இன்னோவா ஸ்பேஸ் நிறுவனத்துடன் அப்பல்லோ டெலி சர்வீசஸ் புரிந்துணர்வு ஒப்பந்தம்

சென்னை, டிசம்பர் 16, 2017: அப்பல்லோ தொலை மருத்துவ சேவைகள் எனப்படும் அப்பல்லோ டெலி ஹெல்த் சர்வீசஸ்
(ஏடிஹெச்எஸ்), ஆசியாவின் மிகப்பெரிய மற்றும் நம்பகமான மருத்துவமனை குழுமமான அப்பல்லோவின் ஒரு அங்கமாகும்.
ஏடிஹெச்எஸ், இன்னோவா ஸ்பேஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு ஒரு வரலாற்றைப்
படைத்துள்ளது. இன்னோவா ஸ்பேஸ் அமைப்பில் உலகின் பல நாடுகளில் இருந்து ஆலோசகர்கள் உள்ளனர். இந்த அமைப்பு பல
நாடுகளுக்கு விண்வெளித் திட்டங்கள் மற்றும் தொலை மருத்துவ சேவைகளில் உதவிகளைச் செய்து வருகிறது. குறிப்பாக
கிராமப்புற மற்றும் அணுக முடியாத பகுதிகளில் மருத்துவ சேவை அளிப்பதுமுதல் விண்வெளி பயணிகள் மற்றும் விண்வெளி
வீரர்களுக்கு மருத்துவ சேவை அளிப்பது வரையிலான பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது. இன்னோவா ஸ்பேஸ்
நிறுவனமானது உலகெங்கிலுமுள்ள பல்கலைக்கழகங்கள், ஆய்வு நிறுவனங்கள், அறிவியல் தொடர்பான அமைப்புகள், அரசுத்
துறைகள் என பலவற்றுடன் இணைந்து விண்வெளி அறிவியல் மற்றும் தொலை மருத்துவம் தொடர்பான முயற்சிகளை
முன்னெடுத்து அதை செயல்படுத்தி தேசிய மற்றும் சர்வதேச மேம்பாட்டுக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
உலகின் பலபகுதிகளைச் சேர்ந்த வல்லுநர்கள் மற்றும் விஞ்ஞானிகளுடன் தொடர்பில் உள்ள இன்னோவா ஸ்பேஸ், தொலை
மருத்துவம் உள்ளிட்டவற்றில் உதவிகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்கி வருகிறது. புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அப்பல்லோ
தொலை மருத்துவசேவைகள் (ஏடிஹெச்எஸ்) இயக்குநர் பேராசிரியர் கே.கணபதி, இன்னோவா ஸ்பேஸின் இயக்குநர் டாக்டர்
தயாஸ் ருஸ்ஸமானோ ஆகியோர் கையெழுத்திட்டனர். அப்பல்லோ மருத்துவமனைகள் குழுமத்தின் நிறுவனர் மற்றும் செயல்
தலைவர் டாக்டர் சி.பிரதாப் ரெட்டி முன்னிலையில், எதிர்கால மருத்துவ தொழில்நுட்பம் குறித்த சர்வதேச பயிலரங்கத்தின்போது
இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
விண்வெளிக்காக அதி நவீன தொழில் நுட்பத்தில் ஸ்மார்ட் ஹெல்த் ப்ராடக்ட்ஸ் எனப்படும் டிஜிட்டல் தொழில்
நுட்பத்திலான மருத்துவ துணைத் தயாரிப்புகள் தயாரிக்க ஊக்குவிக்கப்படும். ஏடிஹெச்எஸ் மற்றும் அப்பல்லோ மருத்துவமனை
அவற்றுக்கு அறிவுசார் சொத்துரிமையை ஏற்பாடு செய்து வழங்கும்.
புதுமையான மருத்துவ மற்றும் உடல்நலம் தொடர்பான சாதனங்களை அனைவருக்கும் கிடைக்கும் வகையில் பொறியியல்
பிரிவுகளை ஒருங்கிணைக்க இந்த இரண்டு நாள் பயிலரங்கம், முக்கியத்துவம் அளிக்கிறது. விமான பொறியியல், இயந்திரவியல்
பொறியியல் மருத்துவ மற்றும் உயிரி பொறியியல் மற்றும் தொழில்நுட்பம், தொலை மருத்துவம், அவசர கால மருத்துவ முறைகள்
போன்ற துறைகளைச் சேர்ந்த வல்லுநர்கள் ஒன்றிணைந்து இந்த பயிலரங்கில் பங்கேற்றனர். ட்ரோன் எனப்படும் ஆளில்லா சிறிய
விமானங்களை பயன்படுத்தி உறுப்புகள் உள்ளிட்டவற்றை ஓரிடத்தில் இருந்துமற்ற இடத்துக்கு கொண்டு சென்று அவசர உறுப்பு
மாற்று அறுவை சிகிச்சைகளை மேற்கொள்வது தொடர்பான வழிமுறைகளை அவர்கள் ஆய்வு செய்தனர். நாட்டில் உள்ள,
உள்ளடங்கிய மற்றும் அணுக முடியாத பகுதிகளுக்கு அவசர காலங்களில் மருத்துவ பொருட்களை விநியோகிப்பது, அவசர உறுப்பு
மாற்று அறுவை சிகிச்சை போன்றவற்றுக்கான செயல்திட்டங்களை வகுப்பது குறித்தும் இந்த பயிலரங்கத்தில் விவாதிக்கப்பட்டது.
தற்போதைய நிலையில் பல்வேறு பிரிவுகளுக்கு இடையிலான தொழில்நுட்ப சாதனைகளுக்கு சிறந்த உதாரணமாக
டிரோன் எனப்படும் ஆளில்லா விமானங்கள் திகழ்கின்றன. உறுப்புகளை ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு
செல்வதற்கும் மருத்துவ விநியோகத்திற்கும் இந்த ட்ரோன்கள் பயன்படுகின்றன. ரத்த மாதிரிகள், பொருட்கள், உறுப்புகள்
போன்றவற்றை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு
கொண்டு செல்ல ட்ரோன்கள் திறன் வாய்ந்த, சிக்கனமான மற்றும் ஆற்றல் வாயந்த உயிர்காக்கும் முறையாகும். பிற்காலத்தில் இது
பொதுவாக பயன்படுத்தப்படும் ஆம்புலன்ஸ்கள் அல்லது ஹெலிகாப்டர்களாக மாறக் கூடும்.
இந்த பயிலரங்கில் பேசிய அப்பல்லோ மருத்துவமனை குழுத்தின் நிறுவனர் மற்றும் செயல் தலைவரான டாக்டர் பிரதாப்
ரெட்டி இந்த பயிலரங்கில் பேசுகையில், “தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது. இந்த நிலையில் ட்ரோன்களை அறிமுகப்படுத்துவது
மற்றொரு முக்கியத்துவம் வாய்ந்த முன்னேற்றமாகும். இந்த நேரத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியமாகும்.
பெரும்பான்மையான மக்கள் அவர்களது உடல் நலத் தேவைகளுக்கு ஏற்றவாறு தகுந்த தொழில் நுட்பங்களைப் பெறும் வகையில்
புதுமையான மற்றும் தரமான மருத்துவ தொழில்நுட்பங்கள் நியாயமான கட்டணத்தில் கிடைக்க வேண்டியது அவசியமாகும். இது,
நோயிலிருந்து தற்காத்துக் கொள்ளுதல், தொடக்க நிலையிலேயே நோய்களை கண்டறிதல் மற்றும் சிறப்பான சிகிச்சை
ஆகியவற்றுக்கு வழிவகுக்கும். நமது நாட்டில் மருத்துவ சேவையில் ட்ரோன்களை பயன்படுத்துவதன் மூலம் உள்கட்டமைப்பு
வசதிகள் போதாமையையும் தாண்டி அனைத்து தரப்பு மக்களும் அவசர சிகிச்சை மற்றும் தரமான மருத்துவ சேவையைப் பெற
வாய்ப்பு உருவாகும்.” என்றார்.

“அப்பல்லோ மருத்துவமனை குழுமம், இன்னோவா ஸ்பேஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்
கையெழுத்திட்டுள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த இன்னோவா ஸ்பேஸ் நிறுவனம், விண்வெள் அறிவியல் மற்றும் விண்வெளி
மருத்துவத்தில் முன்னணி இடம் வகிக்கிறது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம், விண்வெளியில் பயணம் மேற்கொள்வேருக்கும்
தொலை மருத்துவ சேவைகளை விரைவில் வழங்க அப்பல்லோ மருத்துவமனைக்கு வாய்ப்பு ஏற்படும்.” என்று அவர் கூறினார்.« (Previous News)Related News

Comments are Closed

Visit Us On FacebookVisit Us On YoutubeVisit Us On Google PlusVisit Us On TwitterVisit Us On Linkedin