February, 2016

 

அலுவலர்களுக்கான ‘‘சி–வகை’’ 700 குடியிருப்புகளை காணொலிக் காட்சி மூலமாக முதல்–அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

சென்னை சைதாப்பேட்டையில் ரூ.100 கோடியில் அரசு அலுவலர்களுக்கு கட்டப்பட்டுள்ள 700 குடியிருப்புகளை முதல்–அமைச்சர் ஜெயலலிதா திறந்துவைத்தார். இதுகுறித்து, தமிழக அரசு சார்பில்வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:– 700 குடியிருப்புகள் சென்னை, சைதாப்பேட்டை, தாடண்டர் நகரில் 100 கோடியே 54 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 6.42 ஏக்கர் நிலத்தில், 6,57,020 சதுர அடி கட்டிட பரப்பளவில் கட்டப்பட்டுள்ள அரசு அலுவலர்களுக்கான ‘‘சி–வகை’’ 700 குடியிருப்புகளை காணொலிக் காட்சி மூலமாக முதல்–அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார். முதல்–அமைச்சரால் திறந்து வைக்கப்பட்ட இக்குடியிருப்புகளானது, ஒவ்வொரு கட்டிடத் தொகுதிக்கும் 100 குடியிருப்புகள் வீதம் 7 கட்டிட தொகுதிகளில் 700 குடியிருப்புகளை உள்ளடக்கியதாகும். ஒவ்வொரு குடியிருப்பும் 692 சதுர அடி கட்டிடப் பரப்பளவில், 2 படுக்கையறைகள், ஒரு வரவேற்பறை, குளியலறை மற்றும் கழிப்பறை ஆகிய வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளன. மேலும், ஒவ்வொரு கட்டிட தொகுதிக்கும் 2 மின்தூக்கிகள்,Read More


அலுவலர்களுக்கான ‘‘சி–வகை’’ 700 குடியிருப்புகளை காணொலிக் காட்சி மூலமாக முதல்–அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

சென்னை சைதாப்பேட்டையில் ரூ.100 கோடியில் அரசு அலுவலர்களுக்கு கட்டப்பட்டுள்ள 700 குடியிருப்புகளை முதல்–அமைச்சர் ஜெயலலிதா திறந்துவைத்தார். இதுகுறித்து, தமிழக அரசு சார்பில்வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:– 700 குடியிருப்புகள் சென்னை, சைதாப்பேட்டை, தாடண்டர் நகரில் 100 கோடியே 54 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 6.42 ஏக்கர் நிலத்தில், 6,57,020 சதுர அடி கட்டிட பரப்பளவில் கட்டப்பட்டுள்ள அரசு அலுவலர்களுக்கான ‘‘சி–வகை’’ 700 குடியிருப்புகளை காணொலிக் காட்சி மூலமாக முதல்–அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார். முதல்–அமைச்சரால் திறந்து வைக்கப்பட்ட இக்குடியிருப்புகளானது, ஒவ்வொரு கட்டிடத் தொகுதிக்கும் 100 குடியிருப்புகள் வீதம் 7 கட்டிட தொகுதிகளில் 700 குடியிருப்புகளை உள்ளடக்கியதாகும். ஒவ்வொரு குடியிருப்பும் 692 சதுர அடி கட்டிடப் பரப்பளவில், 2 படுக்கையறைகள், ஒரு வரவேற்பறை, குளியலறை மற்றும் கழிப்பறை ஆகிய வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளன. மேலும், ஒவ்வொரு கட்டிட தொகுதிக்கும் 2Read More


அதிமுக பிரச்சார வாகனங்கள் ஒப்படைப்பு

கோவை மாநகர், திருவாரூர், புதுக்கோட்டை, ஈரோடு புறநகருக்கு அதிமுக பிரச்சார வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது. பிரச்சார வாகனங்களுக்கான சாவிகளை அதிமுக மாவட்ட செயலாளர்களிடம் முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.


பா.ஜ.க கூட்டணியில் சரத்குமார்

சென்னை விமான நிலையத்தில் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், பா.ஜ., கட்சியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுவதாக ச.ம.க., கட்சி தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார். மேலும் கூட்டணி குறித்த முதற்கட்ட பேச்சுவார்த்தை முடிந்துள்ளதாகவும், தொகுதி பங்கீடு குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை எனவும் அவர் தெரிவித்தார். நள்ளிரவில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருடன் சரத்குமார் சந்திப்பு நடந்தது குறிப்பிடத்தக்கது.


மகாராஷ்டிராவில் 14 பேரைக் கொன்று தற்கொலை

மகாராஷ்டிர மாநிலம் தானே நகரின் காஸர்வாடியில், அதிகாலை நேரத்தில் 14 பேரைக் கொன்ற ஒருவர், இறுதியில் தானும் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்


அனைவருக்கும் சீட் : இளங்கோவன் அறிவிப்பு

நேர்காணலில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் சீட் வழங்கப்படும். 234 தொகுதிகளிலும் போட்டியிட இதுவரை விருப்ப மனு அளித்துள்ள 3000 பேருக்கும் விரைவில் நேர்காணல் நடத்தப்படும். கோஷ்டிகளுக்கு சீட் கொடுக்கும் பழக்கம் இனி காங்கிரசில் இருக்காது. துணைத் தலைவர் ராகுல் விரைவில் திமுக தலைவர் கருணாநிதியை சந்திப்பார் என தமிழக காங்., தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.


திமுக நேர்காணல் தொடங்கியது

திமுக சார்பில் போட்டியிட விண்ணப்பம் செய்தவர்களுக்கு நேர்காணல் தொடங்கியது. திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 6வது நாள் நேர்காணலில் பங்கேற்றுள்ளனர். தேர்தலில் 200க்கும் மேற்பட்டோர் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர்.


கள்ளக்குறிச்சி அருகே குடும்பத் தகராறில் கணவர் தூக்கிட்டு தற்கொலை

கள்ளக்குறிச்சி அருகே தியாகதுர்க்கத்தில் குடும்பத் தகராறில் கணவர் தற்கொலை செய்து கொண்டார். வேலைக்கு செல்லாததால் ராஜ் என்பவரை மனைவி புஷ்பாராணி திட்டியுள்ளார். மனைவி திட்டியதால் மனமுடைந்த ராஜ் அதிகாலை மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ராஜ் தற்கொலை குறித்து வடதொரசலூர் ரீட்டா நகரில் போலீசார் விசாரணை நடத்தி வருகி்ன்றளர்.


சிதம்பரத்திற்கு ராமதாஸ் கேள்வி

பாமக நிறுவனர் ராமதாஸ் டுவிட்டரில் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், அப்சல்குரு தண்டனை விஷயத்தில் அரசு எடுத்த முடிவு தவறு: ப.சிதம்பரம்- பேரறிவாளன் உள்ளிட்ட தமிழர் விஷயத்தில் மட்டும் சரியான முடிவு எடுத்தீங்களா? இந்தியாவில் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு: ஆய்வில் சேதி- ஏழைகளின் எண்ணிக்கை அதிகரிப்போ அதிகரிப்பை விட்டுட்டீங்களே! ஆரம்பம் முதல் கடைசி வரை அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம்: ஜெயலலிதா- அப்ப… நடுவுல தான் கொஞ்சம் பக்கத்தை காணோமா? ஜெ. பிறந்தநாளில் மின்தேவை 14,538 என்ற உச்சத்தைதொட்டது: மாநிலம் முழுக்க திருட்டு இணைப்பு எடுத்து மின்விளக்கு கட்அவுட் அமைத்தால் அப்படித்தான் என குறிப்பிட்டுள்ளார்.


துறையூர் அருகே தனியார் கல்லூரி விடுதியில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை

துறையூர் அருகே தனியார் கல்லூரி விடுதியில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். புலிவலத்தில் உள்ள பொறியியல் கல்லூரி விடுதியில் மாணவர் சிவக்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவர் சிவக்குமார் தற்கொலை குறித்து புலிவலம் போலீசார் விசாரணை நடத்தி வருகி்ன்றளர்


Visit Us On FacebookVisit Us On YoutubeVisit Us On Google PlusVisit Us On TwitterVisit Us On Linkedin