cmc காலனி பகுதியில் சுமார் 3000 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு எந்தவித முன்னறிவிப்புமின்றி சுமார் 200 போலீசார் குவிப்பு.

கோவை உக்கடம் cmc காலனி பகுதியில் சுமார் 3000 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு எந்தவித முன்னறிவிப்புமின்றி சுமார் 200 போலீசார் குவிக்கப்பட்டு அதிரடியாக நெடுஞ்சாலை துறை மற்றும் குடிசை மாற்று வாரிய அதிகாரி இருவரும் நம்பர் போட துவங்கினர். ஏன் எதற்கு என்று கேட்பவர்களை தரக்குறைவாக பேசியதோடு இது புறம்போக்கு நிலம் போங்கன்னு சொன்னா கேட்டுத்தான் ஆகணும் என்று அதட்டியதோடு பகுதி மக்கள் மேற்கொண்டு கேட்கும் எவ்வித சந்தேகங்களுக்கும் பதில் அளிப்பதை வடுத்து எங்களை மிரட்டுவதையும் பயமுறுத்துவது மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்பட்டனர். அதிலும் இன்ஸ்பெக்டர் ஜோதி என்பவர் உங்க பகுதிக்கு வெளியே இருக்கிறவங்கள ஆதரவுக்கு கூப்பிடுவீங்களா இனி இந்த ஏரியால நீங்க எப்படி நிம்மதியாக வாழ்ந்துருவீங்கன்னு ஓப்பன் சேலஞ்ச் விட்டு சென்றார்.

எங்கள் சந்தேகங்களை தீர்த்த பிறகு நம்பர் போடுங்கள் என்று சொன்னபோது அவர்கள் அதை பொருட்படுத்தவில்லை. அதனால் நாங்கள் நம்பர் போட விடாமல் தடுத்து நின்றோம். அப்போது எங்களை தள்ளி விட்டு நம்பர் போட்டனர்.

மீண்டும் மீண்டும் இது புறம்போக்கு நிலம் என்று மாநகராட்சி உரிமை கோரி வருகிறது. இது முற்றிலும் அபத்தம். இது எங்களுடைய நிலம் என்பதற்கான சான்றுகளும் எங்களிடம் உள்ளது. ஆனால் இதையெல்லாம் புறந்தள்ளிவிட்டு மீண்டும் மீண்டும் எங்கள் வசிப்பிடத்தை புறம்போக்கு நிலம் என்று மாநகராட்சி உரிமை கூறுவது வருத்தத்திற்கும் கண்டனத்திற்குரியதாகும்.

காவல்துறையின் தடாலடியான நடவடிக்கைகளினால் தான் நாங்கள் சாலை மறியலில் ஈடுபட்டோம். ஆனால் அதற்கு அவர்கள் காரணம் அல்ல என்பதைப் போன்ற செய்திகள் வலம் வருகின்றன. இது உண்மை அல்ல. மேலும் காவல்துறை மக்களிடம் இதுபோன்று அத்து மீறி செயல்படுவது தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. இது கண்டிக்கத்தக்கது. இதை சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் சரிசெய்ய வேண்டும் என வலியுறுத்துகிறோம்

தவிர இது ஒரு சிவில் விஷயம். சட்டம் ஒழுங்கு விஷயமல்ல. அப்படி இருக்க மாநகராட்சிக்கும் குடிசை மாற்று வாரியத்திற்கும் குடியிருப்பு வாசிகளுக்கும் தான் இதில் பங்கு உண்டே தவிர காவல்துறைக்கு துளி சம்பந்தமும் இல்லை. ஆக காவல்துறை வழிந்து வந்து விஷயத்தில் தலையிடுவது முற்றிலும் சரியானது அல்ல. இது சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்துவதற்கான ஏற்பாடு என்ற சந்தேகமும் எங்களுக்கு உள்ளது. ஆக சம்பந்தப்பட்ட சமயம் தவிர மற்ற நேரங்களில் காவல்துறை இதில் தலையிட கூடாது என்பதையும் அவர்கள் உணர வேண்டும்

இது பள்ளி ஆண்டு பருவத்தேர்வு நடைபெறவிருக்கும் காலமாதலால் தற்போது இது போன்ற நடவடிக்கைகள் அத்தகைய தேர்வுகளை பாதிக்கும் அபாயம் உள்ளதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கின்றோம்.