January, 2016

 

ஒரு வாரத்திற்குள் பாஸ்போட் பெற்றுக்கொள்ளும் புதிய நடைமுறையை மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஆதார் அட்டை உள்ளிட்ட 4 ஆவணங்களை சமர்பித்தால் விண்ணபித்த ஒரு வாரத்திற்குள் பாஸ்போட் பெற்றுக்கொள்ளும் புதிய நடைமுறையை மத்திய அரசு அறிவித்துள்ளது. இது குறித்து மத்திய வெளியுறவுத் அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தமது டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார். அதில் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பேன்கார்டு ஆகியவற்றுடன் தம்மீது குற்றவழக்குகள் ஏதும் இல்லை என்பதற்கான பிரம்மான பத்திரம் ஆகியவற்றுடன் விண்ணப்பிப்பவர்களுக்கு ஒரு வாரத்திற்குள் பாஸ்போட் வழங்கப்படும் என கூறியுள்ளார். புதிய நடைமுறையில் பாஸ்போட் பெற எவ்வித கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படாது என சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். சாதரணமாக பாஸ்போட் பெற விண்ணப்பித்தால் பாஸ்போட் சேவை மையத்தில் நேர்காணலுக்கு நேரம் பெற்று குறிப்பிட்ட தேதியில் நேர்காணல் முடித்தாலும் காவல் துறை ஆய்வறிக்கை சமர்பித்த பின்னரே பாஸ்போட் வழங்கப்படுகிறது. இதில் காவல் துறை ஆய்வறிக்கை சமர்பிப்பதில் தாமதம் ஏற்படுவதால்Read More


மருத்துவக் கல்லூரி மூன்று மாணவிகள் மர்ம மரணம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலசெயலளர் – ஜி. ராமகிருஷ்ணன் அளித்த பேட்டி மருத்துவக் கல்லூரி மூன்று மாணவிகள் மர்ம மரணம் துறை அமைச்சரை பதவியிலிருந்து நீக்கவும், விசாரணை நடத்தவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல் விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி வட்டம், பங்காரம் கிராமத்தில் உள்ள எஸ்.வி.எஸ். ஹோமியோ மருத்துவக் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வரும்  மாணவிகள் சரண்யா, மோனிஷா, பிரியங்கா ஆகிய மூவரும் 23.1.2016 அன்று கைகள் கட்டப்பட்டும், உடம்பில் காயங்களோடும் கல்லூரி அருகில் உள்ள கிணற்றில் பிணமாக மிதந்துள்ளனர். அரசு அங்கீகாரம் பெற்ற இந்த கல்லூரியில் முறையான வகுப்பறைகள், பரிசோதனைக் கூடங்கள், கழிவறைகள் உள்ளிட்டு எவ்வித வசதியும், பாதுகாப்பும் இல்லை. அரசு நிர்ணயித்த கட்டணத்திற்கு மேல் பல மடங்கு கட்டணங்கள் வசூலிக்கப்பட்டுள்ளது. கல்லூரிக்கு வந்த சில நாட்களிலேயே பல மாணவர்கள் போதிய வசதிகள் இல்லை எனRead More


திருப்பூர் கதிரவன் பள்ளியில் மாணவன் அடித்துக் கொலை காரணம் தெரியவில்லை

திருப்பூர் கே.வி.ஆர் நகரில் உள்ள தனியார் பள்ளியில் சிறுவர்களிடையே மோதல் – 6 ஆம் வகுப்பு மாணவன் தாக்கியதில் ஒன்றாம் வகுப்பு சிறுவன் பலி


தமிழக சட்டப் பேரவைக்கு மே8ம் தேதி தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு புதுதில்லி,

தமிழகத் தேர்தல் தமிழக சட்டப் பேரவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு மே மாதம் 8�ம் தேதி நடைபெறும். சட்டப் பேரவைக்கானஅனைத்து 234 தொகுதிகளிலும் ஒரே நாளில் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. தமிழக சட்டப் பேரவைக்கான தேர்தல் அட்டவணை வருமாறு: தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படும் நாள் : ஏப்ரல் 13 வேட்பு மனு தாக்கல் துவக்கம் : ஏப்ரல் 13 வேட்பு மனு தாக்கல் கடைசி நாள் : ஏப்ரல் 20 வேட்பு மனு பரிசீலனை : ஏப்ரல் 21 வேட்பு மனுக்களை திரும்பப் பெற கடைசி நாள் : ஏப்ரல் 24 வாக்குப் பதிவு நடைபெறும் நாள் : மே 8 வாக்கு எண்ணிக்கை : மே 11 தேர்தல் நடைமுறை முடிவடைய கடைசி நாள் : மே 20


மகளிர் காங் கட்சி தலைவியாக ஜான்சி ராணி நியமனம்

விஜயதாரணி மகளிர் காங் கட்சி தலைவர் பதவியில் இருந்து நீக்கம்…..                  மகளிர் காங் கட்சி தலைவியாக ஜான்சி ராணி நியமனம்


ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்

                                                                     மாவட்ட கலெக்டர்கள் பலர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மதுரை கலெக்டராக கே.வீரராகவ ராவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை கலெக்டராக ஜி.கோவிந்தராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ராமநாதபுரம் கலெக்டராக எஸ்.நடராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூர் கலெக்டராக ஏ.சுந்தரவல்லி நியமனம் செய்யப்பட்டுள்ளார். பெரம்பலூர் கலெக்டராக கே.நந்தகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரி கலெக்டராக கதிரவன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தருப்பூர் கலெக்டராக எஸ்.ஜெயந்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார். வருவாய் நிர்வாக இணை ஆணையராக எல்.சுப்ரமணியன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை மாநகராட்சி ஆணையராக சந்திரமோகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றம் மேலாண்மை இயக்குநராக விக்ரம் கபூர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


கடும் குளிர் காரணமாக டெல்லியில் உள்ள துவக்க பள்ளிகளுக்கு விடுமுறை

கடும் குளிர் காரணமாக டெல்லியில் உள்ள துவக்க பள்ளிகளுக்கு ஜனவரி 21-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஐதராபாத் பல்கலைகழகத்தில் நடந்த மோதல் குறித்து ஸ்மிருதி இரானி விளக்கம்

ஐதராபாத் பல்கலைகழகத்தில் நடந்தது சாதி மோதல் அல்ல என்று ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் மாதம் மாணவர்களிடையே மோதல் நடந்தது தொடர்பாக வழக்கு பதியப்பட்டுள்ளது. மாணவர்கள் மோதல் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு 5 பேர் நீக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி விளக்கம் தெரிவித்தார்.


Visit Us On FacebookVisit Us On YoutubeVisit Us On Google PlusVisit Us On TwitterVisit Us On Linkedin