நடந்து சென்ற நபரிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்த இரண்டு நபர்கள் கைது. 

 சென்னை, புளியந்தோப்பு, நாச்சாரம்மள் தெரு, எண்.52 என்ற முகவரியில் சதாம் உசேன், வ/25, த/பெ. ஷேக்தஸ்தகீர் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று (07.01.2018) காலை சுமார் 08.30 மணியளவில் டாக்டர் அம்பேத்கர் கல்லூரி சாலை, வ.உ.சி நகர் மெயின்ரோடு சந்திப்பில் நடந்து சென்று கொண்டிருந்த போது, அங்கு நின்று கொண்டிருந்த இரண்டு நபர்கள் மேற்படி சதாம் உசேனிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்து செல்போன் மற்றும் ரூ.2,000/- ஆயிரத்தை பறித்து சென்றனர். இது தொடர்பாக சதாம்உசேன் ஞ-1 புளியந்தோப்பு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டது.

ஞ-1 புளியந்தோப்பு காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை செய்து மேற்படி வழிப்பறி வழக்கில் சம்பந்தப்பட்ட 1.சுரேஷ் (எ) கருக்கா சுரேஷ், வ/41, த/பெ.விஜயகுமார், எண்.245, சாஸ்திரி நகர், 12 வது தெரு, புளியந்தோப்பு 2.அசோக்,வ/39, த/பெ.கில்பர்ட், எண்.226, அம்பேத்கர் நகர், 4 வது தெரு, புளியந்தோப்பு ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து கத்தி மற்றும் செல்போன் மற்றும் பணம் ரூ.2 ஆயிரம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கைது செய்யப்பட்ட சுரேஷ் (எ) கருக்கா சுரேஷ் புளியந்தோப்பு காவல் நிலைய சரித்திரப் பதிவேடு குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.


Related News

Comments are Closed

Visit Us On FacebookVisit Us On YoutubeVisit Us On Google PlusVisit Us On TwitterVisit Us On Linkedin