June, 2016

 

சென்னையில் குழந்தையின்மைக்கு 30-40% ஆண்காரணமாக இருப்பதாகக்கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

29 வயதுராதாவும் (பெயர்மாற்றப்பட்டுள்ளது),அவள்கணவர்ஸ்ரீநிவாஸும்(35) மென்பொருள் பொறியாளர்கள். அவர்கள் குழந்தைப் பெற்றுக்கொள்ள இது சரியான தருணம் என்று முடிவு செய்தபோது, அவர்களுக்காக ஒரு அதிர்ச்சிகாத்திருந்தது. பல்வேறு உடல் நலபரிசோதனைகளை செய்து கொண்டபிறகு அவர்கள் இறுதியாக கருத்தரிப்புத்திறன் பரிசோதனையை செய்து கொள்ள முடிவு செய்தனர். ராதாவின் ரிப்போர்ட்களில் எந்தப்பிரச்னையும் இல்லை. ஆனால், ஸ்ரீநிவாஸுக்கு விந்தணுக்கள் எதுவும் இல்லை என்று கண்டுபிடிக்கப்பட்டது, இந்த ஆண் மலட்டுத்தன்மை அஸூஸ்பேர்மியா எனப்படும், மற்றபடி அவர் முற்றிலும் ஆரோக்கியமாக இருந்தார். மலட்டுத்தன்மை ஆண்களையும் பெண்களையும் சமமாகபாதிக்கிறது. சில மருத்துவர்கள் மலட்டுத் தன்மையை பெண்களுக்கு இருக்கும் பிரச்னை என்கிற தவறான எண்ணத்தைக் கொண்டுள்ளனர். ஆண் மலட்டுத்தன்மை அதிகரித்துள்ளது, அதிலும்மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறையை வாழும்மக்கள் இருக்கும் நகரங்களில் இது மிகவும் அதிகம். பல ஆண் கருவள பிரச்னைகள் கண்டுபிடிக்கப்படாமலும் சிகிச்சையளிக்கப்படாமலும் போவதற்குகாரணம் அவர்களின் மனைவியிடம் தான்பிரச்னைRead More


டான் பாஸ்கோ தொழில்நுட்ப வளாகத்தில் ஆய்வுக்கூடத்துடன் கூடிய பயிற்சியகத்தை திறந்தது, பன்னாட்டு நிறுவனமான ஜிவிக் ரோயல்!

தர பரிசோதனை கருவிகளை தயாரிப்பதில் சர்வதேச அளவில் தலைசிறந்து விளங்கும் ஜிவிக் ரோயல் குழுமம் (Zwick Roell Group), ஜெர்மனியில் உள்ள டான் பாஸ்கோ மோண்டோ இ.வி. (Don Bosco Monto e.V.) அமைப்பின் வாயிலாக சென்னை, பேசின் பிரிட்ஜ் பகுதியில் இயங்கி வரும் டான் பாஸ்கோ தொழில்நுட்ப வளாகத்தில் (Don Bosco Tech Campus) நவீன பரிசோதனைக் கூடம் ஒன்றை நிறுவியுள்ளது. இங்கு ஜிவிக் ரோயல் அகாடமி (Zwick Roell Academy) உதவியுடன் நவீன உயர் தொழில்நுட்ப இயந்திரங்கள் வாயிலாக, ஏழை மாணவர்களுக்கு பொருள் தர பரிசோதனையில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. உலோகங்களையும், பிளாஸ்டிக்குகளையும் பரிசோதிக்கும் ஜிவிக் மெஷின் ஆப்ரேட்டராக அவர்களை உருவாக்குவதன் மூலம் அவர்கள் நல்லதொரு வேலையை பெற்று வாழ்க்கை தரத்தை உயர்த்தி கொள்ள வழி வகுப்பதே ஜிவிக் ரோயல் குழுமத்தின் நோக்கமாகும். இதுRead More


செல்போன் பயன்பாட்டில் ஒரு சிறந்த அனுபவம் ஒன்பிளஸ் 3 ஸ்மாா்ட் போன் அறிமுகம்.

துாிதமாக சாா்ஜ்ஜ் செய்யும் தொழில் நுட்பம், துறையில் முன்னிலை வகிக்கும் 6 ஜி.பி ரேண்டம் அக்சஸ் மெமாி, முழுவதும் அலுமினிய பாடி வடிவமைப்பு. சென்னை ஜூன் 30 உலக அளவில் செல்போன் சேவையில் களம் இறங்கியுள்ள ஒன்பிளஸ் நிறுவனம், ஒன்பிளஸ் 3 ஸ்மாா்ட் போனை அறிமுகம் செய்துள்ளது. இது நீண்டகாலமாக எதிர்பார்க்ககப்பட்ட இந்நிறுவனத்தின் முக்கிய ஸ்மாா்ட் போன்  வாடிக்கையாளருக்கு சிறந்த ஸ்மாா்ட் போன் அனுபவத்தை அளிக்க வேண்டும் என்பது ஒன்பிளஸ் நிறுவனத்தின் லட்சியம்.இது நிறைவேறும் வகையில் இந்த உயர்தர ஸ்மாா்ட் போனில் சிறந்த தொழில் நுட்பம் வடிவமைப்பு மற்றும் புத்தாக்கம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.


உலகிலேயேமிகமெல்லிய,நவீனதொழில்நுட்பத்திலான டி.வி.யை தமிழகத்தில் அறிமுகப்படுத்துகிறது,ஸ்கைவொர்த்நிறுவனம்!

உலகில் ஐந்தாவது முன்னனி தொலைக்காட்சி பெட்டி நிறுவனங்களுள் ஒன்றாக திகழும் ஸ்கைவொர்த் இந்தியா எலக்ட்ரானிக்ஸ் (Skyworth India Electronics), நவீன தொழில்நுட்பத்திலான ஏர்டி.வி.யினை (AIR TV) தமிழகத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. 55G7200 சீரிஸின் ஒரு அங்கமாக வெளிவந்துள்ள இந்தடி.வி.யின் விலைரூ.1,69,990 ஆகும். இந்த புதிய ஏர்டி.வி. எழுச்சிமிக்க நவீன தொழில் நுட்பத்துடன், விருது பெற்ற ரெட்ஹாட்குழுவால் (Redhot Group) வடிவமைக்கப்பட்டுள்ளது. இது,7.9மி.மீட்டர்கனத்துடன் மிக மெல்லியதாக உள்ளது. மேலும்55 அங்குலதிரையை(55” Screen) உள்ளடக்கியது. இதில் உள்ள 4கேயு.எச்.டி.(4K Ultra High Definition)அதிநவீன உயர் தொழில்நுட்பமானது, படங்களை தெளிவாகவும், துல்லியமாகவும், சிறந்தவண்ண வடிவமைப்பிலும் காட்டக்கூடியது. இதில் படங்களைபார்க்கும் வாடிக்கையாளர்கள், எதார்த்தமாக- அதாவது, ஒருஜன்னல் வழியாக நேரில்பார்ப்பது போன்ற அனுபவத்தைப் பெறமுடியும். தனி நபர் வீடியோ ரெக்காடரால் வலுவூட்டப்பட்ட 5 இன்1 டிஜிட்டல் வீடியோ ஒளிபரப்பு தொழில் நுட்பம்(DVB-C, DVB-T/T2, DVB-S/S2)இதில் உள்ளதால்,வாடிக்கையாளர்கள்,அவர்கள்Read More


அதிக நேரம் கணினி பார்ப்பதால் ஏற்படும் பிரச்சனைக்கு தீர்வுகள்

எந்த பொருளையும் சரியாக பயன்படுத்தாமல் இருந்தால் அது பழுதடைந்து போய்விடும் என்பது நாம் அனைவரும் அறிந்தது தான். பெரும்பாலும் நாம் பலமணி நேரம் கணினி, லேப்டாப், ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் போது ஒரே நிலையில், ஒரே புள்ளியில் கவனம் செலுத்தி கண்களுக்கு மிகுந்த அழுத்தம் தருவதால் தான் கண்பார்வையில் குறைபாடு உண்டாகிறது. கண்பார்வை குறைபாட்டின் ஆரம்ப காலக்கட்டத்திலேயே இவற்றை நீங்கள் பின்பற்றினால் இயற்கையான முறையில் கண்பார்வையை மேம்படுத்த முடியும். * தொடர்ந்து 2 -3 மணிநேரம் கண்களுக்கு அழுத்தம் தரும் வகையிலான வேலைகள் செய்வதை குறைத்துக் கொள்ள வேண்டும். * சாலையில் நடக்கும் போது, மொபைலை நோண்டாமல், சற்று தொலைவில் பார்த்து நடக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். * கேரட் ஜூஸுடன் ஓரிரு துளி ஆலிவ் எண்ணெய் சேர்த்து குடியுங்கள். * அடிக்கடி கண்களை இதமானRead More


அனுஷ்கா, திரிஷாவுக்கு ஹீரோவாக நடிக்கவேண்டும்: பவர் ஸ்டாரின் புதிய லட்சியம்

மிர்ச்சி சிவா நடிப்பில் சினிமா பின்னணியில் உருவாகி இருக்கும் ‘அட்ரா மச்சான் விசிலு’ படத்தில் ‘சூப்பர் ஸ்டார்’ கேரக்டரில் பட்டையை கிளப்பி இருக்கிறாராம் பவர் ஸ்டார். வருகிற ஜூலை-7ஆம் தேதி ரிலீஸாக இருக்கும் இந்த படத்திற்கு தணிக்கை குழு ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்த நிலையில் பவர் ஸ்டார் படம் குறித்தும், தனது எதிர்கால லட்சியம் குறித்தும் விலாவாரியாக பகிர்ந்துகொண்டார். அதுகுறித்து பார்ப்போம்… ஆரம்பகாலத்துல இருந்து இப்ப வரைக்கும் ரஜினி சாருக்கு நான்தான் போட்டி. இந்த படத்தில சூப்பர் ஸ்டார் கேரக்டர்ல நடிக்கிறதால எக்ஸ்ட்ரா டயலாக் எல்லாம் பேசவில்லை. கதைக்கு என்ன டயலாக் தேவைப்பட்டுச்சோ, டைரக்டர் என்ன டயலாக் கொடுத்தாரோ அதை மட்டும் தான் பேசியிருக்கிறேன். மற்றபடி தனிப்பட்ட முறையில் யாரையும் தாக்கி பேசலை. காமெடிப் படம் என்பதால் ஸ்டைல்னு தனியாக எதுவும் செய்யவில்லை. ஆனா எக்கச்சக்கRead More


சுவாதி கொலைக்கு சினிமாவும் காரணம்: நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் கருத்து

சென்னை இளம்பெண் சுவாதி கொலை தொடர்பாக சமூக வலைதளங்களில் பலர் கண்டனமும், அதிர்ச்சியும் தெரிவித்துள்ளனர். பலர் சினிமா காட்சிகளை சுட்டிக்காட்டி கருத்து தெரிவித்துள்ளனர். காதலில் தோல்வி அடையும் கதாநாயகன் காதலிக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுவது போன்று சினிமாவில் காட்சிகள் உள்ளன என்று ஒருவர் வலைதளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். மற்றொருவர் சுவாதி மரணத்துக்கு பிறகாவது இது போன்ற காட்சிகளில் நடிப்பதை கதாநாயகர்கள் தவிர்க்க வேண்டும் என்று கருத்து பதிவு செய்துள்ளார். இதனை நடிகையும், டி.வி. நிகழ்ச்சி தொகுப்பாளருமான லட்சுமிராமகிருஷ்ணன் வரவேற்று கருத்து வெளியிட்டுஉள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியதாவது:- சுவாதியின் பெற்றோருக்கு என்ன ஆறுதல் சொல்வது என்று தெரியவில்லை. இது போன்ற செயல்களில் சினிமாவின் தாக்கமும் இருக்கிறது. சினிமாவில் காதல் அழகானதாக காட்டப்படுகிறது. அதற்காக வன்முறையில் ஈடுபடுவதும் நியாயப்படுத்தப்படுகிறது. பெண்களை மதிக்க கற்றுக் கொடுக்க வேண்டும். எல்லோருக்கும்Read More


ரஜினியை தொடர்ந்து சூர்யாவை இயக்கும் பா.ரஞ்சித்

சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘24’ படம் 50 நாட்களை கடந்து திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்தை தொடர்ந்து தற்போது ஹரி இயக்கத்தில் ‘எஸ்3’ படத்தில் பிசியாக நடித்து வருகிறார் சூர்யா. ‘சிங்கம்’ படத்தின் மூன்றாம் பாகமாக உருவாகிவரும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ‘கபாலி’ படத்தைத் தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கும் அடுத்த படத்தில் சூர்யா நடிப்பது உறுதியாகியுள்ளது. நேற்று ஐதரபாத்தில் நடந்த ‘கபாலி’ படத்தின் தெலுங்கு ஆடியோ வெளியீட்டில் கலந்துகொண்ட பா.ரஞ்சித், இந்த தகவலை கூறியுள்ளார். ‘எஸ்.3’ படத்தை தொடர்ந்து சூர்யா, த்ரிவிக்ரம் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என ஒரேநேரத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கப்போவதாக வெளிவந்துள்ள செய்தி சூர்யா ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த படம் குறித்தRead More


ஸ்ரீ நிரித்யம் நாட்டியப் பள்ளியின் பரதநாட்டிய கலைநிகழ்ச்சி…

சென்னை மைலாப்பூர் ஆர்.கே.சுவாமி அரங்கத்தில் ஸ்ரீ நிரித்யம் நாட்டிய பள்ளி நிறுவனர் வீணா ராமகிருஷ்ணனிடம் நடனம் பயின்று வரும் குமாரி குமுத ப்ரியா(16), பவித்ரா லதாங்கி(11), மிருதினி(11) ஆகியோரின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. நாட்டிய நிகழ்ச்சி சம்பரதாய முறைப்படி வழூவூர் பாணியில் தோடைய மங்கலமும் அதைத் தொடர்ந்து பிரபோ கணபதி என்ற விநாயக பாடலுடன் நிகழ்ச்சி துவங்கியது. இப்பாடல் தில்லாங் ராகம், ஆதி தாளத்தில் அமைந்தது. பவித்ராவும், மிருதினியும் இப்பாடலுக்கு அபிநயம் தந்து ஆடினர். இதைத் தொடர்ந்து மிருதினி திஸ்ர ஜதி, திருப்புகழ் ராகத்துடன் அமைந்த பாரம்பரிய அலாரிப்பை சிறப்புடன் வழங்கினார். இதனைத் தொடர்ந்து ஆனந்த பைரவி ராகத்தில் ஆதி தாளத்துடன் ஸ்ரீபத்ராச்சல ராமதாஸ் இயற்றிய பலுக்கே பங்காரமயெனா பாடலுக்கு மிருதினியும், பவித்ராவும் நடனமாடினர். சிவபெருமானின் அற்புதங்களை விளக்கிய வர்னம் கொஞ்சும் சலுங்கையை அற்புதமாக கொண்டு வந்தார்.Read More


முல்லைப் பெரியாறு அணை விவகாரம் கருணாநிதி அறிக்கை

தி.மு.க. தலைவர் கருணா நிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப் பதாவது:- முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று சில நாட்களுக்கு முன்பு தெரிவித்த கேரள முதல்வரின் கருத்துக்கு மாறாக, தற்போது கேரள மாநிலச் சட்டப் பேரவையில் ஆற்றப்பட்ட கேரள கவர்னர் உரையில் முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவது தொடர்பாக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் கேரள அரசு உறுதியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும் அந்த உரையில், “முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவது தொடர் பாக சட்டசபையில் நிறை வேற்றப்பட்ட தீர்மானத்தில் அரசு உறுதியாக உள்ளது. அணையின் நீர் மட்டத்தை உயர்த்தக் கூடாது என்ற முடிவிலும் கேரள அரசு உறுதியாக உள்ளது. ஆனாலும் உச்ச நீதி மன்றம் அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து அணையின் பாதுகாப்பு, பலம்,Read More


Visit Us On FacebookVisit Us On YoutubeVisit Us On Google PlusVisit Us On TwitterVisit Us On Linkedin