யார் இந்த சுகேஷ் சந்தர்? பரபரப்பு தகவல்கள்

இரட்டை இலை சின்னத்தை பெற்று கொடுக்க லஞ்சம் பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள சுகேஷ் சந்தர் மீது இந்தியா முழுவதும் பல்வேறு வழக்குகள் உள்ளன. ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு ஆட்சியையும், கட்சியையும் கைப்பற்றுவதில் ஏற்பட்ட போட்டி காரணமாக அ.தி.மு.க. இரண்டாக பிளவுப்பட்டது. அ.தி.மு.க. அம்மா அணி என்று சசிகலா தலைமையில் ஒரு அணியும், அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணி என்று ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் மற்றொரு அணியும் செயல்பட்டு வருகிறது.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு சமீபத்தில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டபோது இந்த இரு அணியினரும் அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கொண்டாடினார்கள். ஆனால் இரு அணிக்கும் இரட்டை இலை சின்னத்தை வழங்காமல் அதை முடக்கி வைத்து தலைமை தேர்தல் கமி‌ஷன் அறிவித்தது. இது தொடர்பான விசாரணை தற்போது தலைமை தேர்தல் கமி‌ஷனில் நிலுவையில் உள்ள நிலையில், டெல்லியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் இடைத்தரகர் சுகேஷ் சந்தர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ரூ.1.30 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவர் கொடுத்த தகவலின்படி,  இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கு லஞ்சம் வழங்கியதாக டி.டி.வி.தினகரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சுகேஷ் சந்தரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.
யார் இந்த சுகேஷ் சந்தர்?
வங்கி அதிகாரி போல் நடித்து மோசடி செய்து சிக்கியவர் சுகேஷ் சந்தர். ரூ.19 கோடி வங்கி மோசடி புகாரில் தமிழக போலீசாரால் கைது செய்யப்பட்டவர் சுகேஷ் சந்தர். 10-ம் வகுப்பு வரை மட்டுமே படித்த சுகேஷ் சந்தர் 8 மொழிகள் பேசக்கூடியவர். இவர் மீது இந்தியா முழுவதும் 15-க்கும் மேற்பட்ட வழக்குகளும் 100-க்கும் மேற்பட்ட புகார்களும் உள்ளன


Comments are Closed

Visit Us On FacebookVisit Us On YoutubeVisit Us On Google PlusVisit Us On TwitterVisit Us On Linkedin