எல். ஐ. சி யில் ஜீவன் உத்கர்ஷ் பாலிஸி அறிமுகம்.

எல்.ஐ.சி சென்னை கோட்டம் 1 ல் அங்கம் வகிக்கும் ஆலந்தூர் கிளை எண் 19 லும் புதிய திட்டமான ” ஜீவன் உத்கர்ஷ்” (திட்ட எண் 846)அறிமுக விழா  நடை பெற்றது.
எல். ஐ. சி தென் மண்டலத்தின் ஓய்வு பெற்ற செயலாளர்,வணிகம் ( DZM) திரு. என். வி. சுப்பாராமன் அவர்கள் இப் புதிய திட்டத்தினை திரு. பி. எஸ். வி. குமார்,முன்னால் லயன்ஸ்  கிளப் ஆளுநர் முன்னிலையில் குத்துவிளக்கு ஏற்றி அறிமுகப் படுத்தினார்.
பாலிஸியின் சாராம்சங்களைக்
கிளையின் முதன்மை மேலாளர் திரு. வெ. நா. முருகேசன் அவர்கள் விளக்கிக் கூறினார். இந்த திட்டம் 6 வயது முதல் 47 வயது வரை உள்ளவர்களுக்கு உகந்த திட்டம். ஒரே தவணை பிரிமியம் செலுத்த வேண்டும். இத் திட்டம் பங்குச்சந்தை சார்ந்த திட்டமல்ல. ஒரே தவணை பிரிமியத்தின் பத்து மடங்கு காப்பீடு உண்டு. செலுத்தும் பிரிமியத்திற்கு வருமான வரிச் சட்டம் செக்க்ஷன் 80 c யின் கீழ் வருமான வரிவிலக்கும் உண்டு. கடன் வசதியும் உண்டு. மேலும் விபரங்களுக்கு முகவர்கள், வளர்ச்சி அதிகாரிகள், மற்றும் கிளை அலுவலகத்தை அனுகுமாறு கேட்டுக் கொண்டார். விழாவில் பாலிஸிதாரர்கள், முகவர்கள் ,வளர்ச்சி அதிகாரிகள்,அலுவலக அதிகாரிகள் மற்றும் அலுவலக ஊழியர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


Comments are Closed

Visit Us On FacebookVisit Us On YoutubeVisit Us On Google PlusVisit Us On TwitterVisit Us On Linkedin