அடிக்கும் வெயிலில் தீவிர வாக்கு சேகரிப்பில் டாக்டர் மகேந்திரன் மக்கள் நீதி மையம்

தீவிர வாக்கு சேகரிப்பில்
டாக்டர் மகேந்திரன்
கோவை. ஏப்ரல்.12-
மக்கள் நீதி மய்யத்தின் கோவை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் டாக்டர் மகேந்திரன் நேற்று கோவையின் பல்வேறு பகுதிகளில் மக்களைச் சந்தித்து டார்ச் லைட் சின்னத்தில் வாக்களிக்கும்படி ஆதரவு கோரினார்.

சித்தாபுதூர் பகுதி பிரச்சாரத்தின் போது கோவை-பெங்களூரு இடையிலான இரவு நேர ரயில் சேவை அதிகரிக்கப்படும். கோவை வடக்கு, பீளமேடு ரயில் நிலையங்களில் உட்கட்டமைப்பபுகளும் பயண வசதிகளும் மேம்படுத்தப்படும் என்றும்

பாரதி காலனி பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட போது மெட்ரோ ரயில், ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், தந்தியில்லா இணைய வசதி (WI – FI), பல்-அடுக்கு வாகன நிறுத்துமிடம் கொண்ட ஒரு ஒருங்கிணைந்த ஸ்மார்ட் நகரமாக உருவாக்கப்படும் எனவும்

பீளமேடு பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட் ட போது, நகரின் உள்-இணைப்பு வசதிகளை மேம்படுத்த தேவையான இடங்களில் மேம்பாலங்கள் அமைக்கப்படும். சுற்றுவட்ட மற்றும் வெளி-வட்ட சாலைகள் மூலம் அருகாமை நகரங்கள் இணைக்கப்படும் என்றும்,

ஜி.கே.டி நகர் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட போது, அதிறன்சார் மனிதவள மேம்பாட்டிற்க்காக உயர்தொழில் நுட்ப கல்லூரிகள் அமைக்கப்படும், இதன் மூலம், தொழில் நிறுவனங்களின் மனித வள தேவை பூர்த்தி செய்யப்படும். மேலும் வேலைவாய்ப்பு சார்ந்த திறன் மேம்பாட்டு மையங்கள் நிறுவப்படும் என்றும்,

ஹோப் காலேஜ் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட போது, அரசாங்கம் , தொழில்முனைவோர், கல்வி , ஆராய்ச்சி என பல்வேறு துறைகள் கொண்ட ஒருங்கிணைந்த மையம் உருவாக்கபடும். என்றும்

களத்தூர் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட போது, 100 வார்டுகளிலும் வார்டு வாரியாக குறை தீர்ப்பு குழுக்கள் அமைக்கப்படும். ஒவ்வொரு வார்டுக்கும் ‘வார்டு கேப்டன்’ நியமிக்கப்பட்டு செயல்பாடுகள் கண்காணிக்கப்படும் என்றும்

வெங்கிட்டாபுரம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட போது, அனைவருக்கும் நாள்தோறும் 24 மணிநேர குடிநீர் வசதி ஏற்பாடு செய்து தரப்படும் எனவும்

நீலாம்பூர் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட போது உள்நாட்டு உற்பத்திக்கான கோவையின் பங்களிப்பில் சிறு, குறு, மற்றும் நடுத்தர தொழில்களின் முக்கிய பங்காற்றிட, குறைந்த வட்டியில் கடன் , மற்றும் மேம்படுத்தப்பட்ட உட்கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்படும் என்றும்

டாக்டர் மகேந்திரன் தனது விசன் கோவை 2024 செயல்திட்டங்களை மக்களிடையே எடுத்துரைத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

கோவை நிருபர் ராஜ்குமார்

 

Skip to toolbar