ஸ்டாலின் எந்தகாலத்திலும் முதலமைச்சர் ஆக முடியாதுஎன்றார் ஓபிஎஸ் ஆவேச பேச்சு

கரூர் – 12.5.19
1972ம் ஆண்டு புரட்சித் தலைவரால் உருவாக்கப்பட்ட இந்த இயக்கம் 27 ஆண்டுகள் அம்மாவினால் காக்கப்பட்டுசோதனைகள், வேதனைகளைதாண்டி இன்றுஒன்றரைகோடிதொண்டர்களைகொண்ட இயக்கமாக இருக்கிறது. புயல் வந்தாலும் அசையாது, சுனாமிவந்தாலும் ஆட்டவோ, அசைக்கவோமுடியாது – அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புகழுர் 4 ரோட்டில் துணைமுதல்வர் ஓ.பி.எஸ் பேச்சு

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சிசட்டமன்றதொகுதிக்குவருகின்ற 19ம் தேதிதேர்தல் நடைபெறஉள்ளதைமுன்னிட்டுஅதிமுகசார்பில் போட்டியிடும் வேட்பாளர் செந்தில் நாதனுக்குஆதரவு கேட்டுதுணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வேனில் பிரச்சாரம் மேற்கொண்டார். அரவக்குறிச்சிசட்டமன்றதொகுதிக்குஉட்பட்ட புகழுர் 4 ரோடு, நொய்யல் குறுக்குச் சாலை, பவித்திரம், தும்பிவாடி, தென்னிலைஉள்ளிட்டபகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். அவருடன் போக்குவரத்துத் துறைஅமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், வேட்பாளர் செந்தில் நாதன் ஆகியோர் உடன் இருந்தனர்.
அப்போதுபேசியதுணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம், விவசாயதொழிலாளர்கள் 65 லட்சம் பேர் வறுமைக் கோட்டிற்கும் கீழ் இருக்கிறார்கள் என்றுகணக்குஎடுக்கப்பட்டுஅவர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் வழங்குவதாகமுதலமைச்சர் அறிவித்தார், திட்டம் ஆரம்பிக்கப்பட்டு 4, 5 நாட்கள் தான் கொடுத்தோம், திமுககாரர்கள் நீதிமன்றம் சென்றுதடையாணைவாங்கிக் கொண்டுவந்துவிட்டார்கள், ஏன்னென்றால் பொறாமை. தேர்தல் முடிந்தபிறகு 65 லட்சம் பேருக்கும் 2 ஆயிரம் பணம் வழங்கப்படும் என்றார். எந்தப் பிரச்சினையும் இல்லை, மக்கள் சந்தோஷமாகத்தான் இருக்கிறார்கள், தமிழகம் அமைதிப் பூங்காவாக இருக்கிறது. ஒருபக்கம் மக்களுடையதிட்டங்கள், மக்களின் நல்வாழ்வுக்குரியசெயல்கள் எல்லாம் சென்றுகொண்டிருக்கிறது. எந்தகுறையும் இல்லை, விவசாயம் தான் நம் ஆதாரம் தமிழகம் நெல் உற்பத்தியில் தொடர்ந்து 4 ஆண்டுகள் மற்றமாநிலங்களைகாட்டிலும் நெல் உற்பத்தியில் முதலிடம். அதற்காகமத்தியஅரசின் கிhpஸ்ஸி கர்மாவிருதைதொடர்ந்து 4 ஆண்டுகளாகபெற்றுக் கொண்டிருக்கிறது, இன்னொருபக்கம் தொழில் வளர்ச்சி, தொழில் வளர்ச்சி இருந்தால் தான் நாட்டின் வளர்ச்சிஉயரும். 6 மாதங்களுக்குமுன்பு உலகத்தில் உள்ளதொழில் முனைவர்களைதமிழகத்திற்குவரவழைத்து 3 லட்சம் கோடி ரூபாய் என்றஅளவிற்குதொழில் முதலீட்டைஈர்த்து 10 லட்சம் இளைஞர்களுக்குவேலைவாய்ப்பு திட்டம் 6 மாதமாகதொடங்கி இருக்கிறது. நாட்டின் வளர்ச்சிக்கும், நாட்டில் உள்ளமக்களின் வளர்ச்சிக்கும் அம்மாவின் அரசுசிறப்பாகசெய்துகொண்டிருக்கிறது. எந்தப் பகுதிகளிலும் ஜாதிசண்டை, மதச் சண்டை இல்லை, சிறுபாண்மை இன மக்களுக்குபாதுகாப்பு அரணாகஅம்மாவின் அரசு இருந்துவருகிறது. திமுகதலைவர் ஸ்டாலின் தேர்தலில் பிரச்சாரம் செய்கிறார், பிரச்சாரம் பன்னட்டும் அதற்காகநாமஒன்றும் சொல்வது இல்லை, ஆனால் பிரச்சாரத்தின் போதுஎன்னதிட்டங்கள் அவர்களதுஆட்சிக் காலத்தில் தமிழகத்தின் வளர்ச்சிஎன்னசெய்தீர்கள் என்றுசாதனையைசொல்லுங்கள் ஓட்டுக்களைகேளுங்கள், ஆனால் எந்ததிட்டமும் செய்யவில்லை, அவர் சொல்லுகின்றஒரேஒருவார்த்தை 23ம் தேதியோடு இந்தஆட்சிகவிழ்க்கப்படும், என்றவார்த்தையைத் தான், வைக்கிறார்கள், என்னகுறை இருக்கிறது, மக்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள், நம் மீதுநம்பிக்கைவைத்திருக்கிறார்கள், அதிமுகஅரசு இந்ததேர்தலோடுகாணாமல் போய்விடும் என்கிறார், 1972ம் ஆண்டு புரட்சித் தலைவரால் உருவாக்கப்பட்ட இந்த இயக்கம் 27 ஆண்டுகள் அம்மாவினால் காக்கப்பட்டுசோதனைகள், வேதனைகளைதாண்டி இன்றுஒன்றரைகோடிதொண்டர்களைகொண்ட இயக்கமாக இருக்கிறது. புயல் வந்தாலும் அசையாது, சுனாமிவந்தாலும் ஆட்டவோ, அசைக்கவோமுடியாது, உங்கள் தந்தையால் செய்யமுடியாததை, உங்களால் முடியவே, முடியாதுஎன்றார். ஸ்டாலின் எந்தகாலத்திலும் முதலமைச்சர் ஆக முடியாதுஎன்றார்

Skip to toolbar