மாம்பலம் பகுதியில் செல்போன் பறிப்பு வழக்குகளில் சம்பந்தப்பட்ட4 நபர்கள் கைது

சென்னையில் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யவும், குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கவும், சுற்றுக் காவல் ரோந்து வாகனங்களை அதிகரித்து, அதிக அளவில் வாகனத் தணிக்கைகள் மேற்கொள்ள சென்னை பெருநகரக் காவல் ஆணையாளர் உத்தரவிட்டதன் பேரில் அனைத்து காவல் நிலைய எல்லைகளிலும் சுற்றுக் காவல் ரோந்து வாகனங்கள் மூலம் கண்காணித்தும், வாகனத் தணிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக சு-1 மாம்பலம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் போலீசார் நேற்று (04.1.2018) மாம்பலம், பர்கிட் சாலை சந்திப்பில் கண்காணிப்பு பணியிலிருந்த போது அங்கு சந்தேகத்திற்கிடமாக சுற்றி திரிந்த நான்கு நபர்களை பிடித்து விசாரணை செய்த போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர். சந்தேகத்தின் பேரில் மேற்படி நான்கு நபர்களிடமும் தீவிர விசாரணை செய்ததில் அவர்கள் மாம்பலம் பகுதிகளில் செல்போன் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர். அதன் பேரில் நான்கு நபர்களையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்தனர்.
மேலும் விசாரணையில் பிடிபட்ட நபர்கள் 1.சுரேஷ் (எ) காளை, வ/20, த/பெ.கருணாகரன், தெற்கு போக் சாலை, 21 வது பிளாக், குடிசைப்பகுதி, தேனாம்பேட்டை 2.பிரதீப் (எ) குள்ளு, வ/21, த/பெ.நந்தகோபால், சத்தியமூர்த்தி நகர், தேனாம்பேட்டை 3.ராஜா (எ) ராஜுபாய், வ/24, த/பெ.வெங்கடேசன், எழில் நகர், கண்ணகி நகர் 4.லோகேஷ், வ/21, த/பெ.ராஜேந்திரன், அகரம் தென்கரை, சேலையூர் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 5 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேற்படி கைது செய்யப்பட்ட ராஜா (எ) ராஜுபாய் மாம்பலம் காவல் நிலைய சரித்திரப்பதிவேடு குற்றவாளி என்பதும் இவர் ஏற்கனவே குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறை சென்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்ட நான்கு நபர்களும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.


Related News

Comments are Closed

Visit Us On FacebookVisit Us On YoutubeVisit Us On Google PlusVisit Us On TwitterVisit Us On Linkedin