February, 2017

 

குஜராத் இனப்படுகொலை 15 ஆண்டுகள் நிறைவு – நீதி வேண்டி எஸ்.டி.பி.ஐ சார்பில் சென்னையில் கருத்தரங்கம்!

குஜராத்தில் 2002-ம் ஆண்டு நடைபெற்ற இனப்படுகொலைக்கு 15 ஆண்டுகள் கழிந்த பிறகும் நீதி வழங்கப்படாததால், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி வேண்டி எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் சென்னையில் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி தலைமையில் மாபெரும் கருத்தரங்கம் நடைபெற்றது.   இந்நிகழ்ச்சிக்கு கட்சியின் மாநில செயலாளர் டி. ரத்தினம், மாநில பொருளாளர்  எம். முகைதீன், மாநில ஊடக ஒருங்கிணைப்பாளர் ஏ.கே. கரீம், மாநில செயற்குழு உறுப்பினர் சாமுவேல் பால், SDTU தொழிற்சங்கம் மாநில தலைவர் முகமது ஃபாரூக், ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சியின் மாநில பொதுச் செயலாளர் எம். நிஜாம் முகைதீன் வரவேற்றார். தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில துணை செயலாளர் மோ. வீரபாண்டியன், திராவிட கழக மாநில துணைத் தலைவர் கவிஞர் .கலி பூங்குன்றன்,என்.சி.ஹெச்.ஆர்.ஓ தேசியத் தலைவர் பேராசிரியர். அ. மார்க்ஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில துணை பொதுச் செயலாளர் பாலாஜி, பாப்புலர் ஃப்ரணட் மாநிலRead More


ஒருநாள் போட்டியில் தொடர்ந்து நான்கு சதம் அடித்து சாதனைப் படைத்த நியூசிலாந்து

 நியூசிலாந்து – ஆஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி ஆக்லாந்தில் இன்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 275 ரன்கள் குவித்தது. அந்த அணியின் தொடக்க வீராங்கனை பெத் மூனே சரியாக 100 ரன்கள் சேர்த்தார். பின்னர் 276 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது நியூசிலாந்து. அந்த அணியின் எமி சாட்டர்த்வைட் அவுட்டாகாமல் 102 ரன்கள் எடுத்ததன் மூலம் 49.1 ஓவரில் 276 ரன்கள் எடுத்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றது


ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆவேசம்

ஜெயலலிதா குறித்த கருத்துக்கு தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஊரக வளர்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறியுள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த தினத்தையொட்டி தமிழக அரசின் சார்பில் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கிவைத்தார்.  இதையடுத்து, சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட குற்றவாளி ஒருவரின் பெயரில் அரசுத் திட்டங்கள் தொடங்குவதை ஏற்க முடியாது என தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், மு.க.ஸ்டாலின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள ஊரக வளர்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ”ஜெயலலிதா குறித்த கருத்துகளுக்காக ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும். குறுக்கு வழியில் தி.மு.க ஆட்சியை பிடிக்க துடிக்கிறது” என ஆவேச கருத்துக்களை தெரிவித்துள்ளார்.


கேள்வித்தாள் வெளியானதால் ராணுவ ஆள்சேர்ப்பு தேர்வு ரத்து


வாட்ஸ்-அப்பில் என்னை சீண்டினால் பொறுத்து கொள்ள மாட்டேன்: கே.ஏ.செங்கோட்டையன் ஆவேசம்

 என்னைப் பற்றி வாட்ஸ் அப்பில் தவறான செய்திகளை பரப்பி வருகின்றனர். என்னை சீண்டினால் பொறுத்து கொள்ள மாட்டேன் என்று செங்கோட்டையன் பேசினார்


Thiru Edappadi K.Palaniswami, Hon’ble Chief Minister of Tamil Nadu to Shri Narendra Modi, Hon’ble Prime Minister of India, New Delhi.

I am constrained to bring to your notice about the recent reports in the media that the Government of Karnataka has decided to implement Rs.5912 crore Mekedatu Multipurpose (drinking and power) Project across the river Cauvery that involves building a Balancing reservoir with a capacity of 66 TMC ft. The reports also state that the Government of Karnataka has proposed to approach the Central Water Commission as well as the Supervisory Committee of the Supreme Court and the Ministry of Environment, Forest and Climate Change for their clearances. This reportRead More


காம்பியாவின் புதிய அதிபர் திரு.அடாமா பாரோவிற்கு பிரதமர் வாழ்த்து

பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள், காம்பியாவின் புதிய அதிபர் திரு. அடாமா பாரோ அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். “திரு. அடாமா பாரோ அவர்களுக்கு வாழ்த்துகள். காம்பியாவின் வேகமான மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு அவருடன் இந்தியா என்றும் துணை நிற்கும்”, என பிரதமர் தெரிவித்துள்ளார்.


ராஜஸ்தான் மற்றும் மேற்குவங்கத்தில் உள்ள செயற்கைக்கோள் மையங்களுடன் மத்தியப்பிரதேச மாநிலத்தின் அம்லாஹா பகுதியில் உணவு தானியங்கள் ஆய்வு அமைப்பை ஐ.சி.ஏ.ஆர்.டி.ஏ. அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் கீழ்க்காணும் நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. (அ) ராஜஸ்தான் (இயற்கை வள மேலாண்மைக்கு), மேற்குவஙகத்தில் (பருப்பு வகைகளுக்கு) உள்ள செயற்கைக்கோள் மையங்களுடன் மத்தியப்பிரதேச மாநிலம், சேகூர், அம்லாஹா-வில் உணவு தானியங்கள் ஆய்வு அமைப்பை (FLRP) இரண்டாவது கட்டமாக வறண்ட பகுதிகளில் வேளாண்மை ஆய்வுக்கான சர்வதேச மையம் (ICARDA) அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. (ஆ) சேகூரின் அம்லாஹா பண்ணையில் உள்ள நிலத்தை (70.99 ஹெக்டேர்கள், 175.42 ஏக்கர்) மத்தியப் பிரதேச அரசு வழங்கும். இதற்காக ஏக்கருக்கு ஆண்டுக்கு ரூ.1 என்ற அடிப்படையில், 30 ஆண்டுகளுக்கு மத்தியப்பிரதேச அரசுடன் குத்தகை ஒப்பந்தம் கையெழுத்திடப்படும். இதனைத் தொடர்ந்து, மத்தியப்பிரதேசத்தில் உணவு தானியங்கள் ஆய்வு அமைப்பை (FLRP) ஏற்படுத்துவதற்காக இந்த நிலம், ICARDA-க்கு குத்தகைக்கு விடப்படும்.   (இ) ஐக்கிய நாடுகள் (உரிமைகள்Read More


ஐக்கிய அமெரிக்க சட்டமன்ற பிரமுகர்களுடன் பிரதமர் சந்திப்பு

ஐக்கிய அமெரிக்க சட்டமன்றத்தின் இருகட்சி சார்ந்த 26 பிரமுகர்கள் பிரதமர் திரு. நரேந்திர மோடியை இன்று சந்தித்து பேசினர். இந்தியாவிற்கு வருகை தந்துள்ள சட்டமன்ற பிரதிநிதிகளை பிரதமர் வரவேற்றார். புதிய ஐக்கிய அமெரிக்க அரசும் நாடாளுமன்றமும் பொறுப்பேற்றுள்ள இந்த தருணத்தில் இருதரப்பு பரிமாற்றத்திற்கு இந்த பயணம் நல்ல தொடக்கம் என்று பிரதமர் கூறினார். அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் தான் மேற்கொண்ட உரையாடலை நினைவு கூர்ந்த பிரதமர் கடந்த இரண்டரை ஆண்டுகளாக வலுவடைந்து வரும் இந்திய-அமெரிக்க உறவினை மேலும் வலுப்படுத்த தாங்கள் மேற்கொண்ட உறுதியையும் நினைவு கூர்ந்தார். இது தொடர்பாக, இந்தியா-அமெரிக்க உறவிற்கு வலுவான ஆதரவு அளித்து வரும் சட்டமன்றத்தின் இருகட்சிக்கும் பிரதமர் நன்றி தெரிவித்தார். இரு நாடுகளும் எந்தெந்த துறைகளில் இன்னும் நெருக்கமாக இணைந்து பணிபுரிய முடியும் என்ற தனது கண்ணோட்டத்தை பிரதமர் பகிர்ந்து கொண்டார். இரு நாடுகளின்Read More


கேரளா திருவல்லாவில் ஸ்ரீ ராமகிருஷ்ண வசனாம்ருத சத்திரத்தின் துவக்கவிழாவில் காணொளி காட்சி மூலமாக பிரதமர் ஆற்றிய உரை

இங்கு கூடி இருக்கும் சுவாமி நிர்வினானந்தா மற்றும் ஸ்ரீ ஸ்ரீ தாகூர் ராமகிருஷ்ண பரமஹம்சாவின் சீடர்கள் அனைவருக்கும் வணக்கம். ஸ்ரீ ராமகிருஷ்ண வசனாம்ருத சத்திரம் எனும் 7 நாள் நிகழ்ச்சியின் துவக்கத்தில் உங்களுடன் கலந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். வங்காளத்தின் பெருமைமிக்க ஒருவரின் வார்த்தைகள் மலையாளத்தில் மொழி பெயர்க்கப்பட்டு, இங்கு அது வாசிக்கப்பட்டும் விவாதிக்கப்பட்டும் வருவதோடு, நாடு முழுதும் எடுத்துச் செல்லப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது.  ஒரே இந்தியா, வலிமைமிகு இந்தியா என்பதற்கு இதைவிட வேறென்ன சான்று வேண்டும். எளிமையான மக்களுக்கும் பெரிய குருக்களின் வார்த்தைகள் சென்று சேர வேண்டும் என்கிற உங்களின் பணி நீண்டதொரு பாரம்பரியத்தின் பகுதி. இந்தியாவில் வாய்மொழியாக இந்த பண்பாடு பல்வேறு நூற்றாண்டுகளாக, காலமாற்றங்கள், சூழ்நிலை மாற்றங்கள் தாண்டியும் இருந்துள்ளது. ஸ்ருதிகளில் இருந்து ஸ்ம்ரிதி வரை இந்த பாரம்பரியம் வளர்ச்சி பெற்றது. ஸ்ருதிகள், நான்கு வேதங்கள், உபனிதசங்கள் ஆகியவை தர்மாக்களின் ஊற்றாக இருக்கின்றன; Read More


Visit Us On FacebookVisit Us On YoutubeVisit Us On Google PlusVisit Us On TwitterVisit Us On Linkedin