ஜிஎஸ்டி வரியால் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றன

  

புதுடில்லி:

ஜிஎஸ்டி வரியால் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றன. இந்நிறுவனங்களின் சுமையைக் குறைக்க ஜிஎஸ்டி வரி விகிதங்களை ஒட்டு மொத்தமாக மாற்ற வேண்டும் என்று மத்திய அரசின் வருவாய்த்துறை செயலாளர் ஹஸ்முக் ஆதியா கூறினார்.

ஹஸ்முக் ஆதியா கூறியதாவது:

உற்பத்தி வரி, சேவை வரி, மதிப்பு கூட்டு வரி உள்பட மொத்தம் 12க்கும் மேற்பட்ட வரிகளை ஒருங்கிணைந்து ஜிஎஸ்டி வரி அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. ஆகவே, வரி வசூல் நிலைத்தன்மையை அடைய ஓராண்டு பிடிக்கும்.

ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட்டு 4 மாதங்கள் ஆகி இருக்கின்றன. இது அமல்படுத்தப்பட்ட பிறகு பல்வேறு மாற்றங்களை ஜிஎஸ்டி கவுன்சில் மேற்கொண்டுள்ளது. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

அதேசமயம், குறு,சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு இந்த வரி மிகப்பெரும் பிரச்சினையாக உள்ளது. வரி கட்டுவதிலும், கட்டிய வரியை திரும்பப் பெறுவதிலும் பல்வேறு சிக்கல்கள் நிலவுகின்றன. இதற்கான வழிமுறைகளில் மாற்றம் கொண்டுவர வேண்டும். அது குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு பலன் அளிப்பதாக இருக்கும். ஏற்றுமதியாளர்கள் வரியை திரும்பப் பெறும் முறையை எளிமைப்படுத்த வேண்டும்.

ஜிஎஸ்டியை ஒட்டுமொத்தமாக மாற்றி அமைக்க வேண்டியது அவசியம். சில பகுதிகள் மற்றும் சில பொருள்களை தனியாக பிரிக்க வேண்டி இருக்கிறது.

இவ்வாறு ஹஸ்முக் ஆதியா கூறினார்.

23வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நவம்பர் மாதம் 10ம் தேதி கவுகாத்தியில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் நடைபெற உள்ளது. இந்நிலையில், ஹஸ்முக் ஆதியா இந்தக் கருத்தை தெரிவித்துள்ளார்.






Related News

Comments are Closed

Visit Us On FacebookVisit Us On YoutubeVisit Us On Google PlusVisit Us On TwitterVisit Us On Linkedin