பெற்றோர் முன் வாலிபர் குத்தி கொலை

பெற்றோர் முன் வாலிபர் குத்தி கொலை
கோவை,மே.21-

கோவையில் இளைஞர் ஒருவரை அவரது பெற்றோர் கண்முன் நள்ளிரவில் குத்தி கொலை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை போத்தனூர் ஸ்ரீராம் பகுதியை சேர்ந்தவர் ஜான்பிரிட்டோ (வயது 28) இவர் நேற்று நள்ளிரவில் போத்தனூர் பகுதியில் உள்ள மதுபான கடையில் தன்னுடைய சக நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். இதில் அங்குள்ள சில நண்பர்களுடன் வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு செய்தவர்கள் ஜான்பிரிட்டோவை பின் தொடர்ந்து அவரது வீட்டிற்கு வந்துள்ளனர் . அப்போது அங்கு வந்த 4 நபர்கள் அவருடனும் அவருடைய பெற்றோருடனும் தகராறு செய்து ஜான்பிரிட்டோவை சரமாரியாக கத்தியால் குதியுள்ளனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இவருடன் வந்த மற்றொரு நண்பருக்கு கத்திக்குத்து ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருக்கிறார்.
பின்னர் அங்கு வந்த போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். முதற் கட்ட விசாரணையில் ஜான் பிரிட்டோ என்பவர் முன்னாள் குற்றவாளி என்பதும் உன்னி கிருஷ்ணன் என்ற கஞ்சா வியாபாரியை ஜான்பிரிட்டோ மற்றும் அவர்களது நண்பர்கள் கொலை செய்ததாக ஒரு வழக்கு நிலுவையில் உள்ளதாகவும், இவர் டெய்லர் வேலை செய்து வருவதாகவும் இதனுடன் கஞ்சா வியாபாரமும் செய்து வருவதாக தெரியவந்தது.
மேலும் சம்பவத்தை நேரில் பார்த்த இறந்தவரின் வீட்டின் அருகில் வசித்துவரும் காட்வின் ராஜ் என்பவர் சண்டையை பிரித்துவிட முயற்சி செய்யும் பொழுது அவரையும் கத்தியால் குத்தியதாக தெரியவருகிறது. அவர் சுந்தராபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Skip to toolbar