Monday, October 23rd, 2017

 

மெர்சல் படத்தை இணையத்தில் பார்த்த எச்.ராஜா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இயக்குனர் கவுதமன் வலியுறுத்தி உள்ளார்.

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அடுத்த கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு எதிராக ஜூலை 1-ந் தேதி முதல் அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கடந்த ஆகஸ்ட் 12-ந் தேதி முதல் கத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் 156-வது நாளாக நேற்று நடைபெற்ற போராட்டத்தில் திரைப்பட இயக்குனர் கவுதமன், மீத்தேன் எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெய ராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.இதன்பின்னர் இயக்குனர் கவுதமன் நிருபர் களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய தாவது:- கதிராமங்கலத்தில் மீண்டும் எண்ணை நிறுவனம் நுழைய அனுமதிக்கமாட்டோம். எங்கள் மண்ணில் சந்தோ‌ஷமாக வாழ்வதற்காக எந்த போராட்டங்களையும் சந்திப்போம். கதிராமங்கலம் பிரச்சினை குறித்து ஐ.நா.சபையில் பேசினேன். மக்களின் நியாயமான கோரிக்கையை தொடர்ந்து புறக்கணித்து வந்தால் தமிழக அரசுக்கு தலைகுனிவை ஏற்படுத்தும். நடிகர் விஜய் நடித்த மெர்சல் படத்தை இண்டர்நெட்டில்Read More


ஆர்.கே. நகர் தொகுதியில் அதிமுகவினரால் 40,000 போலி வாக்காளர்கள் சேர்ப்பு: ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை: ஆர்.கே. நகர் தொகுதியில் அதிமுகவினரால் 40,000 போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் மு.க. ஸ்டாலின் கூறியதாவது: ஆர்.கே நகர் தொகுதியில் இடைத் தேர்தலை நிறுத்திவைப்பதற்கு ரூ. 89 கோடி பணப்பட்டுவாடா நடந்ததுதான் காரணம். இந்த விவகாரத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. ஆர்.கே. நகர் தொகுதியில் பணப்பட்டுவாடாவை பொறுப்பாக செய்து முடித்தவர்கள் பட்டியலில் முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமியின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இருப்பினும் இந்த விகாரத்தில் உருப்படியான எந்த ஒரு நடவடிக்கையுமே எடுக்கப்படவில்லை. இதில் முதல் தகவல் அறிக்கைகூட பதிவு செய்யப்படவில்லை என்பது வேதனையானது. ஆகையால் பணப்பட்டுவாடா புகார் மீது உரிய நடவடிக்கை எடுத்துவிட்டு பின்னரே ஆர்.கே. நகரில் தேர்தலை நடத்த வேண்டும்.Read More


நியூசிலாந்து இமாலய வெற்றி: லதாம் சதம், பவுலட் 4 விக்கெட்

மும்பை: இந்தியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் லதாம் (103*), டெய்லர் (95) கைகொடுக்க 6 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அபார வெற்றி பெற்றது. பவுலட் அபாரமாக பந்து வீசி 4 விக்கெட் வீழ்த்தினார். முன்னதாக 200வது ஒருநாள் போட்டியில் விளையாடிய கேப்டன் விராத் கோஹ்லி சதம் அடித்து சாதித்தார். இந்தியா வநதுள்ள வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி 3 ஒருநாள், 3 ‘டுவென்டி-20’ தொடரில் விளையாட உள்ளது. முதலில் ஒருநாள் தொடர் நடக்கிறது. இதன் முதலாவது ஆட்டம் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று பகலிரவு ஆட்டமாக நடந்தது. ‘டாஸ்’ வென்ற இந்திய கேப்டன் விராத் கோஹ்லி முதலில் ‘பேட்டிங்கை’ தேர்வு செய்தார். இந்திய அணியில் ரகானே, மணிஷ் பாண்டே இருவருக்ஓகம் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதே நேரம் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் அணியில் இடம் பெற்ரார்.Read More


23.10.2017 பருப்பு மற்றும் மாவு, எண்ணெய் வகைகள் மொத்த விலை

சென்னை: கீழ்க்காணும் பருப்பு மற்றும் மாவு, எண்ணைய் வகைகளின் இன்றைய மொத்தவிலை விபரம் தரப்பட்டுள்ளது. விலை ஒரு குவிண்டால் (100 kg) அளவில் குறிப்பிடப்பட்டுள்ளது. துவரம் பருப்பு ரூ. 7,000 உளுந்து பருப்பு ரூ 7,500 பாசிப் பயறு ரூ. 7,000 பச்சைப் பயறு ரூ. 6,900 சர்க்கரை ரூ, 4,000 கோதுமை ரூ 2,500 மைதா (90 கிலோ) ரூ. 2,600 சுஜி (90 கிலோ) ரூ. 3,200 நிலக்கடலை பருப்பு (80 கிலோ) ரூ.4300 / 4360 கடலை எண்ணெய் (10 கிலோ) ரூ. 1,170 நிலக்கடலை புண்ணாக்கு (80 கிலோ) ரூ. 1975 நல்லெண்ணெய் (10 கிலோ) ரூ. 1,350 விளக்கெண்ணெய் (100 கிலோ) ரூ. 11,300 தேங்காய் எண்ணெய் (15 கிலோ) ரூ. 2,700.00 / 3030.00 வனஸ்பதி (15 கிலோ)Read More


23-10-2017 கோயம்பேடு மார்க்கெட் காய்கறி மொத்தவிலை

சென்னை சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் காய்கறிகளின் இன்றைய விலை விவரம் குறைந்தபட்ச விலை  ரூ. பை அதிகபட்ச விலை  ரூ. பை தக்காளி                                   35.00 50.00 தக்காளி நவீன்        40.00 50.00 உருளை  10.00 15.00 வெங்காயம்  20.00 40.00 சாம்பார் வெங்காயம்      80.00 110.00 கத்தரி                      15.00 35.00 கோஸ்                    24.00 26.00 பீன்ஸ்                      50.00 70.00 நாட்டு அவரை          50.00 70.00 கேரட்                      45.00 65.00 முல்லங்கி                30.00 40.00 வெண்டை                                 15.00 20.00 முருங்கை                80.00 100.00 பீட்ரூட்                    25.00 35.00 பாகல்                      12.00 18.00 புடலை                    15.00 20.00 கறி மிளகாய்            70.00 100.00 ஊசி மிளகாய்          28.00 45.00Read More


கந்து வட்டி கொடுமை குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத சோகத்தில் 4 பேர் தீக்குளிப்பு

சென்னை: கந்து வட்டி கொடுமை குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத சோகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் இன்று தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டனர். திருநெல்வேலி மாவட்டம்  காசிதர்மம் கிராமத்தை சேர்ந்தவர் இசக்கி முத்து. இவருடைய மனைவி சுப்பு லட்சுமி. இவர்கள் அதே கிராமத்தை சேர்ந்த ஒருவரிடம் கந்துவட்டிக்கு பணம் வாங்கி இருந்தனர்.  வாங்கிய பணத்திற்கும் அதிகமாகவே வட்டி கட்டி விட்டனர். இருந்தும் அந்த நபர்  தொடர்ந்து வட்டி கேட்டு இசக்கி முத்து குடும்பத்திற்கு தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இது குறித்து போலீசில் புகார் அளித்தும்  போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக, இசக்கி முத்து குடும்பத்தை மிரட்டி உள்ளனர். இந்த நிலையில்,  இன்று காலை இசக்கி முத்து, சுப்புலட்சுமி தம்பதிகள் தங்கள் 2 குழந்தைகளுடன்  நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். குறைதீர்க்கும்Read More


ஷின்சோ அபேயின் சுதந்திர ஜனநாயக கட்சி தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது.

புதுடில்லி: ஜப்பானில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட ஷின்சோ அபேயின் சுதந்திர ஜனநாயக கட்சி தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது. பிரதமர் ஷின்சோ அபே கடந்த மாதம் 28ஆம் தேதி பாராளுமன்றத்தை (பிரதிநிதிகள் சபை) கலைத்து உத்தரவிட்டார். இதனால் பிரதிநிதிகள் சபைக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. மொத்தமுள்ள 465 இடங்களில் சுமார் 1,200 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அதில் 312 இடங்களில் ஷின்சோ அபே கட்சி வெற்றி பெற்றது. மூன்றில் இரண்டு பங்கு இடம் கிடைத்துள்ளது என்பதால் சுதந்திர ஜனநாயக கட்சி தலைமையிலான கூட்டணி ஆட்சியை அமைக்கவுள்ளது. தேர்தலில் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்து ஷின்சோ அபே பேசினார். ”ஜப்பான் மக்களிடையே அமைதி மற்றும் செழிப்பை நிலைநாட்ட பாடுபடுவேன். வடகொரியா தொடர்ந்து நடத்தும் அணு ஆயுத ஏவுகணை சோதனைகள் ஆகியவற்றை முடிவுக்கு கொண்டுவர தீர்க்கமான மற்றும் வலுவானRead More


இப்போதைக்கு ஆக்டிங்! – அக் ஷாரஹாசன்

‘விவே­கம்’ மூலம் தமிழ் சினி­மா­வுக்கு நடி­கை­யாக அறி­மு­க­மா­கி­றார் அக் ஷரா­ஹா­சன். அவரை சந்­தித்த போது.. * மும்பை பொண்­ணா­கவே இருக்கீங் களே? சென்­னை­யில்­தான் பிறந்­தேன். இங்­க­தான் படிச்­சேன். அப்­பு­றம்­தான் பெங்­க­ளூரு. படிப்பை பாதி­யிலே நிறுத்­திட்டு டான்ஸ் கத்­துக்க போயிட்­டேன். பக்கா தமிழ் பொண்­ணு­தான். அம்­மா­வுக்கு துணையா மும்­பை­யிலே இருக்­கேன். என் கேரி­ய­ருக்­கும் மும்பை சரி­யாக இருக்­கும் என்­ப­தால் அங்கு இருக்­கி­றேன். * ‘பார்ன் இன் சில்­வர் ஸ்பூ’னா இருந்­தா­லும் வெயில், மழை­யிலே கேம­ராவை துாக்­கிக்­கிட்டு அலை­யு­றீங்க…? வச­தி­யான குடும்­பத்­தில் பிறந்­தா­லும், நீ வீட்­டி­லேயே இருந்­தால் உல­கத்தை கத்­துக்க முடி­யாது, கஷ்­டப்­பட்டு எல்லா விஷ­யத்­தை­யும் புரிஞ்­சுக்­க­ணும்னா வெயி­லும், மழை­யும் உனக்கு நெருக்­கமா இருக்­க­ணும்னு அப்பா சொல்லி சொல்லி வளர்த்­தாங்க. நான் அப்பா மாதிரி. அவர் நடிக்க வர்­ற­துக்கு முன்­னாடி நட­னக் கலை­ஞரா, உதவி இயக்­கு­நரா இருந்து எல்லா டெக்­னிக்­கு­க­ளை­யும்Read More


ஆந்­தி­ரா­வின் புகழ்­பெற்ற சினிமா குடும்­ப­மான அக்­னி­நேனி நாகேஸ்­வ­ராவ் குடும்­பத்­தின் மரு­ம­க­ளாகி விட்­டார் சமந்தா

தமிழ்­நாட்டை சேர்ந்த சமந்தா, ஆந்­தி­ரா­வின் புகழ்­பெற்ற சினிமா குடும்­ப­மான அக்­னி­நேனி நாகேஸ்­வ­ராவ் குடும்­பத்­தின் மரு­ம­க­ளாகி விட்­டார். நாக­ சை­தன்யா, சமந்தா திரு­ம­ணம் கடந்த சில நாட்­க­ளுக்கு முன்பு கோவா­வில் கோலா­க­ல­மாக நடந்­தது. இந்த மண­நா­ளில் மண­மே­டை­யில் சமந்தா கண்­ணீர்­விட்டு அழு­தார். இது பல­ருக்கு அதிர்ச்­சி­யாக இருந்­தது. தற்­போது தான் மண­மே­டை­யில் அழு­தது ஏன் என்­பது குறித்து விளக்­கம் அளித்­துள்­ளார். ”நான் சினி­மா­வில் நடிக்க வந்­த­போது பணம் இல்­லா­மல் கஷ்­டப்­பட்­டேன். நான் நடித்த படங்­கள் வெற்றி பெற்ற பிறகு நிறைய வாய்ப்­பு­கள் வந்­தன. பண­மும் சேர்ந்­தது. சில தவ­று­கள் செய்­தி­ருக்­கி­றேன். பிறகு அதை சரி­செய்து விட்­டேன். மற்­ற­வர்­க­ளுக்கு உத­வி­யி­ருக்­கி­றேன். இவை­யெல்­லாமே நாக சைதன்­யா­வுக்கு தெரி­யும். இப்­படி என் வாழ்க்­கையை முழு­மை­யாக தெரிந்த ஒரு­வர் கண­வ­ராக அமைந்­ததை நினைத்துத்தான் மண­மே­டை­யில் அழு­தேன். திரு­ம­ணத்­துக்கு பிறகு நடிக்­கக்­கூ­டாது என்று கண­வர் குடும்­பத்­தில்Read More


சிம்பு புராணம் பாடும் சந்தானம் வைபவி

வி.டி.வி. கணேஷ் தயா­ரிப்­பில் சந்­தா­னம், வைபவி சாண்­டில்யா கதா­நா­ய­கன் – கதா­நா­ய­கி­யாக நடிக்க, முக்­கிய பாத்­தி­ரத்­தில் விவேக்­கும் நடித்­தி­ருக்­கும் படம் ‘சக்க போடு போடு ராஜா.’ ‘லொள்ளு சபா’ புகழ் சேது­ரா­மன் முதன்முத­லாக இயக்­கி­யி­ருக்­கும் இந்த படத்­திற்கு சிம்பு இசை­ய­மைத்­துள்­ளார். இந்த படத்­தின் டிரெய்­லர் வெளி­யீட்டு விழா சமீ­பத்­தில் சென்­னை­யில் நடை­பெற்­றது. சந்­தா­னம் பேசும் போது, ‘‘என்னை எப்­போ­தும் விட்­டுக்­கொ­டுக்­காத என் நண்­பன் ஆர்யா இங்கு வந்­தி­ருக்­கி­றார். ஆர்யா கூட நடிக்­கும் போது­தான் எனக்கு ஹெல்த் கான்­சி­ய­ஸ் வந்­தது. இந்த படத்­திற்கு நானும், விடிவி கணே­ஷும் இசை­ய­மைப்­பா­ள­ராக ஹாரிஸ் ஜெய­ராஜை போட­லாம் என்று முடிவு செய்து அவரை போய் பார்த்­தோம். அப்­போது அவர் ரொம்­ப­வும் பிசி­யாக இருந்­த­தால் வேறு யாரை இசை­ய­மைப்­பா­ளராக போட­லாம் என்று யோசித்த போது, விடிவி கணேஷ் சிம்­புவை டிரை பண்­ண­லாம் என்­றார். ஹீரோவாRead More


Visit Us On FacebookVisit Us On YoutubeVisit Us On Google PlusVisit Us On TwitterVisit Us On Linkedin