Wednesday, April 12th, 2017

 

Regina Cassandra launches The Label Bazaar

    


மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரம் அபராதம்

புதுடெல்லி: மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்க வகை செய்யும் மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதா பாராளு மன்றத்தில் நிறைவேறியது. வாகன ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கான சட்ட விதிமுறைகளில் பல மாற்றங்களை செய்ய மத்திய அரசு முடிவு செய்து உள்ளது. சில விதி முறைகள் கடுமையாக்கப்பட்டு ஓட்டுனர் உரிமம் வழங்குவது தொடர்பான பணிகள் கம்ப்யூட்டர் மயமாக்கப்படுகின்றன. இதற்காக மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டு உள்ளன. இந்த மசோதா தொடர்பாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்ட 20-க்கும் மேற்பட்ட திருத்தங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. பாராளுமன்ற நிலைக்குழு தெரிவித்த சில யோசனைகளும் மசோதாவில் சேர்க்கப்பட்டன. இந்த திருத்த மசோதா, மோட்டார் வாகன விதிகளை மீறுவோருக்கு கூடுதல் அபராதம் விதிக்க வகை செய்கிறது.அதன்படி மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவோருக்கு விதிக்கப்படும் அபராதம் ரூ.2 ஆயிரத்தில் இருந்துRead More


மர்மமாக இறந்த நடிகர் கலாபவன்மணி வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க கேரள ஐகோர்ட்டு உத்தரவு

கேரள திரையுலகின் முன்னணி நடிகராக திகழ்ந்தவர் கலாபவன் மணி. இவர் கொச்சியில் உள்ள அவரது பண்ணை வீட்டில் கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் 6-ந்தேதி மர்மமான முறையில் இறந்தார்.இதபற்றி கேரள போலீசார் விசாரணை நடத்தினர். அவரது சாவில் மர்மம் இருப்பதாக மனைவி மற்றும் உறவினர்கள் புகார் கொடுத்தனர். அதன் பேரில் கலாபவன் மணியின் உடல் உறுப்புகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. அதில் பூச்சிக்கொல்லி மருந்து இருந்தது தெரிய வந்தது.இதையடுத்து இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டுமென கலாபவன் மணியின் சகோதரர் ராமகிருஷ்ணன் கோரிக்கை விடுத்தார். இதுபற்றி மாநில அரசுக்கும் மனு கொடுத்தார். இது தொடர்பாக சி.பி.ஐ. தரப்பில் கூறும்போது, தங்களுக்கு ஏராளமான வழக்குகளின் விசாரணை நிலுவையில் இருப்பதால் இப்போது இந்த வழக்கை விசாரிக்க இயலாது என்று தெரிவித்தனர்.இதையடுத்து கலாபவன் மணியின் சகோதரர் ராமகிருஷ்ணன், கேரள ஐகோர்ட்டில் மனுRead More


ஆர்.கே.நகர் தேர்தலில் முறைகேடு: கவர்னரிடம் தி.மு.க. புகார் மனு

சென்னை: ஆர்.கே.நகரில் இன்று நடைபெறுவதாக இருந்த இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா காரணமாக ரத்து செய்யப்படுவதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த நிலையில் தி.மு.க. முதன்மைச் செயலாளர் துரைமுருகன், அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, திருச்சி சிவா எம்.பி. ஆகியோர் மும்பை சென்று தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவை நேரில் சந்தித்து புகார் மனு கொடுத்தனர். அதில் கூறி இருப்பதாவது:- ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. அம்மா அணி சார்பாக போட்டியிட்ட டி.டி. வி.தினகரன் தொகுதியில் பிரசாரத்தை தொடங்கிய நாள் முதல் வாக்காளர்களுக்கு பல வழிகளில் பணப்பட்டுவாடா செய்துள்ளார். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்களோடு சேர்ந்து குறிப்பாக விஜயபாஸ்கருடன் கைகோர்த்து தொகுதியில் உள்ள ஒவ்வொரு வாக்காளரின் வாக்குகளையும் பணம் கொடுத்து விலைக்கு வாங்கும் வகையில் ரூ.100 கோடிக்குRead More


Thiru. Edappadi K. Palaniswami, Hon’ble Chief Minister of Tamil Nadu to Mrs.M.Kanmani, W/o Thiru. S.Murugaia IAS.

“I was grieved to learn about the sudden demise of your beloved husband Thiru. S.Murugaia IAS., on 11.4.2017. Although no words of solace would really be adequate in such circumstances, I wish to share your grief by conveying my deepest condolences to you and to all the other members of your family. I pray that the Almighty may give you the strength and fortitude to withstand this personal sorrow.


தொழிற்சாலை தீர்ப்பாயம் மற்றும் தொழிலாளர் நீதிமன்றத்தின் குறைதீர்ப்பு நாள்

சென்னை சாஸ்திரி பவனில் உள்ள தொழிற்சாலை தீர்ப்பாயம் மற்றும் தொழிலாளர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்காக குறைதீர்ப்பு நாள் நடத்தப்படவுள்ளது. இந்த நிதி ஆண்டில் நடத்தப்படும் குறை தீர்ப்பு நாட்களின் அட்டவணை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. வழக்குகள் நிலுவையில் உள்ள தொழிலார்கள்/நிர்வாகங்கள் தீர்ப்பாயத்தை வேலை நாட்களில் அணுகி தங்களின் குறிப்பாணையை சமர்ப்பிக்கலாம். அவர்களின் வழக்குகள் கொடுக்கப்பட்டுள்ள குறைத்தீர்ப்பு நாட்களில் விசாரிக்கப்படும். முடிவெடுக்கக் கூடிய அல்லது உடன்படிக்கை கொண்டுவரக்கூடிய அதிகாரம் உள்ள தொழிலாளர்கள்/அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள்/ நிர்வாக பிரதிநிதிகள்  குறைதீர்ப்பு நாளன்று தவறாமல் பங்கேற்க வேண்டும் குறைதீர்ப்பு நாள் அட்டவணை மாதம் தேதி ஏப்ரல் 2017 28.04.2017 மே 2017 31.05.2017 ஜூன் 2017 30.06.2017 ஜூலை 2017 31.07.2017 ஆகஸ்ட் 2017 31.08.2017 செப்டம்பர் 2017 29.09.2017 அக்டோபர் 2017 31.10.2017 நவம்பர் 2017 30.11.2017 டிசம்பர் 2017 29.12.2017Read More


ஆஸ்திரேலிய பிரதமர் இந்தியாவிற்கு வருகை

புது தில்லி ஏப்ரல் 10, 2017 மாண்புமிகு பிரதமர் திரு மால்கம் டர்ன்புல் அவர்களே, ஊடக நண்பர்களே,  வணக்கம்! இந்தியாவுக்கு முதல் முறையாக வருகைதரும் உங்களை வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். கடந்த மாதம் பார்டர் – கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் போட்டியைக் கண்டு களித்தோம்.  2014ம் ஆண்டு ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் நான் உரையாற்றியபோது, ஆஸ்திரேலியாவின் பழம்பெரும் வீரர் பிராட்மேன், இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆகியோரை நினைவுகூர்ந்தேன். இன்று இந்தியாவில் விராட் கோலியும் ஆஸ்திரேலியாவில் ஸ்டீபன் ஸ்மித்தும் இளம் கிரிக்கெட் வீரர்களைச் செதுக்குகிறார்கள். உங்களது இந்திய வருகை ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணித் தலைவர் ஸ்டீபன் ஸ்மித்தின் பேட்டிங் ஆட்டத்தைப் போல ஆக்கப்பூர்வமாக அமைந்திருக்கும் என நம்புகிறேன். மாண்புமிகு பிரதமர் அவர்களே! ஜி-20 மாநாட்டை ஒட்டி நாம் மேற்கொண்ட சந்திப்புகளை நினைவுகூர்கிறேன். அந்த மாநாடுகளின் போதெல்லாம் வலுவான கூட்டமைப்பு உணர்வும், நோக்கமும் பிரதிபலிக்கும்.Read More


அனுமான் ஜெயந்தி – பிரதமர் வாழ்த்து

புது தில்லி ஏப்ரல் 11, 2017  அனுமான் ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். “हनुमान जयंती की सभी देशवासियों को बहुत-बहुत शुभकामनाएं,” என்று பிரதமர் கூறியுள்ளார்.


மகாத்மா பூலே பிறந்த நாள் – பிரதமர் மரியாதை அஞ்சலி

மகாத்மா பூலே பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.மகாத்மா பூலே பிறந்த நாள் அன்று நான் அவருக்கு தலை வணங்குகிறேன்.  சமூக சீர்திருத்தம், பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் மற்றும் கல்வித் துறைக்கான அவரின் சுயநலமற்ற முயற்சிகள் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தின என்று பிரதமர் கூறியுள்ளார்.


கடன் வாங்கி செலவழித்த அமைச்சர்கள் பரிதவிப்பு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், தினகரனை வெற்றி பெற வைப்பதற்காக, கடன் வாங்கி செலவழித்த அமைச்சர்கள், தேர்தல் ரத்து செய்யப்பட்டதால், கடன் தொகையை எண்ணி கலக்கத்தில் உள்ளனர். ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில், அ.தி.மு.க., – சசிகலா அணி சார்பில், தினகரன் போட்டியிட்டார். அவர் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, பணத்தை வாரி இறைத்தனர். பெரும் தொகை : அதற்காக, ஒவ்வொரு அமைச்சரும், குறிப்பிட்ட தொகை தர வேண்டும் என, தினகரன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, அமைச்சர்கள் கோடிக்கணக்கில் பணம் வழங்கி உள்ளனர். பல ஆண்டுகளாக அமைச்சர்களாக இருந்தவர்கள், சிரமம் இன்றி, கேட்ட தொகையை கொடுத்து விட்டனர். புதிதாக அமைச்சரானவர்களோ, கடன் வாங்கி தந்துள்ளனர். மேலும்,தொகுதியில் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில், கட்சி நிர்வாகிகளுக்கும், பிரசாரத்திற்கும் பெரும் தொகையை செலவழித் துள்ளனர். அனைத்து அமைச்சர்களும், தங்கள் பங்கு தொகையை, அமைச்சர் விஜயபாஸ்கரிடம் கொடுத் துள்ளனர்.Read More


Visit Us On FacebookVisit Us On YoutubeVisit Us On Google PlusVisit Us On TwitterVisit Us On Linkedin