பேரூர் மஹா பெரியவா மணி மண்டபம் மஹாகும்பாபிஷேகம்

கோவை பேரூர் மஹா பெரியவா மணி மண்டபம் மஹாகும்பாபிஷேகம்
கோவை, ஜுன்.20
மேலைச் சிதம்பரம் எனும் திருப்பேரூர் புராண பிரசித்தி பெற்ற ஸ்தலத்தில் ஸ்ரீமரகதாம்பிகா ஸமேத ஸ்ரீ கோஷ்டேஷ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இதில் மஹா பெரியவாளுக்கு மணி மண்டபம் அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேகம், மற்றும் ஸாம வேத பாடசாலை திறப்புவிழா நடைபெறுகிறது. இது குறித்து விழாக்குழுவினர் கூறியபோது :
ஸ்ரீ காஞ்சி காமகோடி மூலாம்னாய ஸர்வய்ஞ பீடம் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா என்று அனைவராலும் அழைக்கப்படும் கலியுக தெய்வமான ஸ்ரீஸ்ரீஸ்ரீ காஞ்சிகாமகோடி பீடாதிபதி ஸ்ரீ ஜெகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி மஹாஸ்வாமிகளுக்கு மணி மண்டபம் அமைக்கப்பட்டு ஸாமவேதபாடசாலையும் அமைத்து மணி மண்டபத்தில் வேதவ்யாஸர் விக்ரஹங்கள் பிரதிஷ்டை செய்து வரும் (27.6.2019) வியாழக்கிழமை காலை 9.30 மணிக்குமேல் 11.30 மணிக்குள் ஸ்ரீ காஞ்சி காமகோடி மூலாம்னாய ஸர்வயக்ஞ பீடம் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் பொற்கரங்களால் மணிமண்டபம் மஹாகும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
இந்நிகழ்ச்சியானது 23.6.2019 அன்று பூர்ணாஹுதி தீபாராதனையுடன் தொடங்கி 27.6.2019 அன்று ஆறாம் கால யாக பூஜையுடன் முடிவடைந்து அன்று காலை 11.00 மணிக்கு மூலவருக்கு கும்பாபிஷேகமும், பகல் 12 மணிக்கு மஹா அபிஷேகத்துடன் தீபாரதனையும் அன்னதானமும் நடைபெறும். விழாவிற்கு அனைத்து பொதுமக்களும் கலந்து கொண்டு மஹாபெரியவாளின் ஆசீர்வாதத்திற்கு பாத்திரர்களாகும்படி அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.
விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சமூக ஆர்வலர் அன்பரசன், பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, பாரதிய ஜனதா கட்சியின் பொன் ராதாகிருஷ்ணன், சங்கரா கண் மருத்துவமனை பத்மஸ்ரீ டாக்டர் ஆர்.வி.மணி, இந்து மக்கள் கட்சி நிறுவனத்தலைவர் அர்ஜுன் சம்பத், அனுமன் சேனா நிறுவனத்தலைவர் எஸ்.வி.ஸ்ரீதர் , பேரூர் அதிமுக நகர செயலாளர் ஜெகநாதன் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Skip to toolbar