பா.மு.முபாரக் அவர்கள் பொறுப்பிலுள்ள வாக்குச்சாவடிகளுக்கான வாக்குச்சாவடி முகவர்கள் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

12.05.2019 ஞாயிறு காலை 11.00 மணியளவில் சூலூர் சட்டமன்ற தொகுதி இடை தேர்தலில் நீலகிரி மாவட்ட கழக செயலாளர் பா.மு.முபாரக் அவர்கள் பொறுப்பிலுள்ள வாக்குச்சாவடிகளுக்கான வாக்குச்சாவடி முகவர்கள் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

கழக கொள்கை பரப்பு செயலாளர் ஆ.இராசா அவர்கள் கலந்துகொண்டு கருத்துரை வழங்கினார்.

கூட்டத்தில் மாநில நெசவாளர் அணி துணை செயலாளர் ப. அருண்குமார் Ex. MLA, மோபிரிப்பாளயம் பேரூர் செயலாளர் கந்தசாமி, கோவை பகுதி செயலாளர் மதியழகன் உட்பட கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Skip to toolbar