சாகும் வரை உண்ணாவிரதம் இருந்த சமூக ஆர்வலர் உட்பட 5-பேர் கைது. 

சாலையை சீரமைக்க வலியுறுத்தி சாகும் வரை உண்ணாவிரதம் இருந்த சமூக ஆர்வலர் உட்பட 5-பேர் கைது. 

சென்னை அடுத்த வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையில் தொடங்கி கண்டிகை, மேலைக்கோட்டையூர் முதல் மல்ரோசாபுரம், கீரப்பாக்கம், அம்மணம்பாக்கம், மேட்டுப்பாளையம், குமிழி, ஒத்திவாக்கம் வழியாக கூடுவாஞ்சேரி-நெல்லிக்குப்பம் சாலையில் இணையும் கல்வாய் வரை உள்ள 10-கிலோ மீட்டர் கொண்ட சாலையை சீரமைக்க ₹.5 கோடி நிதி ஒதுக்கியும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் அலட்சியப்போக்கினால் கிடப்பில் போடப்பட்ட சாலையை போர்க்கால அடிப்படையில் அமைக்க மாவட்ட கலெக்டர் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 2-வது நாளாக பட்டினி போராட்டம் நடத்தி வந்த சமூக ஆர்வலர் குமிழி சரவணனுக்கு கிராமங்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் சசிகலாதனசேகரன் நேற்று மாலை ஆதரவு தெரிவித்து வாழ்த்து கூறினார். இதுகுறித்து தகவலரிந்ததும் திருப்போரூர் தாசில்தார் மற்றும் தாழம்பூர் போலீசார் நேற்றிரவு பேச்சுவாத்தை நடத்தியும் போராட்டத்தை கைவிட மறுத்த சமூக ஆர்வலர் சரவணகுமார் உட்பட 5-பேரை இன்று அதிகாலையில் போலீசார் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Related News

Comments are Closed

Visit Us On FacebookVisit Us On YoutubeVisit Us On Google PlusVisit Us On TwitterVisit Us On Linkedin