தமிழர்கள் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்தாவிட்டால் மோசமான பின்விளைவுகள் ஏற்படும் : கர்நாடகத்திற்கு பொன்.ராதா எச்சரிக்கை

​தமிழர்கள் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்தாவிட்டால் மோசமான பின்விளைவுகள் ஏற்படும் : கர்நாடகத்திற்கு பொன்.ராதா எச்சரிக்கை
நாகர்கோவில்: கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்தாவிட்டால் மோசமான பின்விளைவுகள் ஏற்படும் என தமிழகத்தை சேர்ந்த மத்திய இணை அமைச்சரான பொன்.ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார். நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கர்நாடக மாநிலத்தில் தமிழர்கள் தாக்கப்படுவது வேதனை அளிப்பதாக தெரிவித்தார். இதனை தடுக்க அம்மாநில அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தவறினால் மிக மோசமான விளைவுகள் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் குறிப்பிட்டார். அவ்வாறு ஏற்படும் பின்விளைவுகளுக்கு கர்நாடக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் கூறினார். 
கர்நாட மாநிலத்தில் வசிக்கும் தமிழர்களின் பாதுகாப்பினை மத்திய மற்றும் மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
தமிழ் இளைஞர் தாக்கப்பட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அவர், இரு மாநிலங்களின் நலன் கருதி தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க அவர் வலியுறுத்தியுள்ளார்.


Related News

Comments are Closed

Visit Us On FacebookVisit Us On YoutubeVisit Us On Google PlusVisit Us On TwitterVisit Us On Linkedin