டெமாஸெக் நிறுவனத்திடமிருந்து ரூ.270 கோடி நிதி முதலீட்டைப் பெறும் டாக்டர் அகர்வால்ஸ் குழும கண் மருத்துவமனை

டெமாஸெக் நிறுவனத்திடமிருந்து ரூ.270 கோடி நிதி முதலீட்டைப் பெறும் டாக்டர் அகர்வால்ஸ் குழும கண் மருத்துவமனைகள்

சென்னை, 13, பிப்ரவரி 2019: சிங்கப்பூரில் தலைமையகத்தைக் கொண்டிருக்கும் டெமாஸெக் என்ற உலகளாவிய முதலீட்டு நிறுவனத்திடமிருந்து ரூ.270 கோடி முதலீட்டை டாக்டர் அகர்வால்ஸ் ஹெல்த்கேர் லிமிடெட் (DAHCL) பெற்றிருக்கிறது. இந்த முதலீடானது, இந்த சர்வதேச கண் பராமரிப்பு சங்கிலித்தொடர் நிறுவனம் இந்தியா முழுவதிலும் தனது செயல்பாட்டை விரிவுபடுத்துவதற்காகவும் மற்றும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் பராமரிப்பு சேவைக்காக சமீபத்திய உயர் தொழில்நுட்பங்கள் மீது கணிசமான முதலீடுகளை செய்வதற்கும் பயன்படுத்தப்படும்.
டெமாஸெக் என்பது, ஆசியாவில் தலைமையகத்தையும் மற்றும் பரவலான செயல்பாடுகளையும் கொண்டுள்ள ஒரு உலகளாவிய முதலீட்டு நிறுவனமாகவும், 2018 மார்ச் 31 அன்று முடிவடைந்த நிதியாண்டில் இதன் மொத்த முதலீட்டுத் தொகையான 308 பில்லியன் சிங்கப்பூர் டாலர் என்பதில், ஏறக்குறைய 4 சதவீதத்தை இந்தியா பெற்றிருக்கிறது. மெடான்தா மெடிசிட்டி, மனிபால் ஹாஸ்பிட்டல்ஸ் மற்றும் ஹெல்த்கேர் குளோபல் ஆகியவை இந்தியாவில் சுகாதார பராமரிப்புத் துறையில் டெமாஸெக் செய்திருக்கும் முதலீடுகளுள் உள்ளடங்கும்.
“அகர்வால் குழுமமானது, ஒரு முதலீட்டாளராக டெமாஸெக் நிறுவனத்தை வரவேற்பதில் மகிழ்ச்சியும், உற்சாகமும் கொள்கிறது. இந்தியாவெங்கிலும் கட்டுபடியாகக்கூடிய கட்டணங்களில் தரமான கண் பராமரிப்பு சேவைக்காக வளர்ந்துவரும் மிகப்பெரும் தேவையை சிறப்பாக எதிர்கொள்ள கிளினிக்குகள் மற்றும் செயல்பாடுகள் அடங்கிய எமது வலையமைப்பை விரிவாக்கம் செய்ய எமது நிறுவனத்திற்கு டெமாஸெக்கின் நிபுணத்துவமும், ஆதரவும் உதவும் என்று நாங்கள் நம்புகிறோம்.” என்று டாக்டர் அகர்வால்ஸ் குழும கண் மருத்துவமனையின் தலைவர், புரொஃபஸர் (டாக்டர்) அமர் அகர்வால் (MS, FRCS, FRC Ophth), கூறினார்.
டாக்டர் அகர்வால்ஸ் குழும கண் மருத்துவமனையின் தலைமைச் செயல் அலுவலர் டாக்டர். அதில் அகர்வால் கூறியதாவது: “அடுத்த 3-5 ஆண்டுகள் காலஅளவில் எமது வலையமைப்பிற்குள் 50-75 மருத்துவமனைகளை புதிதாக இணைக்க நாங்கள் திட்டங்கள் வகுத்திருக்கிறோம். இவ்விரிவாக்க திட்டத்தின் கீழ், பெருநகரங்கள் மட்டுமல்லாது, இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்கள் மீதும் இது குறித்த எங்களது முக்கிய கூர்நோக்கம் இருக்கும். யுக்திவாய்ந்த கூட்டுவகிப்புகள், ஏற்கனவே இயங்கிவரும் மருத்துவமனைகளை கையகப்படுத்துதல் மற்றும் புதிய மருத்துவமனைகளை நிறுவுதல் ஆகிய ஒரு கலவையான செயல்பாட்டின் வழியாக விரிவாக்க பணி செயல்படுத்தப்படும். புத்தாக்கமும், தொழில்நுட்பமும் எமது வளர்ச்சி செயல்பாட்டின் முதன்மை அம்சங்களாக தொடர்ந்து இருக்கும். எமது மருத்துவ மையங்கள் அனைத்திலும் SMILE, ஃபெம்டோ லேசர்

மற்றும் ரோபாட்டிக் கண்புரை அறுவைசிகிச்சை போன்ற மிகநவீன தொழில்நுட்பத்தில் நாங்கள் அதிகமாக முதலீடு செய்வோம். மக்கள் வசிக்கும் அமைவிடங்களுக்கு அருகிலேயே கட்டுபடியாகக்கூடிய மிதமான கட்டணங்களில் உயர்தர கண்பராமரிப்பு சேவையை வழங்குவதே எங்களது நோக்கமாகும்,”
ஒட்டப்பட்ட IOL (சிக்கலான லென்ஸ் பிரச்சனைகள் உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க) PDEK (கருவிவிழி மாற்றுப் பதியத்திற்கான ஒரு மிக நவீன சிகிச்சையுக்தி), PhakoNIT (ஒரு மி.மீட்டருக்கும் குறைவான கீறல் வழியாக கண்புரையை அகற்றுதல்) போன்ற சிகிச்சைமுறைகளைக் கொண்டு கண் மருத்துவவியல் துறையில் புத்தாக்க செயல்பாட்டில் அகர்வால் குழுமம் தொடர்ந்து முன்னணியில் இருந்து வருகிறது சிங்கிள் பாஸ் ஃபோர் த்ரோ புபிலோபிளாஸ்டி (Pupilloplasty) செயல் உத்தி மற்றும் “பின் ஹோல் புபிலோபிளாஸ்டி” (PPP) போன்ற புதுமையான சிகிச்சை உத்தியானது, அகர்வால் குழுமம் கண்டறிந்த மிக சமீபத்திய சிகிச்சை கண்டுபிடிப்பாகும். குறுகிய கோண கண் அழுத்தநோயில் சிக்கலான நேர்வுகளுக்கு சிகிச்சையளிப்பதற்காகவும் மற்றும் கண்பாவை மறுகட்டமைப்பிற்கு உதவவும் இந்த அறுவைசிகிச்சை உத்தியானது பயன்படுத்தப்பட்டு வருகிறது. கல்வி மற்றும் பயிற்சியளிப்பு மீது அதிகளவில் கூர்நோக்கம் செலுத்திவரும் இக்குழுமம் நடத்துகின்ற பயிற்சியளிப்பு திட்டங்கள், உலகெங்கிலுமிருந்து எண்ணற்ற கண் மருத்துவ நிபுணர்களை பங்கேற்பிற்கு ஈர்க்கின்றன. இளம், வளர்ந்து வரும் அறுவைசிகிச்சை நிபுணர்களுக்கு பயிற்சியளிக்க ஒரு DNB (முதுகலை பட்டப்படிப்பு) திட்டத்தையும் மற்றும் கல்விசார் செயல்திட்டங்கள் பலவற்றையும் இது வழங்குகிறது”.
டாக்டர் அகர்வால்ஸ் – ன் வளர்ச்சி திட்டத்தின் ஒரு புதிய பார்ட்னராக டெமாஸெக் – ஐ ஏடிவி (ADV) வரவேற்கிறது; இந்தியாவின் கண் பராமரிப்பு சிகிச்சை சூழலமைப்பு இந்நிறுவனத்தின் தலைமைத்துவ நிலையை இம்முதலீடானது இன்னும் சிறப்பாக வலுப்படுத்தும்,” என்று ஏடிவி பார்ட்னர்ஸின் இணை நிறுவனரான திரு சுரேஷ் பிரபாலா கூறினார். 2016 ஆம் ஆண்டில் டாக்டர் அகர்வால்ஸ் ஹெல்த்கேர் லிமிடெடில் 270 கோடி ரூபாயை ஏடிவி பார்ட்னர்ஸ் முதலீடு செய்திருந்தது. அதைத் தொடர்ந்து, இந்நிறுவனத்தின் நிர்வாக குழு மற்றும் வளர்ச்சி வரலாற்றில் ஒரு முக்கிய அங்கமாக ஏடிவி பார்ட்னர்ஸ் இருந்து வருகிறது.
நடுத்தர சந்தை முதலீட்டுத் துறையில் ஒரு முன்னணி வங்கியான வேதா கார்ப்பரேட் அட்வைசர்ஸ், இந்த முதலீட்டு பரிவர்த்தணை மீது நிறுவனத்திற்கு ஆலோசனைகளை வழங்கியது. ஏடிவி பார்ட்னர்ஸிடமிருந்து முதலீடுகள் பெறப்பட்ட தருணத்திலும் வேதா நிறுவனத்தின் ஆலோசனைகள் பெறப்பட்டன.

Skip to toolbar