Tuesday, December 26th, 2017

 

இளைய திலகம் பிரபு தனது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினார்.

 சார்லி சாப்ளின் 2 படப்பிடிப்பில் இளைய திலகம் பிரபு தனது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினார்.. விழாவில் பிரபுதேவா நிக்கி கல்ராணி தயாரிப்பாளர் t சிவா இயக்குனர் ஷக்திசிதம்பரம் கும்கி அஸ்வின்அரவிந்த் ஆகாஷ் ஜீவன் நடிகை செந்தி பரஞ் ஜோதி கனல்கண்ணன் ஒளிப்பதிவாளர் செளந்தர்ராஜன் பாலா ஆகியோர் உடனிருந்தனர்


40,000 ஆண்டுகளுக்கு முந்தைய ஆதிகால ‘சிங்க மனிதர்,

ஜெர்மனியில் உள்ள ஒரு பழங்கால குகையை 1939-இல் இரு ஆராய்ச்சியாளர்கள் தோண்டியபோது கிடைத்த மாமூத் யானையின் தந்தத்தின் துண்டுகளை ஒன்றாகப் பொருத்தியபோது அதில் ஒரு ‘சிங்க மனிதரின்’ உருவம் கிடைத்தது. 40,000 ஆண்டுகளுக்கு முன்பு ஆதி மனிதர்களால் செய்யப்பட்ட அந்த உருவம் ஏன் சிதைக்கப்பட்டு, புதைக்கப்பட்டது என்று தெரியவில்லை.


அனாதையான வன விலங்குகளை தத்தெடுத்து வளர்க்கும் காப்பகம்

கடந்த நாற்பது ஆண்டுகளாக, காட்டு விலங்குகளுக்கென ‘ஆம்டே ஆர்க்’ காப்பகத்தை நடத்தி வருகிறார் மகசேசே விருது பெற்ற மருத்துவர் பிரகாஷ் ஆம்டே. அங்கீகரிக்கப்பட்ட மிருகக்காட்சி சாலை விதிகள் 2009-இன் படி, காட்டு விலங்குகளை தனிப்பட்ட முறையில் வளர்ப்பது தடை செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து கடந்த அக்டோபர் மாதம், ‘ஆம்டே ஆர்க்’ மையத்திற்கு மத்திய மிருகக்காட்சி ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.


*தேயிலை மீது விதிக்கப்பட்ட தடையை நீக்கியது ரஷ்யா,

இலங்கை தேயிலைக்கு ரஷ்யாவினால் விதிக்கப்பட்டிருந்த இடைகாலத் தடை உத்தரவு நீக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த இடைகாலத் தடை உத்தரவு வரும் 30ஆம் தேதி முதல் நீக்கப்படும் என பெருந்தோட்டத்துறை அமைச்சர் நவின் திஸாநாயக்க தெரிவித்தார். இலங்கை தேயிலைக்கு இடைகாலத் தடை விதிக்கப்பட்டது குறித்து ஆராய்வதற்காக ரஷ்யா சென்றுள்ள குழுவினருக்கும், அந்த நாட்டு அதிகாரிகளுக்கும் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை சமீபத்தில் நடைபெற்றது. பிற்பகலில் நடைபெற்ற இப்பேச்சுவார்த்தையில், இலங்கை அதிகாரிகளினால் ரஷ்யாவிற்கு சில தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டதாகவும் பெருந்தோட்டத்துறை அமைச்சர் குறிப்பிட்டார். இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட ஒரு தொகுதி தேயிலையில் கெப்ரா எனப்படும் வண்டு வகையொன்று காணப்பட்டதை அடுத்து, இலங்கை தேயிலை மீது தடை விதிக்கப்பட்டிருந்தது. எனினும், இலங்கையில் இல்லாத கெப்ரா வண்டு வகை தொடர்பாக ரஷ்ய அதிகாரிகளுக்கு, இலங்கை அதிகாரிகள் தெளிவூட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை தேயிலைக்கு ரஷ்யா தடை:Read More


மலிவு விலை கண்டுபிடிப்புகள் இப்படியும் உதவுமா?

ஒவ்வொறு வாரமும், நேயர்களிடம், அவர்கள் எடுத்த புகைப்படங்களைப் பெற்று, தொகுத்து வழங்குகிறோம். இந்த வாரம், மக்களின் `மலிவான கண்டுபிடிப்புகள்` என்ற தலைப்பில் நேயர்கள் அளித்த புகைப்படங்களை தொகுத்து வழங்குகிறோம். DORIS ENDERS டோரிஸ் எண்டர்ஸ், கோவா: “கடைக்கு செல்லும்போது ஒரு வீட்டில் இந்த நாய் குரைத்துக்கொண்டு வருவதை பார்த்தேன். இந்த நாய் தொடர்ந்து நடப்பதற்காக இந்த வண்டியை ஒருவர் செய்துள்ளார் என்பது என் மனதில் நெகிழ்வை ஏற்படுத்தியது. நிச்சயமாக அந்த நாயை யாரோ ஒருவர் மிகவும் நேசித்திருக்கவேண்டும்” LIA LOPES லியா லோப்ஸ்: “போக்குவரத்திற்கு கார்களை பயன்படுத்தாமல் பழைய காலம் போல குதிரைகளை பயன்படுத்துவது என்பது சுற்றுசூழலுக்கு நல்லது மட்டுமல்ல, மன அழுத்தமற்ற அமைதியையும் தருகிறது. மேலும், இதுவும் ஒரு மலிவான கண்டுபிடிப்பே. GAYATHRI SELVAM காயத்ரி செல்வம்: “இந்த புகைப்படம் அமிர்தசரஸ், பொற்கோவிலுக்கு அருகில் எடுக்கப்பட்டது.Read More


தென் கொரியாவில் சர்வதேச ஒலிம்பிக் குழு தடை விதித்துள்ளது.

தென் கொரியாவில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க ரஷ்யாவிற்கு சர்வதேச ஒலிம்பிக் குழு தடை விதித்துள்ளது. ஆனால், ஊக்க மருந்து சோதனையை எதிர்கொண்டு தங்களை நிரூபிக்கும் பட்சத்தில் ஒரு நடுநிலை கொடியுடன் ரஷ்ய தடகள வீரர்கள் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்று அக்குழு தெரிவித்துள்ளது. 2014 ஆம் ஆண்டு சூச்சி நகரில் ரஷ்யா சார்பில் நடத்தப்பட்ட ஒலிம்பிக் போட்டியில் அரசு ஆதரவுப்பெற்ற ஊக்க மருந்து பயன்பாடு இருந்தததாக எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணையையடுத்து சர்வதேச ஒலிம்பிக் குழு இதனை அறிவித்துள்ளது. ரஷ்யாவுக்கு தொடர் சேதங்களை ஏற்படுத்தி வரும் நிகழ்வுகளில் இந்த தடை உத்தரவு ஒரு எல்லை வரம்பை குறிக்கும் என்று சர்வதேச ஒலிம்பிக் குழு தெரிவித்துள்ளது. ஒலிம்பிக் குழுவின் தடை உத்தரவு ரஷ்யாவில் பரவலான கண்டனங்களை எதிர்கொண்டுள்ளன. ரஷ்ய வீரர்கள் ஒலிம்பிக் போட்டியைRead More


உடல் உருவத்தை கேலி செய்யும் வகையில் திரைப்படக் காட்சிகள் ,

 திரைப்படக் காட்சிகள் அமைக்கப்படுவது வருத்தம் அளிப்பதாக சில நாட்களுக்கு முன்பு கூறியிருந்த திரைப்பட நடிகை வித்யூலேகா ராமன், அனைத்து உடல் அமைப்புகளும் அழகுதான் என்பதை வெளிப்படுத்தும் நோக்கில் தனது புகைப்படங்கள் சிலவற்றையும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தார். “உடல் உருவத்தையும், நிறத்தையும் கேலி செய்யும் வகையில் திரைப்படக் காட்சிகள் எடுக்கப்படுவதை ஊக்குவிப்பது ரசிகர்களா இல்லை வர்த்தக நோக்கமா? சமூக ரீதியாக வர வேண்டிய மாற்றத்தை சட்ட ரீதியாகத்தான் கையாள முடியுமா?” என்று பிபிசி தமிழ் நேயர்களிடம் #வாதம்விவாதம் பகுதியில் கேட்கப்பட்டிருந்த கேள்விக்கு அவர்கள் பதிவிட்ட கருத்துகளில் தேர்தெடுக்கப்பட்டவற்றை தொகுத்து வழங்குகிறோம். “உடல் உருவத்தையும், மாற்றுத்திறனாளிகளையும் வைத்து நகைச்சுவை செய்வதை நடிகை நடிகையர் தவிர்க்க வேண்டும். இதை சட்ட ரீதியாகத்தான் கையாள வேண்டும்,


எம்.எல்.ஏ.க்களை கட்சியில் இருந்து நீக்காதது ஏன்?: தங்க தமிழ்செல்வன்,

டி.டி.வி.தினகரனின் ஆதரவாளரான தங்க தமிழ்ச் செல்வன் அ.தி.மு.க. தலைமை கழகத்தில் நேற்று நடைபெற்ற கூட்டத்திற்கு பிறகு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணியினர் மாவட்ட செயலாளர்களாக உள்ள வி.பி.கலைராஜன், பாப்புலர் முத்தையா, கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி, செய்தி தொடர்பாளர் நாஞ்சில் சம்பத், சி.ஆர்.சரசுவதி ஆகிய 5 பேர்களை கட்சியை விட்டு நீக்கி உள்ளனர். ஆனால் சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களான என்னையும், வெற்றிவேல், பார்த்தீபன், ரங்கசாமி ஆகிய 4 பேர்களையும் கட்சியை விட்டு நீக்க முடியாமல் மாவட்ட செயலாளர் பதவியை மட்டும் பறித்துள்ளனர். எங்களை கட்சியை விட்டு நீக்காதது ஏன்? என்று அவர்களால் விளக்கம் சொல்ல முடியுமா? அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க் களை தகுதி நீக்கம் செய்த வழக்கில் சபாநாயகரின் உத்தரவு செல்லாது என்று ஐகோர்ட்டில் தீர்ப்பு வந்தால், நாங்கள் அதன் பிறகு சுயேச்சைRead More


Velaikaran Review

chennai;  One of the much-awaited movies of 2017 is Velaikkaran featuring Sivakarthikeyan, Fahad Fazil, Nayanthara and directed by Mohan Raja. After a Blockbuster Thani Oruvan, Mohan Raja joined hands with Siva who’s previous film Remo was also Blockbuster. Let us see in detail the review of Velaikaran movie. Velaikaran Review The film’s plot deals with how FMCG corporates use their Marketing techniques and force Consumers to buy their products without knowing the effects it can cause. Arivu vs Aadhi is easily best.Sivakarthikeyan delivers his career-best performance. The rise of thisRead More


பத்து கிலோ இலவச அரிசிக்கு பதிலாக, ரேஷன் கார்டுக்கு 300 ரூபாய் வழங்கப்படும்”

புதுச்சேரி : ”அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் வழங்கப்படும், பத்து கிலோ இலவச அரிசிக்கு பதிலாக, ரேஷன் கார்டுக்கு 300 ரூபாய் வழங்கப்படும்” என முதல்வர் ரங்கசாமி கூறினார். அவர் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: சென்டாக் உதவித்தொகை வழங்குவதில் உள்ள தடைகள் சரி செய்யப்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனையில் பெற்றுக்கொள்ள முடியாத சிகிச்சைகளை, தனியார் மருத்துவமனையில் பெற்றுக்கொள்ள வழங்கப்படும் 1.5 லட்சம் ரூபாய் மருத்துவ நிதி உதவி, 2 லட்சமாக உயர்த்தப்பட உள்ளது.கல்வீடு கட்டும் திட்டத்தில் உள்ள குளறுபடிகள் சரிசெய்யப்பட்டு நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. அரிசிக்கு பதில் பணம் : மாதந்தோறும் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் வழங்கப்படும், 10 கிலோ இலவச அரிசிக்கு பதிலாக, ரேஷன் கார்டுக்கு 300 ரூபாய், பணமாக வங்கி மூலம் வழங்கப்படும். கடந்த அக்டோபர் மாதம் முதல் வழங்கப்படாமல் உள்ள அரிசிக்கும் சேர்த்து பணம்Read More


Visit Us On FacebookVisit Us On YoutubeVisit Us On Google PlusVisit Us On TwitterVisit Us On Linkedin