ஸ்ரீ மாரியம்மன் வைகாசி பெருவிழா

கரூர் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் வைகாசி பெருவிழா பெருந்திருவிழா கம்பம் புறப்பாடு மற்றும் நடுகல் விழா நடைபெற்றது.

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கம்பத்தை ஊர்வலமாக பாளம்மாள்புரத்திலிருந்து கரூர் ஸ்ரீ மாரியம்மன் கோவிலுக்கு கொண்டு சென்றனர்.

ஊர்வலத்தில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் ஆடல் பாடலுடன் ஊர்வலமாக கம்பத்தை எடுத்து வந்தனர்.

இந்த விழாவில் மிக முக்கிய நிகழ்வான கம்பம் ஆற்றுக்கு எடுத்து செல்லும் நிகழ்ச்சி பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு கம்பத்தை அமராவதி ஆற்று எடுத்துச் செல்லும் நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெறும்.

இந்த விழாவை காண தமிழகம் மட்டுமில்லாமல் வெளிநாடுகளில் பணிபுரியும் தமிழக மக்கள் அண்டை மாநிலத்தில் உள்ளவர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்வர்.

இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பாழாமாபுரத்தில் இருந்து புறப்பட்ட கம்பம் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அதிமுக கொள்கை பரப்பு செயலாளர் மு.தம்பிதுரை , கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி கீதா மணிவண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Skip to toolbar