நந்தனம் ஒய்எம்சிஏ விளையாட்டு கல்லூரியில் நடைபெறும் விளையாட்டு போட்டி

சென்னை: சென்னையில் உள்ள நந்தனம் ஒய்எம்சிஏ விளையாட்டு கல்லூரியில் நடைபெறும் விளையாட்டு போட்டி குறித்து அக்கல்லூரியின் முதல்வர் ஜார்ஜ் ஆப்பிரகாம் செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்தாவது:
  நந்தனம் ஒய்எம்சிஏ விளையாட்டுக் கல்லூரியின் 60வது ஆண்டூ விளையாட்டு விழா வருகிற ஆகஸ்ட் 21ம் தேதி அன்று கல்லூரி பவுலியன் மைதானத்தில் துவங்குகிறது. இந்த விளையாட்டு விழா குறித்து கல்லூரி முதல்வர் ஜார்ஸ் ஆப்பிரகாம் கூறுகையில் இந்த ஆண்டு நாடு முழுதுவதிலிருந்தும் 5 ஆயிரம் மாணவ, மாணவிகள்  கலந்து கொள்கிறார்கள்.
  குறிப்பாக 90 பள்ளிகள், 70 கல்லூரிகள் மற்றும் 50 பல்கலைக் கழகங்கள் கலந்து கொள்கின்றன. 18 வகையான விளையாட்டு போட்டிகள் நடைபெறுகின்றன. இந்தப் போட்டியை தமிழ்நாடு விளையாட்டு பல்கலைக் கழக பேராசிரியர் சுப்பிரமணியன் தொடங்கி வைக்கிறார்.
 மேலும் விளையாட்டு போட்டி குறித்து ஹேரி குரோவ் பக் நினைவு விளையாட்டு விழா ஒருங்கிணைப்பு குழு செயலாளர் ஜான்சன் பிரேம்குமார் கூறியதாவது:
 இந்த ஆண்டு கூடுதலாக  100 மீட்டர், 1100 மீட்டர் தடகள போட்டி நடத்தப்படுகிறது. இந்தப் போட்டியை ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் மற்றும் அர்ஜூனா  விருது பெற்ற தடகள வீரங்கனை சாராம்மா தொடங்கி வைக்கிறார் என அவர் தெரிவித்தார்.

Related News

Comments are Closed

Visit Us On FacebookVisit Us On YoutubeVisit Us On Google PlusVisit Us On TwitterVisit Us On Linkedin