200 ஆண்டுகால பழமையான ஸ்ரீ சித்தி புத்தி விநாயகர் ஆலயத்தின் மஹா கும்பாபிேஷேக விழா

சென்னை ஜூன் – 14

பிரசித்திப்பெற்ற சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோயில் குளத்துரையில் அமைந்துள்ள 200 ஆண்டுகால பழமையான ஸ்ரீ சித்தி புத்தி விநாயகர் ஆலயத்தின் மஹா கும்பாபிேஷேக விழா சிறப்பாக நடைபெற்றது..

முன்னதாக சித்தி புத்தி விநாயக பெருமானுக்கு வேதாச்சாரியார்களால் யாகசாலை பூஜைகள் செய்து புனித கலசங்களில் நீர் எடுத்து செல்லப்பட்டு விமான கலசங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பின்பு திரளாக அங்கு திரண்டிருந்த பக்தர்கள் மீது கும்பாபிஷேக கலச நீர் தெளிக்கப்பட்டது…

இந்த கும்பாபிஷேக விழாவில் 500ற்கும் மேற்பட்ட பக்கர்கள் கலந்து கொண்டு சித்தி புத்தி விநாயகரின் அருளை பெற்று சென்றனர்….

பின்னர் கும்பாபிஷேகத்திற்கு வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் ஆலய விழா குழுவினர் சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது…

மிகவும் பழமையான இந்த சித்தி புத்தி விநாயகர் ஆலயத்தில் வழிபட்டால் மரணபயம் நீங்கும் எனவும் பிரசித்தி பெற்ற வைத்தீஸ்வரர் ஆலய நாடியில் இந்த ஸ்தலத்தினை பற்றிய குறிப்பு உள்ளதாக ஆலய நிர்வாகிகள் தெரிவித்தனர்…

Skip to toolbar