அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் சுகாதரமற்ற முறையில் இயங்கி வந்த நடைபாதை கடைகள் அகற்றம்!!

corp
பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் திரு. சைதை துரைசாமி அவர்கள் மற்றும் ஆணையாளர் டாக்டர்.பி.சந்தரமோகன், இ.ஆ.ப., அவர்களின் தலைமையில்.

பெருநகர சென்னை மாநகராட்சி , மண்டலம்-7 (அம்பத்தூர்), கோட்டம்-86ல் அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் உள்ள ஆம்பிட் ஐ.டி. சாலை, ஏ.டி.சி சாலை, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி சாலை, அம்பத்தூர் எஸ்டேட் முதல் பிரதான சாலை போன்ற முக்கிய சாலை ஓரங்களில் சுகாதாரமற்ற முறையில் இயங்கிவந்த கடைகளை 01.07.2016 அன்று மத்திய வட்டார கூடுதல் மாநகர நல அலுவலர் அவர்களின் தலைமையில் மண்டல அலுவலர்-7 மற்றும் மண்டல நல அலுவலர் ஆகியோர் மேற்பார்வையில் துப்புரவு அலுவலர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் ஆய்வு செய்து சுகாதாரமற்ற உணவுபொருட்கள் 250கிலோ, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் ஒரு கிலோ, தண்ணிர் பாக்கெட்டுடகள் 200 எண்ணிக்கை மற்றும் சுகாதாரமற்ற துருப்பிடித்த உணவு தயாரிக்கும் அடுப்பு மற்றும் பாத்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் ரூ.4,000/- (ரூபாய் நான்காயிரம் மட்டும்) விதிக்கப்பட்டது.

மேலும், சுகாதாரமற்ற முறையில் இயங்கி வந்த கடைகளுக்கு தமிழ்நாடு பொது சுகாதார சட்டத்தின்படி தாக்கீது வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.