Monday, November 27th, 2017

 

 கார்த்திகை தீபத்தன்று சென்னையில் இருந்து திருவண்ணாமலைககு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக மாவட்ட கலெக்டர் கே. எஸ். கந்தசாமி தெரிவித்துள்ளார்.

 திருவண்ணாமலை   கார்த்திகை தீபத்தன்று சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் கலெக்டர் தகவல் திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்தன்று சென்னையில் இருந்து திருவண்ணாமலைககு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக மாவட்ட கலெக்டர் கே. எஸ். கந்தசாமி தெரிவித்துள்ளார்.     திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்தன்று ( டிசம்பர் 2ம் தேதி ) வரும் பக்தர்களின் வசதிக்காக மாவட்ட நிர்வாகத்தின் பரிந்துரையை ஏற்று இந்திய ரயில்வே துறையின் தென்னக பிரிவு  சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும்.     அதன் படி இந்த சிறப்பு ரயில் வருகிற 2ம் தேதி தீபத்தன்று காலை 10மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையதில் இருந்து புறப்படும்.        அதேபோல் அன்று 2ம் தேதி இரவு 10. 30 மணிக்கு திருவண்ணாமலை ரயில் நிலையதில் இருந்து புறப்படும்.


 வெள்ளி கற்பக விருட்ச வாகனத்தில் சுவாமி வீதி உலா.

 வெள்ளி கற்பக விருட்ச வாகனத்தில் சுவாமி வீதி உலா.  திருவண்ணாமலை  அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா கடந்த 23 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. திங்கள் கிழமை ஐந்தாம் நாள் விழாவில் அதிகாலை 3:00 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு. அருணாசலேஸ்வரர் உண்ணாமலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் பூஜை நடந்தது காலை 10:00 மணிக்கு வெள்ளி பல்லாக்கு வாகனத்தில் விநாயகர் மற்றும் சந்திரசேகரர் சுவாமி வீதி உலா நடந்தது .பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்


 திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர் தாலூகா  கிருஷ்ணாபுரம்  முத்துமாரியப்பன் இரத்ததான கழகம் நடத்தும்  மூன்றாம் ஆண்டு மாபெரும் இரத்ததான முகாம்

26-11-2017 ஞாயிறு அன்று திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர் தாலூகா  கிருஷ்ணாபுரம்  முத்துமாரியப்பன் இரத்ததான கழகம் நடத்தும்  மூன்றாம் ஆண்டு மாபெரும் இரத்ததான முகாம்.இம்முகாமானது எங்களது அருமை சகோதரர் நல்உள்ளம் படைத்த நல்லவர் தெய்வதிரு”முத்துமாரியப்பன் அவர்களின் மூன்றாம் ஆண்டு  (“அன்பு தினம்”) நினைவு தினத்தை  முன்னிட்டு மாபெரும் இரத்ததான முகாம் வருடம் வருடம் ஏழைகளின் மருத்துவத்திற்காக திருநெல்வேலி தென்காசி அரசு மருத்துவமனைக்கு வழங்கப்படுகிறது. இம்முகாமில் சுமார் 50பேர் அவர்களின் குருதியே கொடையாக அளித்துள்ளனர் இவர்கள் அனைவருக்கும் முத்துமாரியப்பன் இரத்ததான கழகம் சார்பாக மணமார்ந்த மகிழ்ச்சியினை தெரிவித்துக் கொள்கிறோம் . தானத்தில் சிறந்ததானம்  “இரத்ததானம்” என்பதற்கேற்ப நண்பனின் யாபகமாக இம்முகாமினை நடத்தும் கடையநல்லூர் முத்துநகர் பாய்ஸ் நண்பர்கள், முத்துமாரியப்பன் இரத்ததானகழகம்  ஏழைகளின் மருத்துவத்திற்காக இம்முகாமினை சிறப்பாக ஏற்பாடு செய்தமைக்கு பொதுமக்கள் தங்களின் மகிழ்ச்சியே பகிர்ந்து கொண்டனர். வாழும் போது  இரத்ததானம்..!Read More


தெலுங்கில் பொட்டு படம் 1 கோடிக்கு விற்று சாதனை

 ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம்“ பொட்டு “ இந்த படத்தில் பரத் நாயகனாக நடிக்கிறார்.  நாயகிகளாக நமீதா,இனியா, சிருஷ்டி டாங்கே ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் தம்பி ராமய்யா,பரணி, நான்கடவுள் ராஜேந்திரன்,ஊர்வசி, நிகேஷ்ராம்,ஷாயாஜிஷிண்டே, மன்சூரலிகான்,ஆர்யன், சாமிநாதன்,பாவாலட்சுமணன், பயில்வான் ரங்கநாதன் ஆகியோர் நடிக்கிறார்கள். வசனம்   –  செந்தில்   /   ஒளிப்பதிவு   –   இனியன் ஹரீஷ்                         இசை   –  அம்ரீஷ்   /   பாடல்கள்   –  விவேகா, கருணாகரன்,சொற்கோ,ஏக்நாத்                ஸ்டன்ட்   –  சூப்பர் சுப்பராயன்  /   எடிட்டிங்   –  எலீசா                  Read More


விஜய் மக்கள் இயக்கம்

 விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் கும்முடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டையில் விஜய் மக்கள் இயக்கம்  சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் ஏழை எளிய மக்களுக்கு திருமண உதவி தொகை அரிசி உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் வழங்கப்பட்டது மேலும் அதை தொடர்ந்து பனப்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள அன்பு இல்லத்தில் உள்ள ஆதரவற்ற 50 குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிக‌ள் பலர் கலந்து கொண்டனர்.


Visit Us On FacebookVisit Us On YoutubeVisit Us On Google PlusVisit Us On TwitterVisit Us On Linkedin