14 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு செய்ததாக ஒருவர் கைது

கோவை 14 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு செய்ததாக ஒருவர் கைது

கோவவை காந்திபுரம் ராம்நகர் பகுதியை சேர்ந்த ராதா என்றசிறுமி( பொது நலம் கருதி சிறுமியின் பெயர் மாற்றப்பட்டுள்ளது) கோவையில் உள்ள தனியார்பள்ளியில் படித்துவந்துள்ளார். அந்த பகுதியில் உள்ள ஆட்டோ டிரைவர் மதியழகன், சிறுமி தினமும் மதியழகனின் ஆட்டோவில் பள்ளிக்கு சென்றுவருவது வழக்கம்.

சிறுமியின் பெற்றோர் வீட்டை மாற்றி கோவை குணியமுத்தூர் குளத்துபாளையம் பகுதியில் வசித்து வருகிறார்கள் இந்தனிலையில் மதியழகன் தொடர்ந்து சிறுமியை பார்பதற்க்காக குளத்துபாளையம் வந்து சென்றுள்ளார். நான்கு நாட்களுக்குமுன் மதியழகன் சிறுமியை கடத்தி சென்றதாக தெரிகிறது. இதனையடுத்து சிறுமியின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பெயரில் குணியமுத்தூர் காவல் நிலைய போலிசார் வழக்கு பதிவுசெய்து மதியழகனை போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளார்கள்.

Skip to toolbar