ஆசிய தடகள போட்டி வீராங்கனைக்கு பரிசளிப்பு விழா

கத்தார் தோஹாவில் நடைபெற்ற 23 வது ஆசிய தடகளப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்ற திருச்சிராப்பள்ளி சேர்ந்த செல்வி கோமதி மாரிமுத்து அவர்களுக்கு பள்ளியின் சார்பில் 3 லட்சம் காசோலையை பரிசாக வழங்கி கவுரவிக்கப்பட்டது ஆலப்பாக்கம் வேலம்மாள் வித்யாலயா பள்ளியின் விளையாட்டுத் துறையில் சாதனை படைத்த மாணவ மாணவியர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டி பேசிய செல்வி கோமதி மாரிமுத்து அவர்கள் மாணவ மாணவிகளை கல்வியுடன் விளையாட்டிலும் கவனம் செலுத்தி சாதனைகள் படைக்க அறிவுரை வழங்கினார் பின்னர் கல்வி மட்டுமன்றி விளையாட்டு ஓவியம் நாட்டியம் இசை என அனைத்து துறைகளிலும் ஊக்கமளித்து தலை சிறந்த மாணவ மாணவியர்களை உருவாக்கிவரும் வேலம்மாள் வித்யாலயா பள்ளி ஆலப்பாக்கம் சேவையை பாராட்டினார்

AD

Skip to toolbar