உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத் கோவிலில் வழிபாடு செய்த பிரதமர் மோடி இது அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் முன்னோடியாக திகழ்வதாக தெரிவித்தார்.

கேதார்நாத் யாத்திரை நாளையுடன் முடிவடையும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று கேதார்நாத் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அவருடன் முதல்-மந்திரி மற்றும் கவர்னர் ஆகியோரும் சாமி தரிசனம் செய்தனர். அப்போது அங்கு குடியிருந்த மக்களிடையே மோடி உரையாற்றினார். அவர் பேசியதாவது:-

உத்தரகாண்டில் உள்ள மக்கள் மிகவும் ஒழுக்கமாக உள்ளனர். அவர்களை நான் வணங்குகிறேன். இப்பகுதியில் குடும்பத்திற்கு ஒருவர் ராணுவத்தில் உள்ளனர். கேதார்நாத்தை சுற்றுலாத்தலமாக மாற்றுவது அனைவருக்கும் நன்மை பயக்கும்.

கேதார்நாத் ஆலயம் அனைத்து சுற்றுலாத்தலங்களுக்கும் ஒரு முன்மாதிரியாக விளங்குகிறது. இமயமலை அடிவாரத்தில் உள்ள புகழ்பெற்ற புனித தலங்களான பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகியவற்றை மக்கள் அனைவரும் கண்டு மகிழ வேண்டும்.

2013-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் ஆலயம் வெகுவாக பாதிக்கப்பட்டது. தற்போது அமைக்கப்பட்டு வரும் உள்கட்டமைப்புகள் மிகவும் தரமானதாக இருக்கும். அது தற்போது உள்ள புதிய வடிவமைப்பில் கட்டப்பட உள்ளது. ஆனால் அதன் பாரம்பரியம் பாதுகாக்கப்படும். மேலும், சுற்றுச்சூழலுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாது.

இவ்வாறு அவர் பேசினார்.

கேதார்நாத் சாமி தரிசனத்திற்கு முன் கேதாபூரியில் உள்ள ஆதி சங்கராச்சாரியாவின் கல்லறையின் சீரமைப்பு பணிக்கான அடிக்கல் நாட்டினார் மோடி.


Related News

Comments are Closed

Visit Us On FacebookVisit Us On YoutubeVisit Us On Google PlusVisit Us On TwitterVisit Us On Linkedin