிகள் உள்ளதாக கூறபடுகிறது.

புகார் அளித்தால் அவர்களையும் கைது செய்வோம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.






Related News

Leave a Reply

Visit Us On FacebookVisit Us On YoutubeVisit Us On Google PlusVisit Us On TwitterVisit Us On Linkedin