கமலஹாசன் அவர்களை தகாத வார்த்தையில் பேசிய தமிழக பால்வளத் துறை அமைச்சர்

அரவக்குறிச்சி இடைத்தேர்தலின் போது உலக நாயகன் கமலஹாசன் அவர்களை தகாத வார்த்தையில் பேசிய தமிழக பால்வளத் துறை அமைச்சரை கண்டித்து கரூர் மாவட்ட மக்கள் நீதி மையம் சார்பாக அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் திரு மோகன் ராஜ் அவர்கள் தலைமையில் கரூர் மாவட்ட தொகுதி பொறுப்பாளர்கள் ரவீந்திரன், கல்யாணகுமார்,கபிலா கார்த்திக் ,கிருத்திகா ஆகியோர் முன்னிலையில் உயர்திரு தமிழக ஆளுநர் அவர்களுக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் கரூர் பேருந்து நிலையம் முன்பாக உள்ள ஆர்.எம்.எஸ் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் நீதி மைய உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Skip to toolbar