சதுப்பு நிலமானது இயற்கையான நீர் சார்ந்த நில அமைப்பு கொண்டதாகும்

பள்ளிக்கரணை சதுப்பு நிலம் 2002 ம் ஆண்டு சென்னை மாநகரத்தில் ஏற்பட்ட வெள்ளச் சேதங்களை அப்போதைதைய மாண்புமிகு முதலமைச்சர் அம்மா அவர்களால் வான் ஊர்தியில் வெள்ளச் சேதங்களை பார்வையிட்ட போது பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தினை நகர விரிவாக்கத்திலிருந்து காப்பாற்றுவதற்காக இதனை வன நிலமாக ஆக்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள அறிவுரை வழங்கியிருந்தார்கள்தற்பொழுது பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதி 694.88. 5 ஹெக்டர் பரப்பளவு வனத்துறை வசம் உள்ளது. இதனை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை வனத் துறை மேற்கொண்டு வருகிறது. சென்ளை மாநகரித்தல்.உள்ள ஈரநிலங்களில் எஞ்சியுள்ள ஒரே பகுதி பள்ளிக்கரணை சதுப்பு நிலமாகும். இந்திய அரசால் தேசிய ஈர நிலப் பாதுகாப்பு மற்றும் மேம்பாடு செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள அமைப்பு இந்திய ளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 94 ஈர நிலங்களில் பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதியும் ஒன்றாகும். பள்ளிக்கரணை சவப்பு நிலப் பகுதியானது நீர் ஆதாரத் கடன் கூடிய சுற்று சூழல் அமைப்பினை கொண்டதாகும். இதில் 421 வகையான உயிர் வாழ்வினங்கள் உள்ளன. இதில் 169 வகையான பறவைகளும், 10 வகையான பாலூட்டிகளும், 21 வகையான ஊர்வன வகை களம்.1 வகையான நீர் நில வாழ்வினங்களும், 50 வகையான மீன்களும், 9 வகையான மெல்லுடலிகளும், 5 வகையான ஒடுடன் கூடிய உயிரினங்களும், 14 வகையான வண்ணத்து பூச்சிகளும், 164 வகையான தாவரங்களும் உள்ளன. பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் பல்வேறு நில அமைப்புகள் கொண்டுள்ளன. நீர் நிறைந்த பகுதிகள், நிலத்திட்டுகளும் மேடுகளும், குறைந்தளவு நீர் கொண்டுள்ள சேற்று பகுதிகளும், நீர் தாவரங்களால் திட்டுகளும் மற்றும் கேரை மற்றும் புல் தரையுடன் உள்ள அமைப்புகளும் உள்ளன. பள்ளிக்கரணை சதுப்பு நிலமானது இயற்கையான நீர் சார்ந்த நில அமைப்பு கொண்டதாகும். இதற்கான நீர்வரத்து 32 ஏரிகளிலிருந்து சிடைக்கப் பெறுசிறது. பெரும் மழை காலங்களில் வெள்ள நீர் பள்ளிக்கரணை சகப்பு நிலத்தின் வழியாக சென்று ஒக்கியம்மடுவின் மூலம் வங்க கடலில் முட்டுக்காடு அருகே கடலில் கலக்கிறது. உலக ஈர நில விழா பிப்ரவரி 2ம் தேதி ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழா தொடர்ந்து 10வது வருடமாக பள்ளிக்கரணையில் நடந்து வருகிறது. இதனால் மக்களிடம் சதுப்பு நிலத்தின்ன பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. மாணவர்களிடையே சதுப்பு நிலம் / ஈர நிலம் ஆகியவை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டியும், பேச்சு போட்டியும் நடத்தப்பட்டு பரிசுகள் மாண்புமிகு வனத்துறை அமைச்சர் மூலமாக வழங்கப்பட்டது, 1997ம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 2ம் தேதி உலக ஈர நில தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது, “ஈர நிலங்கள் மற்றும் பருவ நிலை மாற்றம்” என்பது இவ்வருடத்தின் கருத்துரு ஆகும்.

Skip to toolbar