பணம் பந்தயம் வைத்து சூதாடிய 32 நபர்கள் கைது.

ராயப்பேட்டை பகுதியில் பணம் பந்தயம் வைத்து சூதாடிய 32 நபர்கள் கைது.

னு-2 அண்ணாசாலை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (07.01.2018) மதியம் சுமார் 01.30 மணியளவில் அப்பகுதியில் கண்காணிப்பு பணியிலிருந்தபோது, ஆய்வாளருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், ராயப்பேட்டை, வெஸ்ட் காட் ரோடு, மாடர்ன் டவர்ஸ் 3வது தளத்தில் ரகசியமாக கண்காணித்தபோது, அங்கு சிலர் சீட்டுக்கட்டுகளுடன் பணம் பந்தயம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அதன்பேரில் அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்ட செல்வம், வ/54, த/பெ.முனுசாமி, எண்.54, 1/262, பெரியார் நகர், திரிசூலம், சென்னை என்பவர் உட்பட 32 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து பணம் ரூ.6,432/- மற்றும் சீட்டுகட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.


Related News

Comments are Closed

Visit Us On FacebookVisit Us On YoutubeVisit Us On Google PlusVisit Us On TwitterVisit Us On Linkedin