ஜவுளித்துறையின் தொழில்நுட்பங்கள், உற்பத்தி, ஆராய்ச்சி, நிர்வாகம்

ஜவுளித்துறையின் தொழில்நுட்பங்கள் கற்க
சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச ஜவுளி மற்றும் மேலாண்மை கல்லூரி
கோவை,மே.3-
ஜவுளித்துறையின் தொழில்நுட்பங்கள், உற்பத்தி, ஆராய்ச்சி, நிர்வாகம் ஆகியவற்றை பற்றி கற்பதற்கு கோயம்பத்தூர் பீளமேடு பகுதியில் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச ஜவுளி மற்றும் மேலாண்மை கல்லூரி சிறந்த கல்லூரியாக விளங்குகிறது. இக்கல்லூரி இந்திய ஜவுளி அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது. தமிழ் நாடு மத்திய பல்கலைக்கழகத்துடன் இனைந்து இக்கல்லூரி இளங்கலை பி.எஸ்.சி. – துகிலியல் (3 ஆண்டுகள்- முழு நேரம்) மற்றும் முதுகலை எம். பி. ஏ. – ஜவுளி மேலாண்மை/ ஆயத்த ஆடை மேலாண்மை/ சில்லறை வர்த்தக மேலாண்மை (2 ஆண்டுகள் – முழு நேரம்) பட்டப் படிப்புக்களை வழங்கி வருகிறது.
கல்வித்தகுதி: பி.எஸ்.சி. இளங்கலை துகிலியல் பட்டப்படிப்பில் சேர்வதற்கு பிளஸ் டூ வில் இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடங்களில் குறைந்த பட்சம் 60% மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதில் 88 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.
எம். பி. ஏ. முதுகலை படிப்புக்கு ஏதாவது ஒரு இளங்கலை பட்டப்படிப்பில் 50% மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதில் ஜவுளி மேலாண்மை ஆயத்த ஆடை மேலாண்மை / சில்லறை வர்த்தக மேலாண்மை என மூன்று விருப்ப பாடங்கள் உள்ளதால் ஒவ்வொன்றுக்கும் தலா 45 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.
மாணவர்கள் மத்திய பல்கலைக்கழகம் நடத்தும் பொது நுழைவுத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வுக்கு விண்ணப்பிக்க www.cucetexam.in http://www.cucetexam.in என்ற இணையதளத்தை அனுகவும்.
இதில் தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் வேலை வாய்ப்பு மற்றும் தொழில்முனைவோராகச் செயல்பட தேவையான பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது.
சேர்க்கை விவரங்களுக்கு தொடர்புகொள்ள : +91- 9843814145, 8870479675

AD

Skip to toolbar