பொள்ளாச்சி நாடாளுமன்ற தேர்தல் இருளை கிழித்திடும் ‘டார்ச்லைட்’ முந்துகிறார் மூகாம்பிகை ரத்னம்

பொள்ளாச்சி நாடாளுமன்ற தேர்தல் இருளை கிழித்திடும் ‘டார்ச்லைட்’ முந்துகிறார் மூகாம்பிகை ரத்னம்

மூகாம்பிகை ரத்னம்… பொறியாளர்! பட்டய வணிக மேலாண்மை (OBM)  படிப்பையும் முடித்தவர். மொத்தத்தில் மெத்த படிப்பையும் பெண்மணி!

என்றாலும் பொள்ளாச்சியில் தங்கள் குடும்பத்தின் பூர்வீக பூபதி பருத்தி நூலாலையையும் திறம்பட நடத்தி வருபவர்.

பாரம்பரிய குடும்பத்தில் பிறந்த இவர் சமூக விழிப்புணர்வு & மகளிர் விழிப்புணர்வு மலர வேண்டும் என்கிற எண்ணம் கொண் டவர்! அதற்கான முனைப் பையும் – முயற்சியையும் பல்வேறு தருணங்க ளில் வெளிப்படுத்தி வருபவர்!

இவருடைய தந்தை தம்பி.என்.ரத்னம். பொள்ளாச்சி முழுவதும் அறியப் பட்டவர். அதன் தொடர்ச்சியாக மூகாம்பிகை ரத்னம் ஊர்முழுவதும் புகழ்பெற்றவராய் விளங்குகிறார்.

இது பாரம்பரிய புகழோடு மட்டுமல்லாது இவரின் செயல்பாடு களும் களமாடலுமே காரணம்!

தன்னுடைய தந்தையின் பெயரில் இவர் நடத்திவரும் ரத்னம் நினைவு அறக்கட்டளை மூலம் பல்வேறு சேவைகளை செய்து வருகிறார். இதில் பாரட்டத் தக்க, மெச்சத் தக்க விஷயமாய்… புற்றுநோயாளிக ளுக்கான ஆறுதல் அளிக்கும் மையமாக இந்த அறக்கட்டளையை இவர் செயல்படுத்தி வருவதுதான்.

கடந்த 25 ஆண்டுகளாக இயங்கி வரும் இந்த அறக்கட்ட ளையின் மூலம் புறந்தள்ளப்படும் புற்றுநோயாளிகளுக்கு புத்துணர்ச்சி அளிக்கப்பட்டு

“இடுக்கண் வருங்கால் நகுக” என்ற வள்ளுவரின் வாக்கிற்கு இணங்க உடல் & உள்ள சோர்வாய் வரும் புற்றுநோயாளிகளுக்கு இங்கு புதுஉலகை காட்டி வருகிறார் மூகாம்பிகை ரத்னம் என்றால் அது மிகையல்ல!

இந்த புள்ளியில்தான் மக்கள் நீதி மய்ய தலைவர் கமலுக்கும் மூகாம்பிகை ரத்னத்திற்கும் புரிதல், மூகாம்பிகை மணியை கட்சியில் இணைக்கின்றது.

ஏனென்றால் புற்றுநோய் இல்லாத உலகு என்ற இலக்கோடு பல்லாண்டுகளாக கமல் போராடி வருவது நாடறிந்த சேதி!

இசையமைப்பாளர் மகேசின் புற்றுநோயினை துடைக்க கமல் பல்வேறு முயற்சிகளை செய்தார்.

அதே சமயம் நடிகை கௌதமியின் புற்றுநோயினை முற்றாக ஒழித்து சாதித்துக் காட்டினார்.

இப்படி கமலுக்கும் மூகாம்பிகை ரத்னத்திற்குமான அலைவரிசை ஒன்றாக, மக்கள் நீதி மய்யத்தில் மூகாம்பிகை ரத்னம் இணைந்தார். ஒரு பெண்மணி அதுவும் சமூகத்தின் அவலங்களுக்கு எதிராக போராடும் பெண்மணி… ரத்னம் நினைவு அறக்கட்டளை மூலமாக பல்வேறு உதவி செய்து வருபவர் என்பதை தெரிந்து கொண்ட கமலுமு 2019 நாடாளுமன்ற தேர்தலில் பொள்ளாச்சி தொகுதியில் வேட்பாளராக களம் இறக்கியுள்ளார்.

Skip to toolbar