சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் அசோகமித்ரன் காலமானார்

  கடந்த 1931-ம் ஆண்டு ஆந்திர மாநிலம் செகுந்திராபாத் நகரில் பிறந்த அசோகமித்திரனின் இயற்பெயர் தியகராஜன் ஆகும். தனது தந்தையின் மறைவுக்கு பின்னர், சென்னைக்கு வந்த அசோகமித்திரன் ஜெமினி ஸ்டூடியோவில் பணிக்கு சேர்ந்தார். 1960-ம் ஆண்டு முதல் முழு நேர எழுத்தாளராக களமிறங்கினார். இந்நிலையில், 85 வயதான அசோகமித்ரன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அன்பின் பரிசு, தண்ணீர், மானசரோவர், அப்பாவின் சினேகிதர், ஒற்றன் போன்ற நாவல்களை அசோகமித்ரன் எழுதியுள்ளார். 200-க்கும் மேற்பட்ட சிறுகதைகள் மற்றும் 15 கட்டுரைகளை அவர் எழுதியுள்ளார்.
இதில் அப்பாவின் சினேகிதர் நாவல் 1996-ம் ஆண்டிற்கான ’சாகித்ய அகாடமி’ விருதை பெற்றுள்ளார். மேலும், தண்ணீர் நாவல் வாசகர்களிடம் மிகப் பிரபலமானவை ஆகும். ’இலக்கியச் சிந்தனை’ விருதையும் இருமுறை வென்றுள்ளார்.


Related News

Comments are Closed

Visit Us On FacebookVisit Us On YoutubeVisit Us On Google PlusVisit Us On TwitterVisit Us On Linkedin