தடை செய்யப்பட்ட மாவா மற்றும் புகையிலைப்பொருட்களை விற்பனை செய்த நான்கு நபர்கள் கைது

 சென்னையில் போதைப் பொருட்கள் வைத்திருப்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களையும், கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகரக் காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவிட்டதன்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தங்களது காவல் நிலைய எல்லை பகுதியில் கண்காணித்து சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை கைது செய்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, எம்-4 செங்குன்றம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (04.1.2018) செங்குன்றம், ஓ.ஆர்.ஜி.என் பள்ளி அருகே கண்காணிப்பு பணியிலிருந்தபோது, அங்கு இருசக்கர வாகனத்தில் சந்தேகப்படும்படி நின்றிருந்த மூன்று நபர்களிடம் விசாரணை செய்தபோது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனர் சந்தேகத்தின்பேரில், அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட மாவா மற்றும் ஹான்ஸ் பாக்கெட்டுகள் இருந்தது தெரியவந்தது.
அதன்பேரில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட மாவா புகையிலைப்பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 1.பாஸ்கர், வ/36, த/பெ.செல்வபெருமாள், எண்.455, அம்பேத்கர் தெரு, செங்குன்றம், 2.பிரசாந்த், வ/28, த/பெ.பிரமாத் ரங்கன் பாசு, எண்.82, அன்னை நகர், வடபெரும்பாக்கம் 3.ரஜுஸ், வ/38, த/பெ.புஷ்பாகரன், மகாலெட்சுமி நகர், பாடியநல்லூர் ஆகிய மூன்று நபர்களை செய்தனர். அவர்களிடமிருந்து 3 கிலோ மாவா, 6 கிலோ சீவல், 100 ஹான்ஸ் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதே போல, ழு-5 தலைமை செயலக காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (04.1.2018) புரசைவாக்கம், திடீர் நகர் பகுதியில் கண்காணிப்பு பணியிலிருந்த போது அங்கு மாவா விற்பனை செய்து கொண்டிருந்த சூர்யா, வ/19, த/பெ.ஆனந்த், எண்.26, திடீர் நகர், புரசைவாக்கம் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 1/2 கிலோ மாவா பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட நான்கு நபர்களும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.






Related News

Leave a Reply

Visit Us On FacebookVisit Us On YoutubeVisit Us On Google PlusVisit Us On TwitterVisit Us On Linkedin