மகிமாஶ்ரீ உலக கோப்பையில் கலந்து கொள்வதே எனது இலட்சியம்

உலக கோப்பையில் கலந்து கொள்வதே எனது இலட்சியம்
மகிமாஶ்ரீ பேட்டி
கோவை. பிப்ரவரி.27_
மூன்றாவது ஆசிய உலக ரோல்பால் சாம்பியன்ஷிப் போட்டி கர்நாடக மாநிலம் பெல்காம் நகரில் கடந்த பிப்ரவரி 21ம் தேதி முதல் 24ம் தேதி வரை நடைபெற்றது.
இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் ஆசிய கோப்பையை கைப்பற்றி தங்கம் வென்றனர்.
இதில் சவுதி, ஏமன், பங்களாதேஷ், இலங்கை, தாய்லாந்து உட்பட 17 நாடுகள் பங்கேற்றன.
இதில் கோவையைச் சேர்ந்த சுகுணா பிப்ஸ் பள்ளியில் பயிலும் ஒன்பதாம் வகுப்பு மாணவி மகிமா ஸ்ரீ இந்திய அணியில் பங்குபெற்றிருந்தார்.
தென்னிந்தியாவிலிருந்து பங்கு பெற்ற ஒரே மாணவி ஆகும். இவர் மூன்று தேசிய அளவிலான போட்டிகளிலும், இலங்கையில் நடந்த சர்வதேச நட்பு முறை போட்டியிலும் இந்திய அணி தலைவியாக பங்குபெற்று வெள்ளி பதக்கம் பெற்றுள்ளார். தமிழக அணி கடந்த வருடம் கோவாவில் நடைபெற்ற 16 வயதிற்கு உட்பட்ட போட்டியில் மகிமா ஸ்ரீ கேப்டனாக இருந்து வெண்கலம் பெற்று தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து பயிற்சியாளர் ராஜசேகர் மற்றும் ரோல் பால் அசோசியேசன் செகரட்டரி சுப்ரமணியன் ஆகியோர் சேர்ந்து செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது;
நாங்கள் மகிமா ஸ்ரீ-க்கு கடந்த நான்கு வருடங்களாக கடுமையான பயிற்சி அளித்தோம். ரோல் பால் விளையாட்டானது முதன்முதலாக இந்தியாவில் தோற்றுவிக்கப்பட்டதாகும். இந்த விளையாட்டானது கூடைப்பந்து, கைப்பந்து மற்றும் சறுக்கு விளையாட்டு கலந்த விளையாட்டாகும். இந்த விளையாட்டானது 50 நாடுகளில் விளையாடப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

AD

Skip to toolbar