செங்கம் டிசம்பர்  விவசாயிகள் வேதனை வியாபாரிகள் கொண்டாட்டம்

 செங்கம் டிசம்பர்  விவசாயிகள் வேதனை வியாபாரிகள் கொண்டாட்டம் 


 தமிழ் நாட்டில் தஞ்சை மாவட்டத்திற்கு அடுத்து அதிக அளவில் நெல் விளையக்கூடிய
 பகுதி திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஆகும்
 கடந்த நான்கைந்து ஆண்டுகளாக வறட்சியால்  விவசாயம் பாதிக்கப்பட்டது வறட்சி
 நிவாரணம் கூட விவசாகளை சென்றடைய வில்லை
 இயற்கையின் கருணையினால் இந்த ஆண்டு மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது
 இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர் விவசாயிகள் விவசாயத்தில் மும்முரமாக
 ஈடுபட்டு இன்று அறுவடை செய்து  வருகின்றனர் ஆனால் அவர்கள் நினைத்த விலைக்கு
 நெல்லை விற்பனை செய்ய முடியாமல் தனியார் கமிஷன் மண்டியில்
 அடிமாட்டு விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்
          கமிட்டி இருந்தும் விவசாயிகளின் நெல்லை வாங்காமல் அலட்சியம் காட்டி
வருவதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர் தனியார் மண்டியில் கமிட்டி
அதிகாரிகள் கமிஷன் வாங்கி கொண்டு கண்டு கொள்ளாத இருப்பதாகவும் தெரிவித்தனர்
    மாநில அரசு மாவட்ட நிர்வாகமும் விவசாயிகள் துயர் துடைக்க என்ன
 நடவடிக்கை எடுக்க போகிறார்கள்? என்று தெரியவில்லை. 






Related News

Comments are Closed

Visit Us On FacebookVisit Us On YoutubeVisit Us On Google PlusVisit Us On TwitterVisit Us On Linkedin