Tuesday, February 13th, 2018

 

சிலிண்டரில் எதிர்பாராவிதமாக தீ பற்றியதால் கோயிலில் இருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியேறினர்

கும்பகோணம் : ஆதிகும்பேஸ்வரன் கோயிலில் மகா சிவராத்திரியை யொட்டி ஆயிரக்கணக்கானோர் சுவாமி தரிசனம் செய்து வந்த நிலையில் சுவாமி தரிசனம் செய்து திரும்பியவர்களுக்கு பிரகாரத்தில் பால் வழங்கப்பட்டது அங்கிருந்த எரிவாயு சிலிண்டரில் எதிர்பாராவிதமாக தீ பற்றியதால் கோயிலில் இருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியேறினர் பின்னர் சிறிது நேரத்தில் ஈர சாக்கு கொண்டு அணைக்கப்பட்டது இதனால் பெரிய அசம்பாவித சம்பவம் தவிர்க்கப்பட்டது


பீஹார் மாநிலத்தில் கிராமத்துப் பெண் ஒருவர், பிச்சை எடுத்து தனது வீட்டுக்கு கழிப்பறை கட்டிய முயற்சிக்கு சூபால் மாவட்ட ஆட்சியர் பாராட்டு தெரிவித்தார்.

பீஹார் மாநிலத்தில் கிராமத்துப் பெண் ஒருவர், பிச்சை எடுத்து தனது வீட்டுக்கு கழிப்பறை கட்டிய முயற்சிக்கு சூபால் மாவட்ட ஆட்சியர் பாராட்டு தெரிவித்தார். சூபால் மாவட்டத்தில் பைப்ரா வட்டாரத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கோஷி பிரதேசத்தில் உள்ள கிராமம் பாத்ரா உத்தார். இக்கிராமத்தைச் சேர்ந்த வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ள அமினா கதூன் அக்கம்பக்கத்து கிராமங்களுக்குச் சென்று தனது வீட்டுக்கான கழிப்பறை கட்டுவதற்காக பிச்சை எடுத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஞாயிற்றுக்கிழமை இக்கிராமத்தில் நடைபெற்ற விழாவில் தனிப்பட்ட இப்பெண்ணின் முயற்சியை மாவட்ட ஆட்சியர் பாராட்டினார். தனது வீட்டுக்கு கழிவறை கட்டும் பணியில் ஈடுபட்ட ஒரு கொத்தனார் மற்றும் ஒரு சித்தாள் ஆகியோர் தங்கள் ஊதியத்தை எடுத்துக்கொள்ள மறுத்துவிட்டதையும் விழாவில் அமினா பகிர்ந்துகொண்டார். கணவரை இழந்த 40 வயது அமினா பதின்பருவ சிறுவனின் தாய். இவர் ஜீவனத்துக்காக கூலிவேலை செய்துவருகிறார்.வீட்டில் ஒருRead More


Visit Us On FacebookVisit Us On YoutubeVisit Us On Google PlusVisit Us On TwitterVisit Us On Linkedin