சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற தினகரன், எம்.எல்.ஏ.வாக இன்று பதவியேற்றுக்கொண்டார்

ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற தினகரன், எம்.எல்.ஏ.வாக இன்று பதவியேற்றுக்கொண்டார். சட்டசபை வளாகத்தில் சபாநாயகர் தனபால் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த தினகரன் கூறியதாவது:-

அ.தி.மு.க.வில் ரத்தமும் சதையுமாக உள்ள தொண்டர்கள் எங்கள் பக்கம் தான் உள்ளனர். சசிகலா தலைமையிலான அ.தி.மு.க.வே உண்மையான இயக்கம் என ஆர்.கே நகர் மக்கள் தீர்ப்பு வழங்கி விட்டனர். துரோக வரலாற்றில் துரோகத்திற்கு இடமில்லை. 

மனதளவில் பல அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் எங்கள் பக்கமே உள்ளனர். சட்டசபையில் வாக்கெடுப்பு நடக்கும் போது அவர்கள் வெளிப்படுவார்கள். கட்சியில் பலரை நீக்கி அவர்கள் (முதல்வர் அணி) நடவடிக்கை எடுத்துள்ளனர். களங்கம் விளைவித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமானால் அங்குள்ளவர்கள் மீதுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

துரோகத்திற்கு பிராயச்சித்தம் தேடும் வகையில், எங்களை நோக்கி வருபவர்களுக்கு வழிவிட்டு விலகி நிற்க வேண்டும். எங்கள் அணிக்கு வருபவர்களை உங்களால் தடுக்க முடியாது. குறிப்பிட்ட சிலர் வழிவிட்டால் ஆட்சியை தக்க வைக்க முடியும். 5 அல்லது 6 பேரின் சுயநலமே இவ்வளவு பிரச்சினைக்கு காரணம்.

உங்களின் நடவடிக்கைகளை மக்கள் பார்த்து கைகொட்டி சிரிக்கின்றனர். திருந்துங்கள், இல்லையெனில் மக்கள் திருத்துவார்கள்.


Related News

Comments are Closed

Visit Us On FacebookVisit Us On YoutubeVisit Us On Google PlusVisit Us On TwitterVisit Us On Linkedin