தற்கொலையில் தமிழகத்திற்கு 2வது இடம்

சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தற்கொலைதடுப்பு அமைப்பான ஸ்னேகா லஷ்மி விஜயகுமார் பேசியதாவது: நாடு முழுதும் தற்கொலை செய்து கொண்டவர்களின் பட்டியலில் தமிழகம் 2வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் புதுச்சேரி உள்ளது. தற்கொலை செய்வோரில், பெண்களை விட ஆண்கள் 2 மடங்கு அதிகம். கடந்த 2012- 15 காலகட்டத்தில் 15,777 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மன உளைச்சல், மன அழுத்தம் ஆகியவையே தற்கொலைக்கு காரணமாக உள்ளது. உலகம் முழுவதும் நடக்கும் தற்கொலைகளில் 17 சதவீதம் பேர் இந்தியர்களாக உள்ளனர். 2005ம் ஆண்டை விட 2015ல் தற்கொலை செய்வோரின் எண்ணிக்கை 17.5 சதவீதம் அதிகரித்துள்ளது. 2015ல் துணைத்தேர்வு அறிமுகம் செய்த பின்னர் தற்கொலை குறைந்துள்ளது. 2015க்கு முன்னர் 454 தற்கொலையாக இருந்தது தற்போது 250 ஆக குறைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் கனிமொழி பேசுகையில், வேலையில்லா திண்டாட்டம் தற்கொலையில் முக்கிய பங்கு வகிக்கிறது. தற்கொலைகளை தடுக்க போதுமான மன நல மருத்துவர்கள் இல்லை என்றார்.


Comments are Closed

Visit Us On FacebookVisit Us On YoutubeVisit Us On Google PlusVisit Us On TwitterVisit Us On Linkedin