F45 எனும் நவீன உடற்பயிற்சி மையம் துவக்கம்

கோவையில் F45 எனும் நவீன உடற்பயிற்சி மையம் துவக்கம்
கோவை. பிப்ரவரி.2_
குறைந்த நேரத்தில் அதிக பலன்களைத் தரும் நவீன முறையிலான குளுகுளு வசதியுடன் கூடிய உடற்பயிற்சி மையம் கோவை ரேஸ்கோர்சில் துவங்கப்பட்டுள்ளது.
இங்கு 45 நிமிடங்களில் பல்வேறு விதமான உபகரணங்களை கையாளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது இதனை ஜிஎஸ்டி ஆணையத்தின் கோவை மையத்தின் துணை இயக்குனர் கோவிந்தராஜ் துவக்கி வைத்து பேசினார் இன்றைய காலகட்டத்தில் நேரத்தின் அருமை கருதி குறைந்த நேரத்தில் அதுவும் வெறும் 45 நிமிடங்களில் அனைத்துவித உடற்பயிற்சிகளையும் செய்யும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது இங்கு நடந்துகொண்டே உடற்பயிற்சி செய்வதற்கான உபகரணங்கள் தோள்பட்டை மார்பு பகுதிகளில் வலிமைப்படுத்த எளிய உபகரணங்கள் உட்பட பல்வேறு வெளிநாட்டு கழிவுகளை பெரிய அகன்ற திரையில் பார்த்துக் கொண்டே உடற்பயிற்சி செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது மேலும் இங்கு 18வயது முதல் 65 வயது இருக்கும் அனைவருக்கும் உடற் பயிற்சி அளிக்கப்படுகிறது.
BattleRope, Rowers, Medicine Ball, Cycling, Spine Bike, Kettle Bell, Swiss Ball ஆகியன கொண்டு பயிற்சி அளிக்கப்படுகிறது.
சிறப்பு அழைப்பாளராக கோவை கூடுதல் மாவட்ட நீதிபதி குணசேகரன், ஜி.எஸ்.டி துணை ஆணையர் கோவிந்தராஜ், டெபுடி கலெக்டர் மதுராந்தகி, கிருஷ்ணகுமார், பாலுசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.