கோவில் நிர்வாகத்தை கண்டித்து மாபெரும் முற்றுகை போராட்டம்

கோவில் நிர்வாகத்தை கண்டித்து மாபெரும் முற்றுகை போராட்டம்
கோவை. பிப்ரவரி.2_
கோவை காரமடை அரங்கநாதர் கோவில் முன்பு இந்து முன்னணியை சேர்ந்தவர்களும், கோவில் அருகில் உள்ள நடைபாதை வியாபாரிகளும் மாபெரும் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

கோவை காரமடை அரங்கநாதர் திருக்கோவிலுக்கு தானமாக வழங்கும் பசுமாடுகளை அடிமாட்டு விலைக்கு விற்கும் செயலாளர் மருதுபாண்டியன், கணக்கன் மகேந்திரன் ஆகியோரை பணி நீக்கம் செய்ய கோரியும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு இந்து முன்னணி மாவட்ட தலைவர் கே.டி.சிவப்புகலழ் தலைமை தாங்கினார்.
நகர தலைவர் குமார் முன்னிலை வகித்தார் கிழக்கு ஒன்றிய தலைவர் ரவி பாரதி மேற்கு ஒன்றிய தலைவர் மந்திரி பிஜேபி நகரத்தலைவர் விக்னேஷ் தாளிக்க ராசிபலன் மகாஜன சங்கத் தலைவர் கே பி வி கோவிந்தன் தசை பலன்கள் இளைஞரணி தலைவர் கே ஆர் கே ராஜேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காரமடை கோவில் அருகில் உள்ள நடைபாதை வியாபாரிகள் சங்கத் தலைவி சதி அனுசுயா தனலட்சுமி துளசியம்மாள் ராணி உட்பட பன்னிரெண்டு கடைகளை சேர்ந்தவர்கள் ஆதரவு தந்தனர்.
இந்து முன்னணி தலைவர் சிவ புகழ் பேசும் போது அரங்கநாதசுவாமி கோவில் திருப்பணிகளை உபயதாரர்கள் கொண்டு மேற்கொள்ள அனுமதி வழங்கும் நஞ்சுண்டேஸ்வரர் மற்றும் மாகாளியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம் நடத்துவோம் அரங்கநாதர் சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகத்தின் போது நடைபெற்ற முறைகேடுகளை விசாரிக்க வேண்டும் என்றும் திருடப்பட்ட கல்தூண்கள் யானை சிலைகள் ஆகியவற்றை ஐ.ஜி பொன்மாணிக்கவேல் விசாரித்து மீட்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கின்றோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
முடிவில் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

Skip to toolbar